13 நவ., 2010

மர்பி விதிகள் 501-525


501. உங்களுக்கு எந்த பல்பு எட்டாத இடத்தில் இருக்கிறதோ அது தான் முதலில் பழுதாகும். 

502. இரண்டு தகுதியில்லாதவர்களைப் பணிக்கமர்த்துவதால் தகுதியானவர்களாகி விட மாட்டார்கள். 

503. இரண்டு தகுதியானவர்களைப் பணிக்கமர்த்தினால் இருவரும் தகுதியில்லாதவர்களாகி விடுவார்கள். 

504. ஒரு பழைய கட்டிடத்தைத் திருத்தியமக்க அதைப் புதிதாகக் கட்ட ஆகும் செலவைப் போல் இரு மடங்கும், காலத்தைப் போல் மூன்று மடங்கும் ஆகும். 

505. திருத்தியமைக்கும் கட்டிடத்தில் இருந்து மறு உபயோகம் செய்து கொள்ளலாம் என நீங்கள் எந்த விலையுயர்ந்த பொருளை நினைத்து வாங்காமல் இருந்தீர்களோ அது ஏற்கனவே கெட்டுப் போயிருக்கும். 

506. கட்டமைப்பில் முக்கியமான கட்டத்தைத் தாண்டியவுடன் அதை மாற்றலாம் என்ற யோசனையே வரும். 

507. உற்பத்தியாளரின் உத்திரவாதத்தை 0.5 ஆல் பெருக்கினால் அந்தப் பொருளின் உண்மையான செயல்பாட்டின் அளவு தெரியவரும். 

508. பயிற்சியின் போது கனகச்சிதமாக செயல்படும் ஒருவரைக் களத்தில் இறக்கினால் தான் தெரியும் வேடிக்கை! 

509. யாரிடம் ஒரு அழைப்புக்கு (கால்) மட்டும் பணமிருக்கிறதோ அவருக்கு தான் தவறான அழைப்பாக (ராங் கால்) செல்லும். 

510. நீங்கள் வேகமாகச் செல்கின்றீர்கள் என்றால் மேலிருந்து கீழாக இறங்குகிறீர்கள் என்று தானே அர்த்தம்? 

511. புகை பிடிக்கும் குழல் மேதைகளுக்கு யோசிக்கும் காலத்தையும், முட்டாள்களுக்கு ஏதோ குச்சியை வைத்திருக்கவும் உதவுகிறது. 

512. ஒரு இரயில் தாமதமாகச் செல்லும் நேரமும் நேரத்துக்குச் செல்ல வேண்டிய ஆட்களின் எண்ணிக்கையும் நேர் விகிதத்தில் இருக்கும். 

513. கருத்துக் கணிப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் அதைக் கையில் எடுத்துக் கொண்டு புகழுங்கள். 

514. கருத்துக் கணிப்பு உங்களுக்கு அடியோடு சாதகமாக வரவில்லையெனில் (1) அதைப் புறந் தள்ளுங்கள் (2) மக்களின் அடிக்கடி மனம் மாறும் தன்மையின் கடந்தகால வரலாற்றை அவிழ்த்து விடுங்கள். 

515. கருத்துக் கணிப்பு உங்களுக்கு சிறிது ஏமாற்றம் மட்டுமே அளித்தால் மக்களின் பரிதாப ஓட்டைப் பெற ஏதேனும் வழி இருக்கிறதா எனப் பாருங்கள். 

516. கருத்துக் கணிப்பு உங்களுக்கு அமோக ஆதரவைத் தருமாயின் உங்கள் கட்சிக்காரர்களிடம் இல்லாத ஒற்றுமையை இருப்பதாக மக்க்ள் நினைப்பதை நினைத்துப் பெருமை கொள்ளுங்கள். 

517. எந்த ஒரு பொருளையும் முழுமையாக உபயோகித்தால் அது உடைந்து விடும். 

518. எந்த ஒரு பொருளையும் முழுமையாக உபயோகிக்கவில்லையெனில் அது பழுதுபடும். 

519. யாரிடமும் நீங்கள் எதைச் செய்யப்போவதில்லை என்பதை மட்டும் சொல்லிவிடாதீர்கள். 

520. உலகத்திலேயே மக்களை ஈர்க்கும் சக்தியுடைய இரண்டாவது வசனம், "இதைப் பாருங்கள்!". முதலாவது, "அட! இதைப் பாருங்கள்!". 

521. மின் விசிறியில் படும் எதுவும் சரி சமமாக விநியோகிக்கப்படுவதில்லை. 

522. ஒரு பழமொழியானது எதைச் சொல்கிறதோ அதை அப்படியே மாற்றிச் சொல்லும் பழமொழியும் இருக்கத் தான் செய்யும். 

523. ஒரு கூட்டத்தில் அறிவாளிகள் சீக்கிரம் தமது பேச்சை முடித்துக் கொள்வார்கள். 

524. எது சரியாக ஆரம்பிக்கப்படுகிறதோ அது தவறாக முடியும். எது தவறாக ஆரம்பிக்கப்படுகிறதோ அது மோசமாக முடியும். 

525. உங்களுக்கு ஒரு விஷயம் சுகமளிப்பதாகத் தெரிந்தால் அதைச் செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள்! (LIVEஐ மாற்றிப் போட்டால் EVIL!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons