13 நவ., 2010

மர்பி விதிகள் 526-550


526. தொழில்நுட்பம் என்பது இருவரால் மட்டுமே கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. (1) நிர்வாகம் செய்பவர் - புரிந்து கொள்ளாதவர் (2) புரிந்து கொண்டவர் - நிர்வாகம் செய்யத் தெரியாதவர். 

527. ஒரு கட்சிக்காரர் தேர்தல் நேரத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டு பார்க்கும் வேலைக்கும், அந்த வெற்றியால் அவருக்குக் கிடைக்கும் தனிப்பட்ட வருமானமும் நேர் விகிதத்திலேயே இருக்கும். 

528. அடுத்தவருக்கு நீங்கள் அவசரமாக இருப்பதாகத் தெரிந்தால் அந்த வேலை நடக்காது. 

529. சும்மா இருக்கும் ஒரு விஷயத்தைத் தேவையில்லாமல் சீண்டாதீர்கள். 

530. கண்டிப்பாக ஒரு முடிவை எடுத்தாக வேண்டியிருந்தால் அதைத் தள்ளிப் போடுங்கள். 

531. இன்னொருவரை உங்களால் நியமிக்க முடிந்தால் முடிவெடுக்கும் பொறுப்பை அவரிடம் விடுங்கள். 

532. ஒரு கமிட்டியை நியமிக்க முடிந்தால் முடிவெடுப்பதை அதனிடம் விட்டு விடுங்கள். 

533. செய்தியாளர்களிடம் பேசுகையில் கீழ்க்கண்ட மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள் 
(1) எனக்குத் தெரியும். அதைச் சொல்லப் போகிறேன். 
(2) எனக்குத் தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன். 
(3) எனக்குத் தெரியாது. 

534. முன்னேற்றம் கீழிருந்து தான் வரும். 

535. நீங்கள் தொலைக்காட்சித் தொடரை ஒரு நாள் பார்த்திருந்து மீண்டும் மற்றொரு நாள் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தால் அது மறு ஒளிபரப்பாகவே இருக்கும். 

536. ஒரு இடத்தில் உங்கள் அருகில் உட்கார்ந்து ஒருவர் பேசும் சத்தமும் அந்தப் பேச்சில் இருக்கும் நல்ல விஷயங்களும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

537. மறைக்கப்படும் தவறுகள் எப்போதும் மறைக்கப்பட்டே இருப்பதில்லை. 

538. உங்களிடம் ஒரு பொருள் வெகு நாட்கள் இருந்தால் அது தூக்கி எறியப்பட வேண்டியதாகவே இருக்கும். 

539. அப்படி நீங்கள் தூக்கி எறிந்த நேரத்தில் இருந்து அதன் தேவை ஆரம்பிக்கும்! 

540. 'போதும்' எப்போதுமே போதுமில்லை. 

541. பிறந்த நாள் விழாக்கள் பெரும்பாலும் கண்ணீரிலேயே முடிவுறும். 

542. நீங்கள் அயர்ந்து போய் எப்போது வீட்டுக்குப் போனாலும் அங்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் குழந்தைகளுக்குள் சண்டை போட்டுக் கொண்டு அழுது கொண்டிருப்பார்கள். 

543. ஒரு நிர்வாகத்தில் மேலாளர் பணியாளரைக் கட்டுப்படுத்துவதை விட பணியாளர் மேலாளரைக் கட்டுப்படுத்துவதே அதிகம் நடைபெறும். 

544. ஒரு ஆலோசகரிடம் போய் நேரம் என்ன என்று நீங்கள் கேட்டால் உங்கள் கடிகாரத்தைப் பார்த்தே பதில் சொல்வார்! 

545. தொலைந்த பொருளைக் கண்டுபிடிக்க எளிதான வழி அதற்கு மாற்றை வாங்குவதாகும். 

546. மிக விலை உயர்ந்த உடையக் கூடிய பொருள் மட்டுமே உங்கள் கைகளில் இருந்து தவறி விழும். 

547. செருப்பில்லாத கால்களுக்கு ஊசியாக இருக்கும் இரும்புப் பொருட்களை ஈர்க்கும் காந்தத் தன்மை உண்டு. அதுவும் துருப்பிடித்திருக்க வேண்டும். இருட்டாகவும் இருக்க வேண்டும். 

548. அவசரகதியில் எடுக்கவேண்டியிருக்கும் முடிவுக்காக சில தீர்வுகளை முன்வைத்தால் பெரும்பாலான மக்கள் மோசமானதையே தேர்ந்தெடுப்பர். உதாரணம் - தேர்தல். 

549. மக்களில் நான்கு வகை உண்டு (1) பேசாதவர்கள், செய்யாதவர்கள் (2) பேசாதவர்கள் செய்பவர்கள் (3) செய்பவர்கள் (4) செய்வதைப் பற்றி பேசுபவர்கள். 

550. உங்களின் யூகங்கள் வரிசையாக மூன்று முறை நடைபெற்றுவிட்டால் நீங்களும் மேதை தான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons