13 நவ., 2010

மர்பி விதிகள் 626-650


626. நீங்கள் நல்லது சொன்னால் நடக்கவும் செய்யலாம், நடக்காமலும் போகலாம். கெட்டது சொன்னால் கண்டிப்பாக நடந்தே தீரும். 

627. எந்த ஒரு நிர்வாகத்திலும் வேலை கீழ்மட்டத்தை நோக்கியே செல்லும். 

628. நீங்கள் விரும்பும் எல்லாப் பொருட்களும் உங்கள் வசம் ஏற்கனவே இருந்தால் வாழ்வில் எப்படி சுவாரசியம் இருக்கும்? 

629. எந்த ஒரு மாபெரும் திட்டமும், திட்டத்துக்கு ஆகும் காலத்திலும் பணத்திலும் இரண்டு மடங்கு எடுப்பதோடு நின்று விடாது. அதில் கிடைக்கும் பலன் பாதி தான் இருக்கும். 

630. ஒரு பொருள் அடிக்கடி உடைய வேண்டுமானால் அது கிடைக்காத பொருளாக இருக்கவேண்டும். 

631. தற்போதுள்ள காகிதமில்லா அலுவலக யுகத்தில் அதிகம் சம்பாதிப்பவர்கள் கணிணிக்குரிய அச்சுத் தாள்கள் விற்பவர்களே. 

632. ஒரு மனிதனுக்கு எது மோசமோ அதுவே மற்றொருவனுக்கு அம்சம். 

633. 12 கோமாளிகளுக்கு நடுவில் இருந்து நீங்கள் இராமாயணம் வாசித்தாலும் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு நீங்கள் 13வது கோமாளி தான். 

634. நல்ல மனிதர்களுடன் பழகினால் அவர்கள் நல்ல பழக்கங்கள் உங்களுக்கு வரும். ஆனால் பணக்காரர்களுடன் பழகினால் உங்கள் பணம் தான் அவர்களுக்கு செல்லும். 

635. நீங்கள் ஏற்கனவே ஒரு துளைக்குள் இருந்தால், தோண்டுவதால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. 

636. யானைக்கு ஞாபக சக்தி அதிகம் தான். ஆனால் அப்படி எதை அது ஞாபகம் வைத்துக் கொள்ளப் போகிறது? 

637. அலை வரும். அலை போகும். உங்களுக்கு அதனால் என்ன கிடைக்கிறது? 

638. ஒரு ஊர்வலத்தில் மேளம் இருக்கலாம் அல்லது குதிரை இருக்கலாம். இரண்டும் இருக்கக் கூடாது. 

639. ஒரு வேலைக்கு ஆகும் நேரத்தைக் கணிக்க கீழ்க்கண்ட சூத்திரத்தைப் பயன்படுத்தலாம். வேலை செய்யும் நேரம் X 2. வரும் விடைக்கு உள்ள அளவையின் அடுத்த அதிக அளவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் 1 மணி நேரத்தில் செய்யும் வேலையை 2 நாட்களில் செய்யலாம் என்னும் விடை வரும். 

640. மக்களை ஒரு விசயத்தை நம்ப வைக்க வேண்டுமானால் அதை கிசுகிசுப்பாக சொன்னால் போதும். 

641. ஒரு கெட்ட செய்தியை எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாகவும் விளக்கமாகவும் சொல்கிறோமோ அவ்வளவு நல்லது. 

642. இதயத்தைத் தளரவிடாதீர்கள். அதை வெட்டுவதற்கு ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். 

643. முக்கியமான ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் கூர்மையாக ஆராய்ச்சி செய்வார்கள் தாங்கள் எதை ஆராய்ச்சி செய்கிறோம் என்பது கூட தெரியாத அளவுக்கு. 

644. ஒரு பெரிய ஆராய்ச்சியை நிர்வாகம் செய்யும் நடத்துநருக்கு அந்த ஆராய்ச்சி பற்றிய சின்ன சின்ன விஷயங்கள் தெரிந்திருக்கக் கூடாது. 

645. அரசாங்கத்தின் வருமானத்திற்கேற்ப செலவும் உயரும். அதை விடச் சிறிது அதிகமாகவும். 

646. ஒரு அரசாங்கத்தைப் பற்றி அறிய அதன் அரசியல் சாசனத்தைப் படித்தால் ஆகாது. தலைநகரத்தின் தொலைபேசி எண்களின் பட்டியலில் "தேசிய" என்று ஆரம்பிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் போதும். 

647. லாட்டரிச் சீட்டு வாங்காமலே அதிர்ஷ்டம் வராது. 

648. பொதுமக்கள் என்போர் யாரெனின் செய்தித் தாள்களில் பெயர் வராதவர்கள் ஆவர். 

649. வேறு ஏதாவதைப் பிடிக்கும் வரை இருக்கும் பிடியை விட்டுவிடக் கூடாது. 

650. எந்த ஒரு முடிவும் நால்வருக்குள் மட்டுமே எடுக்கப்படும். நீங்கள் ஒரு மாபெரும் கூட்டத்தில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டதாக நினைத்தால் அதுவும் கூட்டம் தொடங்குவதற்கு முன்னமே நால்வருக்குள் எடுக்கப்பட்ட முடிவாகத்தான் இருக்கும்; அல்லது கூட்டம் முடிந்த பின் நால்வருக்குள் கூடிப் பேசி தீர்மானம் மாற்றப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons