13 நவ., 2010

மர்பி விதிகள் 651-675


651. சரித்திரத்தை அறியாதவர்கள் அதில் உள்ள தவறுகளைத் திரும்பச் செய்வார்கள். அறிந்தவர்களோ, புது விதமான தவறுகளைச் செய்து அதை சரித்திரமாக்குவார்கள். 

652. உடனடியாக செய்யக் கூடிய வேலை எதுவுமே சின்ன வேலை தான். அதைச் செய்யாமல் விட்டால் தான் அது பெரிய வேலையாக மாறும். 

653. நீங்கள் தற்போது நிற்கும் இடம் தான் தொடங்குவதற்கு தோதான இடம் ஆகும். 

654. உங்களால் அவர்களை அடிக்க முடியாவிட்டால் அவர்களுடன் சேர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். 

655. ஆண்கள் செய்யும் ஒரு வேலையில் பாதியைத் தான் பெண்களால் இரண்டு மடங்கு கஷ்டப்பட்டு செய்ய இயலும். ஆனால் அது பெண்களால் எளிதில் முடியும் என்பது தான் பிரச்னையே! 

656. ஒரு திட்டம் தீட்டப் படும் போது எவ்வளவு மோசமாக தீட்டப் படுகிறதோ அவ்வளவு எளிதாக அதை நிறைவேற்ற இயலும். 

657. முடியக் கூடிய எதுவுமே நல்லது தான். 

658. நீங்கள் சேமித்த ஒரு பைசா ஒரு பைசா தான். 

659. எதையுமே முடிக்காமல் விடாதீர்க 

660. நாளை மறுநாள் வரை தள்ளிப்போடக் கூடிய வேலையை நாளைக்கே செய்யாதீர்கள். 

661. இப்போதே தள்ளிப் போடுங்கள்! நாளை என்பது மிகவும் தாமதமாகி விடும். 

662. இப்போது தான் வேலையைப் பிறகு செய்யலாம் என முடிவு செய்யும் காலமாகும். 

663. உங்களால் முதல் முயற்சியிலேயே முடியவில்லை என்றால் எதற்கு மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்? 

664. ஒரு விதி அதன் விளக்கத்தை விட எளிதில் புரியக் கூடியதாக இருக்கும். 

665. எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு வேலையை நீங்கள் செய்தாலும், நிர்வாகத்தின் பார்வைக்கு இன்னும் கொஞ்சம் நீங்கள் கஷ்டப்பட்டிருக்கலாம் என்றே தோன்றும். 

666. நீங்கள் செய்யாமல் விட்ட அந்த வேலை மட்டுமே மிக முக்கியமானது. 

667. எந்த ஒரு சோதனையையுமே வெற்றிகரமாக மீண்டுமொரு முறை நிகழ்த்த இயலாது. 

668. ஒரு பொருளை அதை விடச் சிறிய இடத்திற்குள் உங்களால் செலுத்த முடியவில்லையென்றாலும் ஒரு மேதாவி அதையும் செய்து விடுவான்! 

669. பச்சையாக இருந்து ஆட முடியுமென்றால் - தாவர இயல், சுருங்க முடியுமென்றால் - வேதியியல், வேலை பார்க்க வில்லை என்றால் - இயற்பியல்! 

670. அனைத்து கண்டுபிடிப்புகளுமே தவறுதலாக கண்டுபிடித்தவைகளாகவே இருக்கும். 

671. ஆராய்ச்சிக்கான பணம் உங்களுக்கு எவ்வளவு வழங்கப்பட்டிருக்கிறதோ அவ்வளவுக்கு மேற்படி தவறு நடைபெறாது! 

672. வேலை நடக்கிறதோ இல்லையோ, நிர்வாகச் செலவு மட்டும் உயர்ந்து கொண்டே செல்லும். 

673. ஒரு வேலையை நீங்கள் சரியாக செய்து கொண்டிருந்தால் அது யார் கண்களிலும் படாது. 

674. வேலைக்குத் தகுதியான ஆட்கள் எப்போதுமே இறந்த காலத்தில் தான் இருந்திருப்பார்கள். 

675. ஒரு கூட்டத்தின் வெற்றிக்கும் அங்கு போடப்பட்ட விருந்திற்கும் நேரடி தொடர்புண்டு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons