701. கூரையில் ஓட்டை இருக்கிறது என்று கீழே பாத்திரம் வைத்தால் ஒரு சொட்டு கூட அதில் ஒழுகாது.
702. உண்மையை நான் கண்டறிந்து கொண்டேன். ஆனால் அது யாருக்கும் பிடிக்காது.
703. ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இயந்திரத்தைக் கழட்டி மீண்டும் மாட்டினால், ஒரே ஒரு பாகம் மட்டும் எதிலும் மாட்ட முடியாமல் மீதி இருக்கும். இயந்திரமும் ஓடாது.
704. காதல் என்பது அறிவுக்கும் கற்பனைக்கும் நடைபெற்ற பந்தயத்தில் கற்பனை வெற்றி பெற்றவுடன் வருவதாகும்.
705. எந்த ஒரு இயந்திரத்திற்கும் நீங்கள் அவசரமாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்!
706. எந்த ஒரு சிறிய பிரச்னைக்குள்ளும் ஒரு பெரிய பிரச்னை வெளியே வரத் துடித்துக் கொண்டிருக்கும்.
707. எந்த ஒரு பெண்ணும் தான் அடையப் போகும் ஆணைப் பற்றியே நினைப்பாள். ஆணோ, தன்னால் அடைய முடியாதவளைப் பற்றி.
708. நீங்கள் சேகரிக்கும் தகவல் உங்கள் ஆராய்ச்சிக்கும், எண்ணத்திற்கும் புறம்பாக இருந்தால் அது நிராகரிக்கப்படவேண்டியதாகும்.
709. நீதி எப்போதும் நிலைக்கும். 3/7 சமயங்களில்.
710. ஒரு மென்பொருள் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், கண்டுபிடிக்க முடியாத தவறுகள் இருக்கிறது என்று அர்த்தம்.
711. ஒரு மென்பொருள் சரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு அடுத்த பதிப்பு வெளிவந்து விட்டது என்று அர்த்தம்.
712. எந்த ஒரு வன்பொருள் தயாரிப்பாளர் தனது உத்திரவாதத்தில் எர்த் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரோ, அந்த வன்பொருள் இரண்டு வயர்களை மட்டுமே கொண்டிருக்கும்.
713. வியாபாரத்தின் மூன்று மறக்கக் கூடாத விதிகள் (1) உங்களால் ஜெயிக்க முடியாது. (2) உங்களால் நஷ்டத்தைத் தவிர்க்க இயலாது. (3) உங்களால் வெளியேறவும் முடியாது.
714. பின் விளைவு இல்லாத மருந்தே கிடையாது.
715. எது தேவையில்லையோ அது தாராளமாகவே கிடைக்கும்.
716. வரைபடத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை கட்டிடம் கட்ட தொடங்கிய பின்னரே ஏற்படும்.
717. தயங்கித் தயங்கி ஒரு காதல் கடிதத்தைத் தபாலில் அனுப்பினால், அது தாமதமாகி, நீங்கள் நேரடியாகக் கேட்டு அவமானப்பட்ட பின்னரே காதலியிடம் கிடைக்கும்.
718. எந்த ஒரு இயந்திரத்தையும் குடைந்து கொண்டே இருந்தால் ஓட ஆரம்பித்து விடும்.
719. எந்த ஒரு இயந்திரத்தையும் குடைந்து கொண்டே இருந்தால் அது உடைந்தும் விடும்.
720. கஷ்டப்படும் ஒருவனுக்கு உதவி செய்யுங்கள். அப்போது தான் அவன் மீண்டும் கஷ்டம் வரும் போது உங்களைத் தேடி வருவான்.
721. தட்டச்சு இயந்திரத்தில் ஒரே நேரத்தில் தவறி இரண்டு பொத்தான்களை அழுத்தினால், எந்த எழுத்து உங்களுக்குத் தேவையில்லையோ அது தான் விழும்/
722. அந்த தவறான எழுத்தினால் மொத்த வார்த்தையின் பொருளே மாறி விடும்.
723. ஒரு தடிமனான மனிதர் ஒல்லியான மனிதரை விட அதிகமான சோப்பை உபயோகிப்பார்.
724. முட்டாள்கள் எப்போதுமே முந்திரிக் கொட்டைகளாக இருப்பார்கள். மற்ற முட்டாள்கள் இருந்த இடத்தைச் சென்றடைவதற்கு.
725. ஒரு பிரச்னையைக் கூர்ந்து கவனித்தால், அந்தப் பிரச்னையில் நீங்களும் ஒரு அங்கம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

Posted in: COMEDY
0 கருத்துகள்:
கருத்துரையிடுக