13 நவ., 2010

மர்பி விதிகள் 751-775


751. வண்டி வெகு வேகமாகப் போகும் போது வேகத்தடையைப் பற்றி கவலை கொள்ள வேண்டியது இல்லை. 

752. உங்களுக்கு முன்னால் செல்லும் வண்டி எப்போதும் உங்களை விட மெதுவாகவே செல்லும். 

753. நீங்கள் செல்லும் இந்தப் பாதை 500 அடியுடன் முடிவடைந்து விடும். 

754. அந்த அறையில் அணையப் போகும் ஒரே ஒரு விளக்கு மட்டுமே இருக்கும். 

755. உங்களுக்கென ஒரு வேலை ஒதுக்கப்பட்டு அதை நீங்கள் செய்யாமல் விட்டால் உங்களுக்காக அதை யாரேனும் செய்து கொடுப்பார்கள். எனவே கவலை வேண்டாம். 

756. முடிவெடுக்கும் தருணத்தில் கையிலிருக்கும் தகவல்களும், முடிவின் முக்கியத்துவமும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

757. எந்த ஒரு விசயமும் குழம்பிக் கொள்ளாமல் இருக்கும் அளவுக்கு எளிதானது அல்ல. 

758. எதுவும் வேலை செய்யாது. 

759. நல்லவேளை மகிழ்ச்சியை பணத்தால் வாங்க முடியவில்லை. இல்லாவிட்டால் இதற்கும் டிவியில் விளம்பரம் வந்திருக்கும். 

760. பல்வலி சனிக்கிழமை இரவில் தான் வரும். ஞாயிறு இரவில் மறைந்து விடும். 

761. மொத்த வேலைக்காரர்களில் 10ல் ஒரு பங்கு ஆட்களே மூன்றில் ஒரு பங்கு வேலையைச் செய்வார்கள். அதற்காக ஆட்களை நீங்கள் அதிகரித்தால் சராசரி வேலைநேரம் அதிகமாகுமே தவிர வேலை அதிகமாக நடந்து விடாது. 

762. எது அதிக நபர்களுக்கு அசௌகரியத்தை அளிக்கிறதோ அது கண்டிப்பாக நடந்தே தீரும். 

763. செலவு = வரவு + 1% 

764. உற்பத்தி குறைவதால் நிரந்தரச் செலவுகள் குறைவதில்லை. ஆனால் உற்பத்தி அதிகரித்தால் நிரந்தரச் செலவும் அதே அளவு அதிகரிக்கும். 

765. யார் அதிகம் உற்பத்தி செய்கிறார்களோ அவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும். 

766. நீங்கள் கட்டியிருக்கும் டை புதிதாக இருந்தால் அது சூப் கோப்பையை தன் பக்கம் ஈர்க்கும். 

767. விதி விலக்குகள் விதிகளை விட அதிகமாகவே இருக்கும். 

768. அனுபவம் என்னும் ஆசிரியர் பரீட்சை வைத்த பின்னரே பாடம் சொல்லிக் கொடுப்பார். 

769. யார் தயங்குகிறாரோ அது நேர்மையான காரணத்துக்காகத் தான் இருக்கும். 

770. எந்த உடை அனைவருக்கும் பொருந்தும் என்று எழுதப்பட்டிருக்கிறதோ அது யாருக்குமே பொருந்தாது. 

771. எது ரகசியமாக வைக்கப்பட வேண்டியிருக்குமோ அது ஜெராக்ஸ் இயந்திரத்திலேயே இருக்கும். 

772. வாழ்க்கையை பின்னோக்கியே புரிந்து கொள்ள முடியும். ஆனால், நீங்கள் முன்னோக்கியே வாழ வேண்டியிருக்கிறது. 

773. நீங்கள் தவறு செய்யும் வரை யாருமே உங்களைக் கவனிப்பது இல்லை. 

774. ஒரு குழந்தை போதுமானதில்லை. இரண்டு குழந்தைகளோ தேவைக்கும் மிக அதிகம். 

775. தரச்சான்றிதழ் தரத்திற்கு சான்று தருவதில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons