13 நவ., 2010

மர்பி விதிகள் 776-800


776. வெற்றி தனிமையிலும், தோல்வி பலர் முன்னிலையிலும் தான் கிடைக்கும். 

777. எந்தப் பை அறுந்து போகிறதோ, அதில் தான் முட்டை இருக்கும். 

778. ஒருவரை வேலைக்கமர்த்திய பின்னரே தகுதியான நபரின் விண்ணப்பம் கைக்கு கிடைக்கும். 

779. கைக்கு எட்டாத இடத்தில் தான் அரிப்பு அதிகம் எடுக்கும். 

780. வீட்டுச் சாவியை வெளியிலிருந்து பைக்குள் தேடும் போது தான் தொலைபேசி அழைக்கும். 

781. வீட்டுக்குள் நுழைந்து தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்தால் எதிர் முனை டொக் என வைக்கும் ஓசை தெளிவாகக் கேட்கும். 

782. இந்தத் தவறு ஒரு தொடக்கம் தான். 

783. நம் கணக்கில் பணம் நிறைய இருந்தால் நாம் வெளியூர்க்காரருக்குக் கொடுத்த காசோலை வந்து நமது கணக்கில் பற்று வைக்க வாரக் கணக்கில் ஆகும். 

784. நம் கணக்கில் பணம் இல்லை என்றால், நாம் வெளியூர்க்காரருக்குக் கொடுத்த காசோலை ஒரே நாளில் வசூலுக்கு வந்து நிற்கும். 

785. சில்லறைக் காசுகள் கிழே விழும் போது 50 பைசா கண்ணுக்குத் தெரியும் இடத்திலும், 5 ரூ. காசு கண்ணுக்குத் தெரியாத இடத்திலும் தான் விழும். 

786. உங்களால் வாங்க முடிந்ததை நீங்கள் விரும்பவே மாட்டீர்கள். 

787. கணிணியில் சேமிக்காமலேயே ஒரு வேலையை அதிக நேரம் பார்த்திருந்தீர்களேயானால் அதுவே கணிணி இயங்காமல் நிற்பதற்கான நேரமாகும். 

788. தீர்ப்பு அனுபவத்தால் வருவது. அனுபவம் தப்பான தீர்ப்புகளினால் வரும். 

789. எந்தப் பொருளிலும் கழிவு 90% இருக்கும். 

790. குழந்தை அசிங்கமான இடத்தில் மலம் கழிப்பதில்லை. 

791. உங்களுக்கு அதிகம் பிடித்த சமையல் குறிப்பில் பொருட்களின் அளவுகள் இருக்கும் இடம் மட்டும் கிழிந்து போயிருக்கும். 

792. ஒரு பதார்த்தம் செய்யும் போது கெட்டு விட்டால் அதனுடன் எதைச் சேர்த்தும் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியாது. 

793. நீங்கள் கஷ்டப்படாமல் பார்த்த வேலைக்குப் பாராட்டு மழை இருக்கும். 

794. கஷ்டப்பட்டு ஒரு வேலை பார்த்திருந்தீர்களேயானால் அதற்கு எந்த ஒரு அங்கீகாரம் இல்லாமலிருப்பதுடன் வசவுகளும் கிடைக்கும். 

795. எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியதாகத் தான் இருக்கும். 

796. நீங்கள் எதைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களோ அதைக் கடைசியில் தான் கண்டு கொள்வீர்கள். 

797. நீங்கள் தேடாத பொருட்கள் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். 

798. ஒரு பொருளை சுத்தமாக ஆக்க வேண்டுமானால் மற்றொரு பொருள் அழுக்காக ஆக வேண்டி இருக்கும். 

799. ஆனால் எந்தப் பொருளையும் சுத்தம் ஆக்காமலேயே பல பொருட்களை உங்களால் அழுக்காக ஆக்க முடியும். 

800. திரும்பி வரும் நேரத்தை விட, போய்ச் சேரும் நேரம் அதிகமாகவே ஆகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons