13 நவ., 2010

மர்பி விதிகள் 826-850


826. ஒரு கடையில் நீங்கள் பார்த்து வைத்திருக்கும் பொருளை நீங்கள் எடுக்கக் கையை நீட்டுமுன் ஒருவர் எடுத்து விடுவார். அதுவே கடைசி இருப்பாக இருக்கும். 

827. வரிசையில் அதிக நேரம் கால் கடுக்க நின்று கவுண்டரின் அருகில் வந்ததும் தான் நீங்கள் தவறான வரிசையில் நின்றது தெரியவரும். 

828. ஒரு திருமணம் நிலைத்து நிற்கும் கால அளவும் அந்தத் திருமணத்திற்குச் செய்திருக்கும் செலவும் எதிர்விகிதத்திலேயே இருக்கும். 

829. இருப்பதிலேயே குறைந்த லாபம் தரும் வாடிக்கையாளர் தான் புகார் செய்து கொண்டே இருப்பார். 

830. யாராவது எதையாவது கீழே போட்டால் அதை எடுப்பதை விட காலால் உதைப்பதற்கு தான் ஆட்கள் இருப்பார்கள். 

831. உங்களால் ஒரு வேலையைக் கூட நேர்த்தியாய் செய்ய இயலாது. 

832. செய்யக்கூடியதாக இருக்கும் எந்த வேலையும், செய்ய முடிக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்றாக இருக்கும். 

833. நீங்கள் நேர்த்தியாக வடிவமைத்த ஒரு திட்டம், சிறு தவறு நேர்ந்து விட்டால் அதிக குழப்பங்களைக் கொண்டிருக்கும். 

834. பகலில் அருமையாக வேலை செய்த கணிணி, இரவில் உங்கள் சொந்த வேலையைப் பார்ப்பதற்காக அலுவலகத்துக்கு வந்து அமர்ந்தால் வேலை பார்க்க மறுக்கும். 

835. தபால் தலை காகிதத்தை விட உங்கள் விரலில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். 

836. முக்கியமான தாள்கள் தாம் முக்கியமானவை என்பதை நிரூபிக்க, நீங்கள் வைத்த இடத்திலிருந்து உங்களால் கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு நகர்ந்து கொண்டே இருக்கும். 

837. ஒரு படகில் நீங்கள் செல்லும் போது, காற்றின் வேகமும், நீச்சல் தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் எதிர்விகிதத்திலேயே இருக்கும். 

838. காற்று சாதகமாக இருப்பதை உணர்ந்து நீங்கள் உங்கள் பாய்மரத்தை ஏற்றியவுடன் காற்று எதிர் திசையில் வீச ஆரம்பிக்கும். 

839. துவைக்கும் இயந்திரம் விலை அதிகமுள்ள துணியாய் பார்த்து தான் கிழிக்கும். 

840. அதிக சமன்பாடுகளைக் கொண்ட ஒரு கணக்கில் தவறு ஏற்பட்டு அதை நீங்கள் சரி செய்ய நினைத்து மேலிருந்து ஆரம்பித்தால் தவறு கீழ் சமன்பாட்டில் தான் இருக்கும்.

841. எந்த ஒரு பயணத்திலும், ஜன்னலின் அருகில் அமர வேண்டியவர் தான் கடைசியில் வருவார்! 

842. எந்த ஒரு மலையும் பார்க்க பக்கத்தில் உள்ளது போலத் தான் இருக்கும். 

843. மற்ற அனைத்து விஷயங்களும் சமமாக இருக்கும் போது, நீங்கள் இழந்து விடுவீர்கள். 

844. மற்ற அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக இருக்கும் போது, அப்போதும் நீங்கள் இழந்து விடுவீர்கள். 

845. நீங்கள் ஒரு காரை உங்களை முந்த விட்டு, இரு கார்களும் ஒரே இடத்துக்குச் செல்வதாக இருந்தால், முன்னால் சென்ற கார் நிறுத்தும் இடத்துடன் காலி இடம் முடிந்து விடும். 

846. தேவைப்பட்டால், உங்கள் அருகிலுள்ள எந்தப் பொருளையும் சுத்தியலாக உபயோகிக்கலாம்! 

847. எவ்வளவு சிறிய வேலையாயிருந்தாலும், உங்கள் கையில் மோட்டார் எண்ணெய்க் கறை படுவதைத் தடுக்க இயலாது. 

848. குறட்டை விடுபவர் தான் முதலில் தூங்குவார். 

849. நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்து விட்டால் அதை யாராவது மீண்டும் ஒரு முறை செய்து காட்டச் சொல்வார்கள். 

850. தவறு செய்வது மனித இயற்கை. அதை மற்றவர் மேல் பழி போடுவதும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons