13 நவ., 2010

மர்பி விதிகள் 926-950


926. ஒரு வெற்றியின் நிகழ்தகவு 1 ஆக இல்லாத பட்சத்தில் அது 0 க்கு அருகிலேயே இருக்கும். 

927. உங்களுக்குப் பிடித்த திரைப்பாடல் கார் வானொலியில் பாட ஆரம்பிக்கும் போது நீங்கள் போய்ச் சேர வேண்டிய இடம் வந்து விடும். 

928. அறையின் தட்பவெப்ப நிலை எதுவாக இருந்தாலும் அது தான் அறைத் தட்ப வெப்ப நிலை! (Room Temperature) 

929. நன்றாக ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொண்டு விட்டால் அதை அடுத்தவருக்கு உங்களால் புரியவைக்க முடியாது. 

930. ருசியான டீயைக் குடித்தவுடன் செய்யும் எந்த வேலையும் தவறாகத் தான் இருக்கும். 

931. வாழ்க்கை என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத பல நிகழ்வுகளின் தொகுப்பாகும். 

932. எந்த இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள தூரமும் இன்னும் கண்டறியப்பட்டதில்லை. 

933. வெளியூரில் முடிய வேண்டிய வேலை ஒரே நாளில் முடியாது. 

934. அன்று தான் நீங்கள் உள்ளூரிலும் இருந்தாக வேண்டும். 

935. உங்களுக்கு எதிரிகளை உருவாக்க ஆசையிருந்தால் எதையாவது மாற்றம் செய்து பாருங்கள். 

936. ஒரே பொருளுக்கு பல உபயோகங்கள் இருக்குமானால் அது எதற்குமே உபயோகப்படாது. 

937. அனுபவம் என்பது நீங்கள் எதையாவது எதிர்பார்த்து அது நடக்காத போது உங்களுக்கு ஏற்படுவது ஆகும். 

938. எந்த ஒரு பிரச்னையும் நீங்கள் பயந்து ஓடும் அளவுக்குப் பெரியது கிடையாது. 

939. நீங்கள் சவரம் செய்யும் போது உங்கள் முகத்தில் ஏற்படும் காயம், நீங்கள் எந்த நிகழ்ச்சிக்குப் போவதற்காகச் சவரம் செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து பெரியதாகவோ, தெரியக்கூடிய இடத்திலோ ஏற்படும். 

940. நீங்கள் நிற்கும் வரிசையில் உள்ள கணிணி தான் இருப்பதிலேயே பழையதாக இருக்கும். 

941. அது புதிய கணிணியாகவே இருந்தால் அதை உபயோகிப்பவர் இப்போது தான் வேலைக்குச் சேர்ந்து பயிற்சி பெறுபவராக இருப்பார். 

942. இந்த வரிசை சரியில்லை என்று நீங்கள் எந்த வரிசைக்குச் செல்கிறீர்களோ அது தான் மிகவும் மெதுவாக நகர ஆரம்பிக்கும். 

943. வாகன நெரிசலின் போது புது காரின் மீது தான் இடித்துக் கொண்டு செல்வார்கள். 

944. நீங்கள் சுற்றுலா செய்யாத தினத்தில் என்றுமே மழை பெய்யாது. 

945. டீயின் சூடு ஆறும் வேகமும், உங்கள் அவசரமும் எதிர் விகிதத்திலேயே இருக்கும். 

946. அவர்கள் (அதாவது உங்களைத் தவிர மற்றவர்கள்) நினைப்பதைச் சாதித்துக் கொள்ளலாம். 

947. உங்கள் மீது உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள், எந்தப் பதவியிலும் இல்லாதவர்களாக இருப்பார்கள். 

948. உங்கள் மேலதிகாரி எப்போதும் தவறே செய்வதில்லை. 

949. அவ்வாறு அவர் தவறேதும் செய்தால் அதற்குப் பின்னால் நேரடியாகவோ மறைமுகமாகவோ உங்களின் வேலையின் பங்கு இருக்கும். 

950. நீங்கள் உரிக்கும் ஆரஞ்சுப் பழத்தின் சுவையும், அதை நீங்கள் உரிக்க எடுத்துக் கொள்ளும் நேரமும் எதிர்விகிதத்திலேயே இருக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons