13 நவ., 2010

மர்பி விதிகள் 901-925


901. பாதையிலுள்ள குண்டு குழி நீங்கள் நினைப்பதை விட ஆழமானது ஆகும். 

902. ஒரு விசயம் தவறாக நடந்த பிறகு அதைச் சரி செய்வதற்கு அடுத்தவர் சொல்லும் எந்த ஒரு வழிமுறையும் ஏற்கனவே நீங்கள் செய்து பார்த்ததாகவே இருக்கும். 

903. ஆனால் அவர்கள் முன் செய்து பார்க்கும் போது மட்டும் தவறு சரியாகி விடும். 

904. குழுவாகக் கூடி விவாதிக்கும் ஒரு பொருளை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். தனிமையில் கேட்டால் அதைப் போல் முட்டாள்தனம் இல்லை என்பார்கள். 

905. 10 நிமிட அடி உதையில் எடுக்க முடியாத முடிவை சில சமயங்களில் நான்கு மணி நேரக் கூட்டம் தந்து விடும். 

906. 100000 முறைகளானாலும் ஒன்றுமில்லை என்பது ஒன்றுமில்லை தான். 

907. இல்லை என்பது மூன்றெழுத்து வார்த்தை அல்ல. வாக்கியம். அதைப் பல பேர் சொல்ல முடியாமல் மாட்டிக் கொள்வார்கள். 

908. விளையாட்டில் அனுபவமானவர்களை விட அனுபவக் குறைவானவர்களும், சிறுவர்களும் எளிதில் வெற்றி பெறுவார்கள். 

909. பந்தயத்தில் முன்னால் ஓட முடியவில்லை என்றால் பாதியிலேயே நின்று விடுவது புத்திசாலித்தனம். 

910. எந்த ஒரு விசயமும் தவறாக நடக்கும் போது அது எவ்வாறு தவறாக நடந்தது என்று விளக்க முடியாமலேயே தவறாக நடக்கும். 

911. எந்த விளக்கமும் எளிதாக இருந்தால் சரியானதாகவும் இருக்கும். 

912. 100 லிட்டர் சாக்கடையில் 1 சொட்டு தேன் விட்டாலும் அது சாக்கடை தான். 100 லிட்டர் தேனில் 1 சொட்டு சாக்கடை நீரை விட்டாலும் அது சாக்கடை தான். 

913. ஒரு சிறு கயிறைக் கூட உங்களால் நேர் கோட்டில் தள்ள முடியாது. 

914. தவறுகளே மிஞ்சும். 

915. எது நடந்தாலும் அதை நீங்கள் எதிர்பார்த்தது போலக் காட்டிக் கொள்ளுங்கள். 

916. வாழ்க்கை என்பது வினையாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு வினையானது. விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு விளையாட்டானது. 

917. ஒரே மாதிரியான இரு பொருட்களைத் தயாரிக்கவே முடியாது. 

918. உங்களுக்கு வரும் கெடுதலுக்கு மட்டும் எல்லையே இருக்காது. 

919. அச்சடிப்பானை விட்டு நீங்கள் நகர்ந்ததும் காகிதம் சிக்கிக் கொள்ளும். 

920. அந்தப் பொருளின் விலை எவ்வளவு என்பதல்ல உங்கள் பிரச்னை. அதிலிருந்து எவ்வளவு சேமிக்க முடியும் என்பதில் இருக்கிறது. 

921. நமது நண்பர்கள் ஏதேனும் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்த உடன் நமது நண்பர்கள் என்னும் பதவியில் இருந்து இறங்கி விடுவார்கள். 

922. காரின் விலையும், ஓட்டுநரின் நிதானமின்மையும் நேர்விகிதத்திலேயே இருக்கும். 

923. உங்களை விட குறைவான வேகத்தில் ஓட்டும் அனைவரும் முட்டாள்கள். 

924. உங்களை விட அதிகமான வேகத்தில் ஓட்டும் அனைவரும் நிதானம் தெரியாதவர்கள். 

925. உங்கள் வேகத்திலேயே ஓட்டுபவர்கள் பிடிவாதக்காரர்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons