13 நவ., 2010

மர்பி விதிகள் 951-975


951. நீங்கள் விரும்பாத எந்தத் துறையிலும் மேதையாகாதீர்கள். பின் அதே வேலையை வாழ்நாள் முழுதும் செய்ய வைத்து விடுவார்கள். 

952. சரியான விஷயத்தைச் சொல்லுங்கள், யார் காதிலும் விழாது. தவறான விஷயத்தைச் சொல்லுங்கள், அனைவர் காதிலும் விழும். 

953. எது தேவையோ அது அப்போது மறந்து போகும். 

954. நண்பர்களுடனான தொடர்பு நாளடைவில் அற்றுப் போகும். எதிரிகளிடமோ அவ்வாறு ஆவதில்லை. 

955. அவசரமாகச் செல்லும் போது தான் அனைத்து சாலை சந்திப்புகளிலும் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். 

956. வீட்டுப்பாடத்தின் ஞாபகம் விடுமுறையின் கடைசி நாளில் தான் ஏற்படும். 

957. எதாவது தவறு ஏற்படும் போது 1. நீங்கள் என்ன செய்தீர்கள்? 2. அடுத்தவர்கள் என்ன செய்தார்கள்? 3. வேறு எது தவறாக போக வாய்ப்பிருக்கிறது? 4. இதை யார் மேல் பழி போடலாம்? என்று சிந்தியுங்கள். 

958. ஒரு தவறு ஏற்படுவதற்கான வாய்ப்பு, நீங்கள் அதை எவ்வளவு தூரம் எதிர்பார்க்கவில்லை என்பதையும், அதற்குப் பரிகாரம் செய்வதற்கு நீங்கள் எவ்வளவு தூரம் தயாராக இல்லை என்பதையும் பொருத்து அதிகமாகும். 

959. பொது சாக்கடைக் குழாய் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும். 

960. பக்கத்தில் உள்ளவர் கையில் உள்ள செய்தித் தாளில் முக்கியமானதை அவருக்குத் தெரியாமல் வாசிக்கும் போது தான் அவர் அதைக் கிழித்துக் கீழே போடுவார். 

961. ஒரு மனிதனைத் தூக்கு மேடை வரை கூட உங்களால் கொண்டு போக முடியும். ஆனால் அவரைச் சிந்திக்க மட்டும் வைக்க முடியாது. 

962. மனசாட்சி உங்களின் ஆர்வத்துக்கு முட்டுக்கட்டை போடுவதில் உள்ள பிரச்னை என்னவென்றால், மீண்டும் உங்களுக்கு அந்தச் சூழ்நிலை வாய்க்காது. 

963. உலக மக்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம். 1. இது போன்ற இரு பிரிவு இருப்பதை நம்புபவர்கள். 2. நம்பாதவர்கள். 

964. தேவைகள் என்பது மற்றவர்கள் கொண்டுள்ள ஒரு பண்பாகும். ஆனால் உங்களுக்கும் அந்தப் பண்பு இருக்கும் என்பதை யாருமே உணர மாட்டார்கள். 

965. மின் தூக்கியில்; முகத்தை நேராக வைக்கவும். 

966. மின் தூக்கியில்; கையை முன்புறம் கட்டிக் கொள்ளவும். 

967. மின் தூக்கியில்; அடுத்தவர் கண்களைப் பார்க்கக் கூடாது. 

968. மின் தூக்கியில்; எண்களை மட்டுமே பார்க்க வேண்டும். 

969. மின் தூக்கியில்; உங்களுக்குத் தெரியாதவருடன் எதுவும் பேசக் கூடாது. 

970. மின் தூக்கியில்; உங்களுக்குத் தெரிந்தவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது தெரியாதவர் யாராவது வந்து விட்டால் பேச்சை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். 

971. மின் தூக்கியில்; அடுத்தவர் உடலுடன் உரசாமல் நிற்கவேண்டும். 

972. ஆண்களுக்குப் பெண்களை எதற்காகப் பிடிக்கிறதோ அது சில வருடங்களுக்குப் பின் அவர்களிடம் இருக்காது. 

973. பெண்களுக்கு ஆண்களை எதற்காகப் பிடிக்கிறதோ அது அவர்களிடம் எப்போதும் இல்லாததாக இருக்கும். 

974. மாட்டிக் கொள்ளாத வரை எதுவுமே தவறில்லை. 

975. ஒரு வேலையைக் கஷ்டமான வழியில் செய்வது எப்போதுமே எளிது தான்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons