23 ஏப்., 2011

. எல்.கே.ஜி.க்கு இன்டர்வ்யூ

ட்விட்டர் புரட்சி முகநூல் புரட்சி என்றெல்லாம் எங்கெங்கோ கேள்விப்படுகிறோம்.. நமது நாட்டில் குறைந்தபட்சம் இவற்றுக்கெதிராகவேனும் ஒருங்கிணைந்து உரக்கக்குரல் எழுப்ப நாம் முனையலாமே...

சென்னையில் சமீபத்தில் சேகரித்த எல்.கே.ஜி சேர்க்கை நடவடிக்கைகள் குறித்த தகவல்கள்:

1 .
எல்.கே.ஜி.க்கு இன்டர்வ்யூ நடத்தாத தனியார் பள்ளிகளே இல்லை என்கிற நிலை

2 .
மிகக்கடினமான இன்டர்வ்யூ நடத்துகிற பள்ளிகளே 'நல்ல பள்ளிகள்' என்கிற பெயர்

3 .
மிக அதிகமாக பள்ளிக்கட்டணம் வசூலிக்கிற பள்ளிகளே 'சிறந்த பள்ளிகள்' என்கிற பெயர்

4 .
பல 'பெரிய பள்ளிகள்', 'ப்ரீ.கே.ஜி. மற்றும் ப்ளே ஸ்கூல்களையும்' நடத்துகின்றன. அவற்றில் படித்த மாணவர்களுக்கே அப்பள்ளியின் எல்.கே.ஜி.யில் இடம் கிடைக்கும் என்கிற நிலை.

5 .
எல்.கே.ஜி. சேர்க்கை படிவத்தில் ஒரு இடத்தில் 'பள்ளி வளர்ச்சி நிதியாக எவ்வளவு பணம் தங்களால் தர முடியும்?' என்கிற கேள்விக்கு நீங்களே குத்து மதிப்பாக ஒரு எண்ணிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். மிக அதிகமாக பூர்த்தி செய்தவர்களுக்கு மட்டும் பள்ளியில் இடம். (மற்றவர்கள் எவ்வளவு போட்டிருக்கிறார்கள் என்கிற விவரம் தெரியாததால், எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு அதிக எண்ணை அதில் பூர்த்தி செய்வார்கள். #ரமணா படம் பார்த்த பாதிப்பு)

6 .
சில பள்ளிகள் நேரடியாகவே வளர்ச்சி நிதியை (?!?) கேட்டுப்பெறுகிறார்கள். (இரண்டாண்டுகளுக்கு முன்பு ஆற்காடு வீராசாமியால் துவங்கப்பட்டு நடத்தப்படுவதாக சொல்லப்படுகிற சென்னை பப்ளிக் பள்ளியில் ஒன்றரை லட்சமாம் எல்.கே.ஜி இடத்திற்கு)

எல்.கே.ஜி. நுழைத்தேர்வு எப்படி இருக்கும்:

1 .
எல்.கே.ஜி இண்டர்வ்யூவிற்கு ஹால் டிக்கெட் எல்லாம் உண்டு. பெற்றோர் தேர்வறைக்கு வெளியில்தான் நிற்கவேண்டும்.

2 .
எல்.கே.ஜி பாடத்திட்டமனைத்தையும் கரைத்துக்குடித்தவர்களுக்கே எல்.கே.ஜி. யில் இடம் (பள்ளியில் சேர்ந்த பிறகு இவங்க என்னத்த சொல்லித்தருவாங்கன்னு தெரியல)

3 .
எல்.கே.ஜி. இன்டர்வ்யூ கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே கேட்கப்படுகிறது.
ஒரு பள்ளியில் கேட்கப்பட்ட கேள்விகளை உதாரணத்திற்கு தருகிறேன்: 
Can you identify this object?
 
Do you know any English rhymes?
 
what is your favorite food?
 
(3
வயது குழந்தை தன் தாய்மொழியையே தட்டுதடுமாறிதான் பேசும் என்பதுகூட அறியாத முட்டாள்களா அவர்கள்)

4 .
ஒரு 'பெரிய பள்ளியில்' ஒரு குழந்தையிடம் ஆங்கில எழுத்துக்கள் அனைத்தையும் எழுதிக்காட்ட சொல்லியிருக்கிறார்கள். அந்தக்குழந்தையும் எழுதியிருக்கிறது. ஆனாலும் அக்குழந்தைக்கு இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. காரணம் - கையெழுத்து நேராக இல்லையாம். கோடு போட்ட நோட்டில் எழுதுகிற திறமை இருக்கவேண்டுமாம்.

5 .
பல நடுத்தரப்பள்ளிகளில் எல்.கே.ஜி இன்டர்வ்யூவில் தேர்ச்சி பெறாத குழந்தைகளையும் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் காலையும் மாலையும் அதே பள்ளியில் முதல் ஆறுமாதம் ட்யூசன் சேர வேண்டும். அதற்கு தனி கட்டணம். ஆறு மாதத்தில் தேறவில்லையெனில் பள்ளியை விட்டு துரத்திவிடுவதாக குழந்தைகளை மிரட்டல்.

ட்விட்டர் புரட்சி முகநூல் புரட்சி என்றெல்லாம் எங்கெங்கோ கேள்விப்படுகிறோம்.. நமது நாட்டில் குறைந்தபட்சம் இவற்றுக்கெதிராகவேனும் ஒருங்கிணைந்து உரக்கக்குரல் எழுப்ப நாம் முனையலாமே...

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons