பொதுவாக வீட்டினைப் பராமரிக்கும் பெண்மணிகள் குடும்பச்சுமை காரணமாக ஓயாது வேலை செய்தல், நேரத்துக்கு உணவு உண்ணாமை, சத்துணவின்மை, காப்பி, டீ போன்ற பானங்களை மிகுதியாக உண்ணுதல், உறக்கமின்மை, ஒரே வகையான உணவைமிகுதியாக உண்ணுதல், கவலை ஆகியன காரணமாக உடலின் உள்ளுறுப்புகளில் உஷ்ணம் சேர்ந்து அதில் ஒருபகுதி குருதி வழியாகக் கருப்பையிலும் சேர்கின்றது. இந்த உஷ்ணம் கருப்பையில் தங்கி, வாய்வுவை உற்பத்தி செய்யும்போது கருப்பை உட்புறம் பூந்தசை நார்கள் சிதைந்து ரணமாகின்றது. மாதவிலக்கின்போது கருப்பை சுருங்கி விரியும்போது இந்த 'ரணம்' பாதிக்கப்பட்டு வலி தோன்றும்.
உஷ்ண வாய்வு சேராமல் இருக்க ஆண்-பெண் இருவரும் வாரம் 2 நாள் 'எண்ணெய் ஸ்நானம்' செய்து வருவதைப் பழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். பெண்களாக இருந்தால் 'செவ்வாய், வெள்ளி ஆண்களாக இருந்தால் புதன், சனி' என்று எண்ணெய் ஸ்நானம் செய்வது உஷ்ணத்தை தணிக்கும்.
'கருவேப்பிலை'யைத் தினசரி 20 இலைகள் எடுத்து அரைத்து, மோரில் கலந்து பருகிவர, கருப்பையில் தங்கும் உஷ்ணவாய்வு நீங்கி, கருப்பை perfect conditionல் செயல்படும். மாதவிலக்கு நேரத்தில் கடுமையான வலி வருவது நிற்கும். மோரில் சாப்பிட இயலாதவர்கள் 'கருவேப்பிலை'யுடன், உளுந்து சேர்த்து துவையல் செய்து நெய் சேர்த்துப் பகல் உணவில் 2 பிடி சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். இதனையும் செய்ய இயலாதவர்கள் அப்படியே 20 இலையை வாயிலிட்டு மென்று தண்ர் அருந்தலாம். கருப்பைக் கோளாறுகள் தொடராமல் ஆரம்ப கட்டத்திலேயே விலக இம்முறை நல்லது.
இன்னொரு முறையும் உள்ளது. முருங்கை இலையை ஈர்க்கிலிருந்து உருவி விட்டு வெறும் ஈர்க்குச்சிகள் 1 பிடி எடுத்து ஒன்றிரண்டாக இடித்து 2 குவளை நீரில் வேகவைத்து 1 டம்ளராக வடிகட்டி அதனை நெய், வெந்தயம், சிறிது žரகம், பூண்டு, இஞ்சி, வெங்காயம், 'கருவேப்பிலை' கூட்டி வேகவைத்து பருப்பு நீர் சிறிது சேர்த்துத் தாளிதம் செய்து பகலில் (இதற்கு முருங்கை ஈர்க்கு சூப் என்று பெயர்) பருகி வரலாம். வாரம் 2 அல்லது 2 நாட்கள் பருகிவர, 3 மாதத்தில் மாதவிடாய் வலி வருவது அறவே நிற்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக