2 ஏப்., 2011

முதுகு வலி, மூட்டு வலி தொல்லை... ஏன்? தீர்வு என்ன?


முதுகு வலி, மூட்டு வலி தொல்லை... ஏன்? தீர்வு என்ன?

முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்பு வலி, மூட்டு வலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறு வயதிலேயே 'இடுப்பு வலிக்குது' என்று புலம்புகிறார்கள்.அதற்குக் காரணமே சிறு வயதிலேயே டூ வீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.

முதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இருக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்ஸார்பர் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க் (வட்டுகள்)கள் இருக்கும்.மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.

அதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால் குடைச்சல், கால் மரத்து விடுதல், முதுகு வலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதைச் சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்' என்று அலட்சியமாக விட்டு விடுவார்கள். இது தவறு.

வலி, பிடிப்பு இருந்தால்ஆரம்பநிலை'யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.

ஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால்இரண்டாவது நிலை'.

இதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால் குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களைக் கதி கலங்க வைத்து விடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.

மூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ளடிஸ்க்'கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.

கால் குடைச்சல், மரத்துப் போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்... சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.

ஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் ஃபிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.

இதற்கு ஃபிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா?

முதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், .எஃப்.டி. (நடுத்தர மின்னோட்டம்), .ஆர்.ஆர். (அகச் சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து இறுகிப்போன தசைகளை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.

இரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.

மூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர்ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இரு வகை உண்டு.

சிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாகக் கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்.

அதோடு கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து விட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தைத் திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனைப் பெற முடியாது.

மேலும் டூ வீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்து போன டயர், ஷாக் அப்ஸார்பரில் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட் பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும்.

உட்காரக்கூடிய சேர் முதுகுப் பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.

லைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகு வலி, மூட்டு வலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons