13 நவ., 2010

மர்பி விதிகள் 851-875


851. நீங்கள் எந்தப் பழத்தைக் காயாக வாங்கி பழுக்க வைக்க நினைத்தாலும் அதை நீங்கள் சாப்பிடுவதற்குள் வீட்டில் சாப்பிட்டுவிடுவார்கள். 

852. நீங்கள் அதைப் பழுக்க வைத்தே வாங்கி வந்தீர்களேயானால் அது நீங்கள் சாப்பிடும் போது அழுகியிருக்கும். 

853. நீங்கள் ஆசையுடன் பார்க்க உட்கார்ந்திருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நேர மாற்றம் செய்யப்பட்டிருக்கும். 

854. நீங்கள் எடுத்து படிக்க ஆசைப்படும் பாடம் நீங்கள் சேர்ந்தவுடன் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கும். 

855. முக்கியமான இடத்தில் மட்டும் உங்கள் கையெழுத்தே உங்களுக்குப் புரியாது. 

856. ஒவ்வொரு ஆசிரியரும் தனது பாடத்தைத் தவிர இந்த மாணவர்கள் வேறெதையும் படிக்க வேண்டியதில்லை என்றே எண்ணுவார். 

857. எந்த ஒரு பாடம் பொதுவான விஷயத்தைப் பற்றி விளக்குகிறதோ அதிலிருந்து நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ள முடியாது. 

858. எந்த ஒரு பாடம் குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி தெளிவாக விளக்குகிறதோ அதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்டதை எங்குமே உபயோகப்படுத்திப் பார்க்க முடியாது. 

859. ஆட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி (டெண்டுல்கர் சிக்ஸர் அடிப்பது) நீங்கள் பாப்கார்ன் வாங்கிக் கொண்டிருக்கும் போது தான் நிகழ்த்தப்படும். 

860. ஒரு விஷயத்தில் மேதாவி என்பவர் வேறு நகரத்தில் இருந்து வந்தவராக இருக்கவேண்டும். (உள்ளூர் மாடு விலை போகாது) 

861. உங்கள் மருத்துவர் உங்கள் வியாதியைக் கண்டறிந்துவிட்டதாலேயே உங்களைக் குணப்படுத்திவிடுவார் என்று நம்பாதீர்கள். 

862. உங்களுக்கு வெறுப்புத் தரக்கூடிய பத்திரிகைகள் வரவேற்பறையில் இருந்தால் நீங்கள் சந்திக்கவேண்டியவர் மிகவும் தாமதமாகவே உங்களை அழைப்பார். 

863. குழந்தைகளின் பாட்டில்களை வயதானவர்களால் தான் திறக்க முடியாது. 

864. இரண்டு விதமான பிளாஸ்திரிகள் தான் உண்டு. 1. புண்ணின் மேல் ஒட்டாதது. 2. புண்ணின் மேல் ஒட்டிக் கொண்டு எடுக்க முடியாதது. 

865. வீட்டில் பல கதைகள் பேசும் குழந்தைகள் விருந்தினர் முன் நீங்கள் பேசிக் காட்டச் சொன்னால் ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள். 

866. ஒரு விளையாட்டுச் சாமான் உடைக்க முடியாததாக இருந்தால் அது அடுத்த விளையாட்டுச் சாமானை உடைக்கப் பயன்படும். 

867. உங்கள் வீட்டுப் பூனை சாப்பிடுவதற்கும், அது சாப்பிடும் பண்டத்தின் விலைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. 

868. உங்கள் வீட்டுக்கு எவ்வளவு முக்கியமான விருந்தாளிகள் வந்துள்ளனரோ அதற்கேற்பவே உங்கள் செல்லப் பிராணிகள் அசுத்தம் செய்வதும் இருக்கும். 

869. காதலியைக் காணும் வரை பரு தெரியவராது. 

870. சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளவே முடியாது. அது எந்த விஷயங்கள் என்பதையும் தெரிந்து கொள்ள முடியாது. 

871. அரசாங்கத்தின் ஊழல்கள் இறந்தகாலத்திலேயே எப்போதும் சொல்லப்படும். 

872. எதைப் பற்றி வேண்டுமானாலும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். அதில் உண்மை இருக்கப் போவதில்லை. 

873. எதைப் பற்றி வேண்டுமானாலும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். அதில் கண்டிப்பாக பணத்தைப் பற்றிய பேச்சு இருந்தே தீரும். 

874. நீங்கள் எங்கு நிற்கிறீர்கள் என்பது நீங்கள் எங்கு உட்காருகிறீர்கள் என்பதைப் பொருத்தது. 

875. பிலிம் முடிந்தவுடன் தான் முக்கியமான புகைப்படம் எடுக்கவேண்டிய நிகழ்ச்சி நடக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons