13 நவ., 2010

மர்பி விதிகள் 876-900


876. முக்கியமான புகைப்படம் எடுக்க நினைக்கும்போது தான் லென்சின் மூடியை எடுக்க மறந்திருப்பீர்கள். 

877. முக்கியமான புகைப்பட ரோலைக் கழுவும் போது தான் இருட்டறையின் கதவைத் திறந்து கொண்டு யாராவது வந்து அதைப் பாழாக்குவார்கள். 

878. நேரடியான வினை நேரடியான எதிர்வினையை உருவாக்கும். 

879. ஒரு மூன்று மாடிக்கட்டடத்தில் மின் தூக்கி (லிப்ட்) வேலை செய்யுமானால் 10க்கு 9 முறை நீங்கள் நிற்கும் மாடியில் அது இருக்காது. 

880. எந்தத் தகவல் உங்களுக்கு மிக மிக தேவையோ அது மட்டுமே கிடைக்காது. 

881. ஒரு பொருளின் விலை ரூ.50/-க்கும் குறைவு என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தால் அதன் விலை கண்டிப்பாக ரூ.19.95 ஆக இருக்காது. ஹி ஹி. 

882. முன்கூட்டியே நீங்கள் வந்தால் கூட்டம் ரத்து செய்யப் பட்டிருக்கும். 

883. சரியான நேரத்தில் நீங்கள் வந்தால் கூட்டம் நடக்க இன்னும் நேரம் ஆகும். 

884. தாமதமாக கூட்டத்திற்கு வந்தால், அடடா! நீங்கள் மிகத் தாமதமாக வந்து விட்டீர்கள். 

885. சாதாரண வேலைகள் செய்யாமல் மூடி வைக்க உகந்தவை. அதைச் செய்வதற்கென எதிர்காலம் இருக்கிறது. 

886. எளிதான, புரியக் கூடிய பொய், குழப்பமான உண்மையை விட மேல். 

887. யார் விளையாட ஆர்வமில்லாமல் இருக்கிறார்களோ அவ்ர்களே ஜெயிப்பார்கள். 

888. ஏதாவது ஒரு பொருளின் மேல் "புதிது"/"சிறந்த தொழில் நுட்பத்துடன் செய்யப்பட்டது" என்று அச்சடித்திருந்தால் அது பழைய சரக்கு என்று அர்த்தம். 

889. அவ்வாறு அச்சடித்திருந்தால் விலை அதிகமாகி விட்டது என்று பொருள். 

890. உங்களுக்கு ஒரு சட்டை பிடித்திருந்தால் உங்கள் அளவைத் தவிர எல்லா அளவுகளிலும் இருப்பு இருக்கும். 

891. உங்களுக்கு ஒரு சட்டை பிடித்திருந்தால் உங்கள் அளவுக்கே இருப்பு இருந்தாலும் எப்படியும் உங்களுக்கு அது எட்டாது. 

892. அப்படியே உங்களுக்கு கன கச்சிதமாகப் பொருந்தியிருந்தால் அதன் விலை உங்களால் வாங்க முடியாத அளவுக்கு இருக்கும். 

893. அப்படியே உங்களுக்கு பிடித்திருந்து, இருப்பும் இருந்து, பொருந்தியும் இருந்து, விலையும் மலிவாக இருந்தால் முதல் முறை துவைத்த வுடன் கிழிந்து விடும். 

894. கொள்முதல் சோதனைக்கு அனுப்பிய பொருளின் அறிக்கை நீங்கள் அதை வாங்கியவுடன் தான் வந்து சேரும். அதில் நீங்கள் வாங்கிய பொருள் உபயோகமற்றது என்றும், நீங்கள் வாங்காமல் விட்ட பொருளே சிறந்ததென்றும் அறிவிக்கப் பட்டிருக்கும். 

895. 60 நாட்கள் உத்திரவாதம் உடைய ஒரு பொருள் 61ம் நாள் தான் பழுதாகும். 

896. ஒப்புதலை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து நீங்கள் செய்யும் எந்தப் பணியும் ஒப்புதல் பெற முடியாததுடன் யாருக்கும் விரும்பத் தகாததாகவும் இருக்கும். 

897. அனைவருக்குமே புரியும்படியாக நீங்கள் ஒரு விஷயத்தை விளக்கினால், ஒரு மேதாவி கேள்வி கேட்டு உங்களுக்கே குழப்பத்தை உண்டாக்கி விடுவார். 

898. புது சட்ட திட்டம் புது ஓட்டைகளை உருவாக்குவதாகவே இருக்கும். 

899. புதிய சட்டம் புத்தகத்தின் அளவுக்கு ஏற்ப விரிந்து கொள்ளும். 

900. தீயணைக்கும் கருவி தீ எரியும் போது தான் வேலை செய்யாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons