3 செப்., 2011

மழைநேரங்களில் காரை டிரைவ் செய்யும்போது ?

மழைநேரங்களில் காரை டிரைவ் செய்யும்போது ?

மழைக்காலங்களில் கார் ஓட்டுவது சவால்கள்நிறைந்தது. நீண்ட தூர பயணமோ, 
குறைந்ததூர பயணமோ எதுவாயினும் மிகுந்த எச்சரிக்கையுடன் டிரைவிங் செய்வது அவசியம்.

மழைக்காலங்களில் தார் சாலைகளைவிட சிமென்ட் சாலைகளில் ஓட்டும்போதுஅதிக எச்சரிக்கை தேவை. சிமென்ட் சாலைகளில் சக்கரங்கள் சறுக்கும் ஆபத்து அதிகம்.

மழை பெய்யும்போது வைப்பர் பிளேடுகள் கண்ணாடியின் வெளிப்புறம்தண்ணீரை துடைக்கும். ஆனால், அதேநேரம் கண்ணாடியின் உட்புறம் ஆவி படரும். இதை தவிர்க்ககாட்டன் துணியால் முகப்பு கண்ணாடியின் உள்பக்கத்தை அடிக்கடி துடைத்தால், சாலை பளிச்செனதெளிவாக தெரியும்.

மழைக்காலங்களில் நகரங்களில் ஓட்டும்போது பெரும்பாலும்இரண்டாவது கியரை பயன்படுத்தி ஓட்டுங்கள். டாப் கியரைவிட இரண்டாவது கியரில் ஓட்டும்போதுகார் நமது கட்டுப்பாட்டில் செல்லும். தவிர, காருக்கு அதிக பேலன்ஸ் கிடைக்கும்.

முன்னால் செல்லும் வாகனத்துக்கும், உங்களது காருக்கும்தக்க இடைவெளி வைத்து ஓட்டுங்கள். சாலைகளின் குறுக்கே வரும் திடீர் பள்ளத்தாக்குகளைகண்டு முன்னால் செல்லும் வாகனம் சடன் பிரேக் அடிக்கும் வாய்ப்பு அதிகம்.

சாதாரண சமயத்தைவிட மழைக்காலங்களில் பிரேக் பிடிக்கும்போதுகார் குறிப்பிட்ட தூரத்தைவிட சற்று கூடுதல் தூரத்தில்தான் நிற்கும். எனவே, உங்களதுகாரின் பிரேக் கண்டிஷனை பொறுத்து கவனமாக டிரைவ் செய்யவும்.

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கிய சாலைகளை தவிர்ப்பதுநலம். சில கிமீ தூரம் சுற்றிவந்தாலும் பரவாயில்லை. மாற்றுவழியில் செல்வதே சாலச்சிறந்தது.மேலும்,நன்கு அறிந்த சாலைகளின் வழியாக செல்லுங்கள்.

மழைநேரங்களில் காரை டிரைவ் செய்யும்போது உங்கள் கவனம்சாலையில் மட்டும் இருக்கட்டும். டிரைவிங்கின்போது பீஸா சாப்பிடுவது, மொபைல்போனில் எஸ்எம்எஸ்படிப்பது, போன் பேசுவது போன்றவற்றை தவிர்க்கவும். புளூடூத் வசதி இருந்தால்கூட சுறுக்கமாகபோனில் பேசிமுடிப்பது நல்லது.

அலுவலகத்திற்கு தாமதமாகிவிட்டது, அவசர வேலை என ஏதோ ஒருகாரணத்தை மனதில் போட்டுக்கொண்டு மழைநேரங்களில் தாறுமாறாக காரை ஓட்டவேண்டாம். அது உங்களுக்குமட்டுமல்ல, அருகில் வரும் வாகனங்களுக்கும், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தைஏற்படுத்திவிடும்.

கனமழை பெய்யும் நேரத்தில் எதிரே வரும் வாகனங்களுக்குதெரியவேண்டும் என்பதற்காக, ஹைட்லைட்டில் ஹைபீமை போடவேண்டாம். இது எதிரே வரும் வாகனஓட்டிகளின் கண்களை கூசச்செய்யும். லோ பீம் அல்லது பார்க்கிங் லேம்புகளை மட்டும் போட்டுக்கொள்ளவும்.

சாலையின் ஓரத்தில் செல்வதையும், முன்னால் செல்லும் வாகனத்தைஇடதுபக்கம் ஓவர்டேக் செய்வதையும் தவிர்ப்பது நலம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons