3 செப்., 2011

ஏஸி பராமரிப்பது ஈஸி!

ஏஸி பராமரிப்பதுஈஸி! 
  
தமிழகத்தைப் பொறுத்தவரை .ஸி இல்லாத கார்களை வாங்குபவர்கள் வெறும் 10 சதவிகிதத்தினரே! காரில் .ஸி இருந்தாலும் ஒழுங்காக இயங்கவில்லைஎன்றால், எந்தப் பயனும் இல்லை. கார் .ஸியைப் பராமரிப்பது எப்படி 
  
காருக்குள்நாற்றம்! 
காருக்குள் .ஸி இயங்கிக்கொண்டு இருக்கும் போது, ஒரு விதமான துர்நாற்றம் வந்தால், அதற்கு கிருமிகள்தான் காரணம். .ஸி ஃபேன் கேஸிங்கில் இருக்கும் கூலிங் காயில் அல்லது ஃபில்டரில் பாக்டீரியாக்கள் தங்கி, பல்கி பெருகுவதற்கு மூல காரணம், இங்கே ஏற்படும் அதிகப்படியான ஈரப் பதத்தால், பாக்டீரியாக்கள் தங்க வசதியாக அமைந்து விடுகிறது. இதை நீங்களே சுத்தப்படுத்த முடியாது. 
 
பூஞ்சானம், கிருமிகள் தங்குவதைத் தடுப்பதற்கு .ஸியில் இருக்கும் ஈரப்பதத்தைக் குறைக்க வேண்டும். அதனால், காரை வீட்டில் நிறுத்தப்போகும் முன், ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே .ஸியை ஆஃப் செய்து விடுங்கள். அப்போதுதான் .ஸியில் இருக்கும் எவாப்ரேட்டர் ஈரத்தை ஈர்த்து, பாக்டீரியாக்கள் தங்காமல் தடுக்கும். 
  
.ஸிஎஃபெக்ட் இல்லை! 
.ஸி எஃபெக்ட்டாக இல்லை என்றால், காரை ஆன் செய்து விட்டு தெர்மா மீட்டரை .ஸி வென்ட்டில் வைத்து செக் செய்யுங்கள். ஆறு முதல் ஒன்பது டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது என்றால், .ஸி சரியாக வேலை செய்கிறது என்று அர்த்தம். ஒன்பது டிகிரிக்கு மேல் இருந்தால், .ஸியில் பிரச்னை இருக்கிறது. .ஸியில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க கேஸ்கெட் மற்றும் ஹோஸ்களில் லீக்கேஜ் ஏற்படும். 
 
இதனால், ரெஃப்ரிஜெரன்ட் கேஸ் அளவு குறையும். இதனால் .ஸி எஃபெக்ட் குறைய வாய்ப்புகள் அதிகம். அதேபோல், ஏர் ஃபில்டரில் தூசு அடைத்திருந்தாலும், .ஸி எஃபெக்ட் குறையும். அதைச் சுத்தம் செய்யுங்கள். மிகவும் மோசமாக இருந்தால், ஏர் ஃபில்டரை மாற்றி விடுவதே நல்லது! 
  
பெல்ட்மற்றும் கன்டென்ஸர் 
.ஸி அதிக சத்தம் எழுப்பினால், அதிர்வுகள் இருந்தால் கம்ப்ரஸர் மவுன்ட்டிங்கில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். கம்ப்ரஸர் பெல்ட் தளர்வாக இருக்கலாம். கன்டென்ஸர் காயிலில் தூசுகள் அடைத்திருந்தாலும், .ஸியின் பர்ஃபாமென்ஸ் குறையும். 
  
பொதுவாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை .ஸி மெக்கானிக்கை வைத்து .ஸியின் பர்ஃபாமென்ஸை செக் செய்யுங்கள். காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள். அதேபோல், சூரியன் இருக்கும் திசையில் காரின் பின் பக்கம் இருக்கும்படி பார்த்து பார்க் செய்யுங்கள். காரை எடுத்தவுடனேயே .ஸியை ஆன் செய்யாதீர்கள். காரணம், .ஸியை முழுவதுமாக கூல் செய்யவே அதிகப்படியான சக்தி இழுக்கும். அது 
 
இன்ஜின் பர்ஃபாமென்ஸைப் பாதிக்கும். சிறிது நேரம் ஜன்னல்களை கீழே இறக்கி வைத்து காரை ஓட்டிவிட்டு, இன்ஜின் நன்கு சூடேறிய பிறகே .ஸியை ஆன் செய்யுங்கள். 
  
20
டிகிரிக்குக் கீழ் .ஸி டெம்ப்ரேச்சரை வைப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல! அதே போல், .ஸி வென்ட்டுகள் நேராக முகத்துக்கு அடிப்பது போலும் இருக்கக் கூடாது! 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons