29 ஏப்., 2012

செப்டம்பர், 11, 2001 சம்பவங்கள்- அமெரிக்க சதித்திட்டம்!


செப்டம்பர் 11, அமெரிக்காவில் நியுயார்க் மாநிலத்தில் நியுயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக் மையத்தை தகர்த்த பொழுது, இறந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்திய நாள்! உலகின் மறுபக்கமான இந்த அமெரிக்க கண்டம் என்றமட்டுமில்லாது, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த நினைவு நாளில், இந்த சம்பவங்களில் இறந்த மக்களை நினைத்து பார்த்து இரங்கல் தெரிவித்தது! இந்த கொடூர சம்பவத்தின் போது இறந்தவர்கள் வெறும் அமெரிக்க நாட்டவர் மட்டுமில்லை, மொத்தம் 115 மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் தான்! இதில் நம் இந்தியர் ஒருவரும் உண்டு, அது போல் இந்தியாவிலிருந்து வந்து அமெரிக்க குடியுரிமைப்பெற்ற நம் தமிழ் நெஞ்சங்களும் உண்டு! அவர்கள் அனைவருக்கும் முதலில் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்! 

இந்த செபடம்பர் 11,2001 சம்பவம், தீவிரவாதத்தின் உச்சமாய், அல்கொய்தா தீவிரவாதிகளால் திட்டமிட்டு செயல்படுத்த பட்ட ஒன்று என்று உலகிற்கு பறை சாற்றப்பட்டது. ஆனால் இந்த மொத்த சம்பவங்களும் அமெரிக்கா சதி திட்டமிட்டு, மிகவும் சரியான முறையில் நடந்தேறிய ஒன்று என்று இப்பொழுது புதிய தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன! அதுவும் இந்த சதி திட்டத்தின் நோக்கம், எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளை ஆக்கிரமித்து, தன் ஆட்சி செலுத்தவே, இதை அமெரிக்க தொலை நோக்குத்திட்டத்துடன் செயல்படுத்தப்பட்ட ஒன்று என்றும், அது மட்டுமில்லாமல், மிகப்பெரிய காப்பு மேசடி ஊழல் செய்யவும், நிலுவையில் நிற்கும் முக்கியமான சில மோசடி வழக்குகளின் தாஸ்த்திவேஜாக்களை அழிக்கவும், அமெரிக்க அரசாங்கத்தில் செல்வாக்குடன் உள்ள ஒரு சில பேரால், இப்பொழுதைய அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள சில முக்கியமானவர்களுடன்,திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதல், நம் தமிழ் படங்களில் அரசியல்வாதிகளால் தூண்டபட்டு அப்பாவி பொது மக்களை அழிக்கும் சம்பங்கள் போல! (குறிப்பாக ஷங்கரின், இந்தியன் படத்தை ஞாபகம் படுத்திக் கொள்ளுங்கள், அதாவது வேண்டுமென்றே முதலமைச்சர் கலவரைத்தை தூண்டிவிட்டு, அப்பாவி மாணவர், மற்றும் பொது மக்களை கொல்லும் காட்சியை மனதில் கொள்ளுங்கள்!) இப்பொழுது இணையத்திலே, இன்றைய தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் வலம் வந்து கொண்டிருக்கிறது! இணையத்திலேயே சஞ்சரிக்கும் என் நண்பர்களே, உங்களில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என எனக்குத்தெரியாது! ஆனால் அதை பற்றி என்ன என்று விளக்கவே இந்தப் பதிவு!

"Loose Change" என்கிற டாக்குமெண்டரி படம், இணையத்திலேயே கிடைக்கக்கூடிய வீடியோ கிளிப்புகளை கொண்டு, நடந்த ஒவ்வொரு சம்பங்களின் பின்னனனியையும் ஆராய்ந்து, அலசி, நடக்கப்பட்ட அத்தனை சம்பங்களும் சதித்திட்டத்தின் கீழ் நடக்கப்பெற்ற ஒன்று என்று கூறுகிறது இந்த திரைப்படம்! இந்த படத்தை இயக்கியவர் 'டைலன் ஏவரி'( Dylan Avery) என்ற 22 வயது நிரம்பிய ஒரு மாணவர்! இந்தப்படம் நடந்த அத்தனைச் சம்பவங்களுக்கும் ஒரு மாற்று நோக்கத்தையும், சதியின் ஆழத்தையும் திறம்பட விளக்குகிறது! அதாவது நம் நாட்டிலே அமைக்கப்படும் விசாரணை கமிஷன்ங்கள் போல், இந்த 9/11 சம்பங்களை ஆராய்ந்து உண்மையை வெளிக்கொணற இங்கும் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கமிஷன் ஆராய்ந்து கண்டறியாத சில உண்மைகளை மாற்று விளக்கத்துடன் இது விளக்குகிறது! இந்த தாக்குதல், தீவிரவாதத் தால் உண்டான ஒன்றல்ல! இந்த தாக்குதலின் நோக்கமே வேறு என்றும், அதை மிக சாமர்த்தியமாக அமெரிக்க அரசாங்கம் நடத்தி முடித்திருக்கிறது என்று எடுத்துரைக்கிறது!

முதலில் என்னவோ டைலன் ஏவரி ஒரு ஃபிக்ஸன் படம் போல இந்த செப்டம்பர் 11 சம்பவங்களை கொண்டு படம் எடுக்க தீர்மானித்தார். ஆனால் உள்ளே தோண்டி தோண்டி அராய்ச்சி செய்ய இறங்கிய போது பல உண்மைகள் புலப்பட்டன. அதாவது இந்த சம்பங்களின் உள் நோக்கம் தீவிரவாதமில்லை! இது முழுதும் அமெரிக்க அராசாங்கத்தின் சதித்திட்டமே என்று! அதாவது எந்த காரணமின்றி எண்ணைய் வளம் கொண்ட அரபு நாடுகளான ஈராக் மீதோ, மற்ற நாடுகள் மீது போர் தொடுக்க முடியாது! சரியான, வலுவான காரணமின்றி அந்நாடுகள் மீது படையெடுக்க உலக நாடுகளின் ஆதரவு வேண்டுமென்றால் தம் நாட்டு மக்கள் சிலரைக் கொன்று தான் அக்காரியத்தை நிறைவேற்ற முடியும் என்ற திட்டமிட்ட சதியால் விளைந்தது தான் இந்த செப்டம்பர் 11ல் நடந்தேறிய நிகழ்ச்சிகள்! ஆனால் தம் நாட்டினரை மற்றும் பலி கொள்ளாமல், பல உலக நாட்டு குடிமகன்களையும் கொன்று குவித்து இக்காரியத்தை நிறைவேற்றி இருக்கிறது அமெரிக்கா என்று இத்திரைப்படம் அறைகூவல் விடுக்கிறது!

இப்படம் அந்த காலகட்டத்தில் அமெரிக்கா க்யூபா மீது போர் தொடுக்க கையாண்ட ராஜதந்திர சதி திட்டங்களை விளக்கும் ஆரம்பத்தோடு தொடர்கிறது! பிறகு ஏற்பட்ட தாக்குதல் சம்பவங்களை ஒவ்வொன்றாக ஆராய்கிறது. முதலில் அமெரிக்க ராணுவ தலைமை பீடமான பெண்டகனை தாக்கிய விமானத்தை ஆராய்ந்து, அது உண்மையிலேயே பயணிகள் சென்ற போயிங் விமானம் தானா, இல்லை அமெரிக்கா தன் மீது ஏவிக்கொண்ட ஏவுகனைகளா என்பதை ஆராய்கிறது! அதை விஞ்ஞான பூர்வமாகவும், சிதலமைடந்த விமான பாகங்கள் அனத்தும் போயிங் விமானத்துடன் ஒன்றாத தன்மையும் விளக்குகிறது. ஆக இது திட்ட மிட்ட சதியே என்று கூறுகிறது!
 

இரண்டாவதாக "World Trade Center" என்கிற உலக வர்த்தக மைய கட்டிடங்கள், விமானத் தாக்குதலால் எப்படி அடுக்கிவைத்த சீட்டு கட்டுகள் கீழ் (அவர்கள் சொல்லும் உதாரணம், அடுக்கி வைத்த 'பேன் கேக்' போல என்று) விழுவது போல் விழும், அதை முறையாக வெடி வைத்து தகர்க்காவிடில் என சர்ச்சையை கிளப்பி இருக்கிறது! இடிந்து விழுந்த WTC டவர்கள் 1, 2, மற்றும் 7 (இந்த WTC கட்டிட வளாகம் பற்றி என்னுடய முந்தைய பதிவான'World Trade Center-சமீபத்தில் பார்த்த படங்கள்!'
 என்ற பதிவை படிக்கவும்!) ஆகியவை முறையாக இடித்து தள்ளிய நிகழ்ச்சி போல் தான் இருக்கிறதே தவிர, தீவிரவாதிகளால் ஓட்டி சென்ற விமானம் மோதி தீப்பிடித்ததால் அவைகள், வெப்பம் தாங்காமல் விழவில்லை என கர்ஜிக்கிறது! இந்த கட்டிடம் கட்டுவதற்கான பொருட்களுக்கு சான்று வழங்கிய தரகட்டுப்பாட்டு நிறுவனங்களை அதிலும் துணைக்கழைத்து, விஞ்ஞான, பொறியல் தொழில்நுட்ப காரணங்களோடு விளக்குகிறது( நான் பெரிய எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை கட்டுமான தொழில் துறையில் இருப்பதால், இந்த அமெரிக்காவில் இருக்கும் தரக்கட்டுபாட்டு நிறுவனங்களின் நிர்ணயம், அங்கீகாரம் பற்றி தெரியும். இது மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று, கட்டுமான பொருட்கள் தயாரிப்பாளர்கள், உலக அளவில் அனைவராலும் பின்பற்றி வரப்படுவது, உதாரணத்துக்கு ASTM, ASME, API, NIST, ISA போன்றவற்றின் தரக்கட்டுபாடுகளின் நெறிமுறைகள் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த கட்டுமான பொறியல் துறையில் காலம் தள்ள முடியாது, ஆதாலால், இப்படம் எடுத்துரைக்கும் சில உண்மைகள் நம்ப மறுக்க இயலாது!)

அடுத்து யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் 93 வின் விபத்து பற்றி கூறுகிறது!(இது பற்றி ஒரு ஆங்கில படமும் வந்துள்ளது, வேண்டுமானால் அப்படம் பார்க்கவும், இச்சம்பவம் அனைத்தும் நீங்கள் அழகாக திரைப்படத்தில் பார்க்கலாம்!) அந்த விமானம் 93வால் விபத்தே நிகழவில்லை என சாதிக்கிறது! இது அமெரிக்க ராணுவத்தினரால் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி. இந்த விமான விபத்தில் சிதிலமடைந்த பாகங்கள் எதுவும் மிஞ்சவில்லை என்பது ஆச்சிர்யத்திற்குண்டான ஒன்று என கேள்வி எழுப்புகிறது! விபத்துகளை பற்றி காண்பிக்கப்பட்ட அத்தனை புகைப்படங்களும் ஜோடிக்கப்பட்டவை, விமானத்திலிருந்து, அதுவும் முப்பதாயிரம் அடிக்கு மேல் பறக்கும் பொழுது செல் போனால் பேசுவது சாத்தியமில்லை! ஆக இந்த விமானம் தாக்குதலுக்குள்ளனா போது பயணம் செய்து பயணியர் செல்போன் கொண்டு தத்தம் உறவினர்களை அழைத்து விமானம் கடத்தப்படுவதை சொன்னதாக கூறியது எல்லாம் ஜோடிக்கப் பட்ட கதை என்று கூறுகிறது! (அவர்கள் கூறுவதோ என்னவோ வாஸ்தவமே, நானும் முப்பதாயிரம் அடிக்கு மேலே பறக்கும் பொழுது என் செல் போனை நோண்டி பார்த்திருக்கிறேன், சிக்னல் இருக்கிறது என காண்பிக்கும், ஆனால் பேச முற்பட்டு தொடர்பு கொள்ள முயன்று பலமுறை தோல்வியுற்றிருக்கிறேன்!)

அடுத்து இச்சம்பவங்களால் அடிக்கப்பட்ட கொள்ளைகள், அதாவது முன்பே கூறியது போல காப்பு மோசடி ஊழல்கள் போன்றவற்றால் அடித்த கொள்ளைகள்! அதாவது இச்சம்பவம் நடைபெற சில ஆறு வாரங்களுக்கு முன்னே தான் 'Larry A. Silverstein' என்கிற ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் தொழிலதிபர் இந்த "World Trade Center" கட்டிடங்களை குத்தகைக்கு எடுத்து, இது போன்ற தீவிர வாத கட்டிட விமான தாக்குதலுக்கு எதிரான காப்புரிமை எடுத்தார். ஆக முன்கூட்டியே திட்டமிட்டு குத்தகை எடுத்து காப்புரிமை அதன் பேரில் எடுத்து, இச்சம்பவத்தின் மூலம் பல பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டினார் என்ற குற்றச்சாட்டுடன் திரைப்படம், இச்சம்பவத்துடன் இணைந்த அத்தனை ஊழல்களையும் காண்பிக்கிறது!
 

ஆக இவை அனைத்தும், சுமார் ஒன்றாரை மணி நேரம் ஓடக்கூடிய இத்திரைப்படத்தில் நீங்கள் காணலாம். இந்த டாக்குமெண்டரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விமரிசனம் செய்தும் கண்டன வெப்சைட்களும், இந்த டாக்குமெண்டரி படத்தில் கூறப்பட்ட ஒவ்வொரு விளக்கத்திற்கும் எதிர் விளக்க பதில்களும் சொல்லி தரநிர்ணய கட்டுபாட்டு துறையும் விளக்கி இருக்கும் பக்கங்களையும் நீங்கள் இணையத்தில் காணலாம்! ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த விளக்க உண்மைகளை அமெரிக்க மற்றும் கனடா வாழ் மக்கள் நம்ம ஆரம்பித்துள்ளனர். ஆக மாறி வரும் உலக அரசியலில் நடந்து முடிந்த இந்த சம்பவங்களினால் நம் கண்ணதாசன் பாடியது போல 'யாரைத்தான் நம்புவதோ இந்த புண்ணிய பூமியிலே என புலம்பத்தான் வேண்டும்! இங்கு நடந்து முடிந்த அனைத்து சதித்திட்ட அரசியலும் நமக்கொன்றும் புதிதல்ல! நம் நாட்டில் அன்றாடம் நடப்பது தான்! படிப்பறியா நம் மக்களுக்கு இது போன்ற கண்டுபிடிப்பு விளக்கத் திரைப்படங்கள் ஒன்றும் ஆச்சிரியமில்லை! ஆனால் படித்து முன்னேறிய இந்த பக்க பூமியில், இது போன்ற விளக்க திரைப்படங்கள் பெரும் சர்ச்சையுடன் மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது! ஆனால் நான் கூறியது போல வளர்ந்த தொழில்நுடபத்தினால், சராசரி மனிதனும் திரைப்படமெடுத்து கலக்கலாம்! வார்னர் பிரதர்ஸ், யுனிவர்சல், ஏவிஎம் போன்ற பெரும் திரைப்பட நிறுவனங்கள் தேவையில்லை!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons