19 ஏப்., 2012

புடவை ஜரிகைகளைப் பாதுகாப்பது எப்படி?


பண்டிகை காலங்களில், திருமணங்களில் நாம் விரும்பி வாங்கும் புடவைகள் ஜரிகை உள்ளவை.அது காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் பலரும் அறிந்ததே. இந்த ஜரிகை அழகைத் தேர்வு செய்வதில்தான் அத்தனை நேரம் எடுத்துக் கொண்டு இன்று பெண்கள் துணி எடுப்பதைப் பற்றிய ஜோக்குகள் ஏராளமாக உற்பத்தியாகியுள்ளன.

பட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான்.

ஜரிகை, மற்றும் விலை உயர்ந்த உடைகளை பாதுகாக்க சில குறிப்புகள்:

1.
 விலை உயர்ந்த புடவையோ வேறு எந்த உடையோ வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும்.

2.
 விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் "ஃபால்" தைத்து அணியவும். ஃபாலைத் துவைத்து இஸ்திரிப் போட்டு நல்ல தரமான நூலால் தைக்கவும்.

3.
 அணிந்து கழற்றியவுடனே துணிகளை மடித்து வைப்பதை தவிர்க்கவும். இவ்வாறு செய்தால் துணிகளில் உள்ள வியர்வை கறைகளை ஏற்படுத்தக் கூடும்.

4.
 சாப்பிடும் போது அதிக கவனம் தேவை. ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் லேசாக அந்த இடத்தை சுத்தம் செய்யவும்.

5.
 விலை உயர்ந்த உடைகளை வைக்கும் அலமாரியில் பூச்சிகளை விரட்ட "ஓடோனில்"லை ஒரு துணியில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். அணியும் போது அலமாரியின் வாசனையை தரும்.

6.
 ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயணப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாக அமைகிறது.

7.
 பர்ஃயூம் போன்ற வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.

8.
 அணியும் போது உடைகள் கசங்குவது சகஜம். அதனால் அணிந்தபின் உடைகளை இஸ்திரி செய்து வைக்கவும்.

9.
 விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.

மேற்கொண்ட குறிப்புகள் உங்கள் ஜரிகையை மற்றும் விலையுயர்ந்த உடைகளை நீண்ட நாட்களுக்கு அழகு மாறாமல் பாதுகாக்க உதவும்
Pettagum

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons