10 மே, 2012

இல்லற வாழ்க்கை இனித்திட-சென்னை குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்.


விவாகரத்துகள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் விவாகரத்து கோரி தம்பதிகள் நாடி வரும் சென்னை குடும்ப நலகோர்ட்டில், இனிமையான இல்லறத்திற்கு என்று தலைப்பில் 10 அறிவுரகளை பெரிய போர்டில் எழுதி வைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
சென்னை குடும்ப நல கோர்ட்டின் முதன்மை குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள அறிவுரைகள்:
1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.
2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!
3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.
4. கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.
5. உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.
6. விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.
7. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.
8. செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.
9. இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.
- சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்- அனுசரித்துப் போகுதல்- மற்றவர்களை மதித்து நடத்தல்.
மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ள
10வது அறிவுரை.
விவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், ‘டைவர்ஸ்கேட்டு வரும் ஜோடிகள் டைவர்ட்ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
நன்றி: http://thatstamil.oneindia.in/news/2010/10/25/chennai-family-court-advices-divorce.html
Source : http://arifmaricar.blogspot.com/2010/10/10.html

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons