ஆம்வே - இன்னும் பிற ஏமாற்று வலைகள்
இது பழைய சங்கதிதான். எனினும், இன்றைய அவசரயுக சமுதாயத்திற்கு அறியத்தந்து,
எச்சரிக்கவேண்டிய கடமையுணர்வால் மீள் பதிவுசெய்யப்படுகிறது.
ஒரு நண்பர் என்னை ஆம்வேயில் சேரும்படி விரட்டி கொண்டு இருக்கிறார்****
*சந்தையை வளைக்கும் மூலதனம் என்பதே ஆம்வே*****
தரமான பொருட்கள் ஆனால் 15 ஆயிரம் ரூபாய்க்கு 'டார்கெட்' ஏனிந்த 'டார்கெட்'
கேள்வி கேட்கக் கூடாது உங்களை மில்லியனர் ஆக்கனுமா வேணாமா என கேட்டு 1 மணி
நேரம் மரண மொக்கை போட்டார் எனது சகலையின் நண்பர்.
**
சரி போகுது என சகலைக்காக பொறுத்து பார்த்து பிறகு சந்தை பொருளாதாராம் மறுகாலனி
யாதிக்கம் என்பவை பற்றி வகுப்பு எடுத்ததும் நான் எந்த காலத்திலும் மில்லியனர்
ஆகபோவதில்லை என்றார்.****
இனி இந்தியாவில் பணக்காரர்கள்: ஏழைகள் இரண்டு வர்க்கம்தான் இருக்குமாம் இதில்
சேரவில்லை என்பதால் நான் இரண்டாவது வர்க்கத்தில்தான் இருப்பேனாம்.****
சுவிட்சர்லாந்து பயணத்தையும், ஸ்டார் ஹோட்டல்களில் காலம்போக்குவதையும் வெறு
மனே வங்கி கணக்கை மட்டும் பார்ப்பதையும் செய்யாமல் வேலைக்கு போவது படு முட்டாள்
தனமாம்.****
உலகில் இன்வெஸ்டர்களுக்கு மட்டும்தான் நேரம், பணம், பாதுகாப்பு கிடைக்குமாம்.*
***
அத்தகைய இன்வெஸ்டராகாவிடில் நான் காணாமல் போய்விடுவேனாம். மொத்தத்தில்
மகாலட்சுமியை காலால் உதைக்கிறேனாம். அப்படி பட்ட ஆம்வே என்றால் என்ன என்று
இணையத்தில் படித்தபோது ஒரு நண்பர் இந்த கட்டுரை எழுதி இருந்தார்****
*மலைச்சரிவு*****
இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைத்திருக்கவே இல்லை. நன்றாகப் பழகிக்
கொண்டிருக்கும் நண்பர்களை திடீரென ஏதோ அற்பகாரணங்களுக்காக இழக்க உங்களுக்கு
மனம் வருமா?****
இது என்ன கேள்வி என்கிறீர்களா? வாழ்க்கையில் பல நண்பர்களை நான் அப்படி
இழந்திருக்கிறேன். நீங்களும் பல நண்பர்களை இப்படி இழந்திருப்பீர்கள்.
இழப்பதற்குக் காரணமாகவும் இருந்திருப்பீர்கள். அப்படிப்பட்ட அற்பகாரணங்கள் பல
இருக்கலாம் ஆனால் அவைகளில் முக்கியமானது மல்டி லெவல் மார்க்கட்டிங் எனும்
வியாபாரம் சம்பந்தமாக உங்கள் நண்பர் உங்களை வற்புறுத்தி, அதை நீங்கள் மறுத்து
அதனால் ஏற்படும் சங்கடம் ஆகும்.****
மல்டி லெவல் மார்க்கட்டிங் என்றால் என்ன? ஒரு சட்டை வாங்குங்கள் உங்கள்
நண்பர்களில் நான்கு பேரை அறிமுகப்படுத்துங்கள் உங்களுக்கு பணம் வரும். ஆயுள்
காப்பீடு எடுங்கள், உங்கள் நண்பர்களில் இருவரை அறிமுகப்படுத்துங்கள் உங்களுக்கு
பணம் வரும். மாதமாதம் கைநிறைய சம்பாதிக்கலாம். இப்படியெல்லாம் கவர்ச்சிகரமாய்
விளம்பரம் செய்வார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் விடமாட்டார்கள்.
இந்தக் கொடுமையைப்
புரிய வைத்து மாட்டிவிட ஓரிடத்தில் கூட்டம் வேறு நடத்துவார்கள். நான்
இப்படிப்பட்டவர்களிடம் இந்தமாதிரி பலவற்றைப் பார்த்திருக்கிறேன். இதில் இவ்வாறு
குறைகள் இருக்கின்றன என்றால் அது வேறு இது வேறு நீங்கள் ஒருமுறை மீட்டிங் வந்து
பாருங்கள் என்பார்கள். எனக்கு இந்தமாதிரி நண்பர்களைப் பிடிக்க நேரமில்லை
என்றாலும் விடமாட்டார்கள். நீங்க உங்களை இணைத்துக் கொள்ளுங்கள் மற்றபடி
நண்பர்களைப் பிடிப்பதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்பார்கள்.****
இப்படி தன் அரசாங்க, உயர்பதவிகளைத் தொலைத்தவர்கள் கணக்கிலடங்காதவர்கள்.
உழைப்புக்கு இருக்கும் மரியாதையை கேவலமான ஆள்காட்டி வேலை செய்து
சோம்பேறிகளாகவும் தாந்தோன்றிகளாகவும் மக்களை ஆக்கும் முயற்சி தான் இந்த மல்டி
லெவல் மார்க்கட்டிங். இது இந்தியாவில் எனக்குத் தெரிந்து அறிமுகமானது ஆம்வே
எனும் அமெரிக்க நிறுவனத்தால்.****
ஆனால் இது உலகில் எந்த மூலையில் தோன்றியது தெரியுமா? புரட்சிக்கு முற்பட்ட
இரஷ்யாவில் சில நிறுவனங்கள் சராசரித் தரமுள்ள தமது பண்டங்களை விற்பதற்கு இந்தச்
சாதுரியமான வழியைக் கையாண்டன. அதிகமாக விற்பனை ஆகும் செய்தியேடுகளிலும்
இதழ்களிலும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிடப்படும். உதாரணத்துக்கு, ஒரு
மிதிவண்டி 50 ரூபிள் என்று விற்ற காலத்தில் 10 ரூபிளுக்கு உங்களுக்கு மிதிவண்டி
வேண்டுமா? நாங்கள் தருகிறோம். மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்க,
இவ்வாறு விளம்பரம்
செய்தால் யார்தான் மயங்க மாட்டார்கள். உண்மையில் 10 ரூபிளுக்கு அந்த நிறுவனம்
ஒருவருக்கு அளிப்பது மிதிவண்டி அல்ல. நான்கு சீட்டுக்கள். இந்த நான்கு
சீட்டுக்களையும் அந்த மனிதரின் நான்கு நண்பர்களுக்கு தலா 10 ரூபிளுக்கு விற்க
வேண்டும். பின் அந்த 40 ரூபிளை அந்நிறுவனத்திடம் கொடுத்தால் அவர்கள்
மிதிவண்டியைக் கொடுப்பார்கள். அந்த மனிதர் கையிலிருந்து செய்த செலவு 10 ரூபிள்தான்
ஆனால் அவருக்கு 40 ரூபிளுக்கான மிதிவண்டி கிடைத்தது. அதேபோல் அவரின் அந்த
நான்கு நண்பர்கள் அவர்களின் இதர நான்கு நண்பர்களுக்கு விற்க வேண்டும். இவ்வாறு 10
ரூபிளுடன் அவரவர்களின் நான்கு நண்பர்களையும் சேர்த்து விற்று வந்த காசில்
அவர்கள் மிதிவண்டி வாங்கிக் கொள்கிறார்கள்.****
இதில் மோசடி எதுவுமில்லை என்றே தோன்றுகிறதல்லவா? விளம்பரம் செய்த நிறுவனமும்
அதன் வாக்கை நிறைவேற்றுகிறது. நிறுவனத்துக்கும் இழப்பு எதுவுமில்லை. இதை
சோவியத் இரஷ்யாவில் மக்கள் மலைச்சரிவு என்றே அழைத்தார்கள். சரி ஒன்று நான்கானது
புரிகிறது. நான்கு எவ்வளவாகும், 4 ஷ் 5 =20 ஆகும். அவர்கள் நான்கு நான்கு பேரை
இந்த சரிவில் தள்ளிவிடுவதாய் வைத்துக் கொண்டால் 20 ஷ் 5 =100 ஆகிறது எண்ணிக்கை.
ஆக மொத்தம் 1+4+20+100=125 புதிய ஆட்கள் இந்த மலைச் சரிவில் உருண்டுவிழுந்து
விட்டார்கள்.****
மொத்தம் மிதிவண்டி வாங்கிய 25 நபர்கள் போக ஏனைய 100 பேருக்கு மிதிவண்டி
வாங்கலாம் என்ற நம்பிக்கை மட்டுமே கிடைக்கிறது. மலைச்சரிவு நண்பர்களது குறுகிய
வட்டத்தை உடைத்துக்கொண்டு நகரெங்கும் பெருகிப் பரவுகிறது. ஆனால் ஒவ்வொருவரும்
சீட்டுவாங்கக் கூடிய புதிய ஆட்களைத் தேடிப் பிடிக்க மிகுந்த சிரமத்துக்குள்ளாக
வேண்டிவருகிறது. இந்த வியாபாரத்தில் இழுக்கப்பட்டு மலைச்சரிவில் உருண்டு
விழுவோரின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது.****
1, 4, 20, 100, 500, 2500, 12,500, 62,500 இப்படியாக விரல்விட்டு எண்ணக்கூடிய 8
அடுக்கினில் அறுபதாயிரம் அப்பாவிகளைத் தாண்டிச் செல்கிறது. அடுத்த அடுக்கில்
எத்தனை பேர் தெரியுமா? மூன்று இலட்சத்திற்கும் மேல். இதில் வாங்க
விருப்பமில்லாதவர்கள், இந்தக் கட்டுரையைப் படித்து சுதாரித்துக் கொண்டவர்கள் என
ஒரு கூட்டம் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட இந்தக் கூட்டம் பெருகும் வாய்ப்பை
கொஞ்சம் கொஞ்சமாக இழந்து இப்போது முழுக்க தன் வளர்ச்சியை இழந்து நிற்கும்.
அப்போது ஏமாந்து போனவர்களின் எண்ணிக்கை ஐந்தில் நான்கு பங்காய் இருக்கும்.
இன்னொரு உண்மை என்னவென்றால் மோசடிவேலையை ஆரம்பித்த நிறுவனத்துக்கு இப்போது
முழுக்க இலாபமே. ஏனென்றால் 10 ரூபிள் மட்டும் கட்டி அட்டை வாங்கியவர்கள்
மீதம் நாற்பது
ரூபிளுக்கு ஆள் கிடைக்காமல் ஆப்பு வைக்கப்படும் போது அவர்கள் கட்டிய தலா 10 ரூபிளை
இந்த நிறுவனமே சுவாகா செய்து கொள்ளும். தாங்கள் காசு கொடுத்து வாங்க முடியாத
பண்டத்தைப் பெற ஒவ்வொரு மனிதனும் தன் நண்பரைப் பணயமாக வைத்து வாங்கிக் கொள்ள
நண்பர்களே கிடைக்காதவர்கள் தலையில் நாமம் போட்டு திருப்பதி போய் மொட்டை போடக்
காசு கூட இல்லாத நிலைக்கு வர காரணமாய் அமைந்து விடுகிறார்கள். இரஷ்யாவின் பிரபல
எழுத்தாளர் இந்தக் கூத்தினை “பரஸ்பர மோசடியின் பெரும் பெருக்கு” என்று
குறிப்பிடுகிறார்.****
ஆம்வே ஆரம்பித்த மோசடியில் பல நிறுவனங்களும் குதித்தன. ஒரு காலத்தில் இது
பெருகி வரும் அபாயம் உணர்ந்து இதனை இந்திய அரசாங்கம் தடை செய்திருந்தது. ஆனால்
காசால் அரசாங்கத்தையே விலைக்கும் வாங்கும் நிறுவனங்களால் இந்தச் சட்டம் என்னவான
தென்றே தெரியாமல் போனது. மக்களைப் பாதுகாக்க அரசாங்கத்துக்குள்ள பொறுப்புகளை
அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக அழித்து மக்களை விலை பேசத்
துணிந்திருப்பார் கள் என்பதில் நாம் யாருக்கும் சந்தேகமில்லை.****
இந்த மோசடியில் காப்பீட்டு நிறுவனமாகக் காலடி வைத்துள்ள பஜாஜ் அலயன்ஸ்
நிறுவனமே ஈடுபடுகிறது. ஆயுள் காப்பீடு வேண்டுமா நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஏன் இன்னொருவரை நான் கட்டாயப்படுத்த வேண்டுமென்றால், உங்க ளுக்கு
இலட்சலட்சமாய்ப் பணம் வருகிறது என்று சொல்கிறது. இப்போது இதை பைனரி
மார்க்கட்டிங் என்று பெயர் மாற்றம் செய்துவிட்டனர்.****
அதாவது நான்குபேருக்கு பதில் இருவரை அறிமுகப்படுத்துவது. எதுவாயினும் மோசடி
மோசடிதான். கடைசியில் நண்பர்களை அறிமுகப்படுத்த முடியாதவர்கள் கட்டிய பணம்
அமுக்கிக் கொள்ளப்படும்போது அவர்களின் சாபம் நம்மைச் சும்மா விடாது. இது
அப்பட்ட மான உண்மை காப்பீடே தேவைக்கு அதிகமாகப் போகும் போது அது வெட்டிச் செலவு
ஆகும். கஐஇ, மபஐ போன்ற அரசு நிறுவனங்களில் காப்பீடு செய்வது நமக்குப்
பாதுகாப்பு. சமீபத்தில் ஒரு வங்கி திவாலான போது பொதுத் துறை நிறுவனமான கஐஇ அதன்
வாடிக்கையாளர்களுக்கு பணத்தைத் திரும்ப அளித்தது. மியூட்சுவல் பண்டு எனும்
பரஸ்பர நிதிகளில் கவர்ச்சி விளம்பரங் களைக் காட்டிவிட்டு விளம்பரத்தின்
கடைசியில் வேகமாகப் புரியாத அளவுக்கு கசமுசா கசமுசா என்று ஒருவன் பேசக்
கேட்டிருப்பீர்கள். அதை உன்னிப்பாகக்கேட்டால் மியூட்சுவல் பண்டுகள் சந்தை
அபாயங்களுக்கு உட்பட்டவை முதலீடு செய்யும் முன் பங்குப் பத்திரத்தைக் கவனமாகப்
படிக்கவும் என்பது விளங்கும். ஏன் அதை நிறுத்தி நிதானமாய்ச் சொன்னால் என்ன? அப்போ
எவனாவது அதைப் பார்க்காமல் வாங்கி ஏமாற மாட்டானா என்று அவர்கள்
ஏங்குகிறார்கள் என்றுதானே
அர்த்தம். உழைத்த காசே நிலைக்காத இந்தக்காலத்தில் ஏமாற்றி பெருக்கும் காசு
எம்மாத்திரம்.****
நல்ல நண்பர்களை இந்தமாதிரி மோசடிகளால் இழந்திருப்பீராயின் அதற்காகக் கவலைப்
படாதீர்கள். அப்படிபட்டவர்கள் நல்ல நண்பர்கள் இல்லை. நம்மை விற்க நாம் ஒத்துக்
கொள் ளாததால் இலாபத்தை இழந்து புத்திமாறிப்போன இவர்கள் நமக்கு நண்பராகவே
இருக்கலாகாது. மலைச்சரிவு என்று இந்த மல்டி லெவல் மார்க்கட்டிங் முறைக்குப்
பெயரிட்டது முற்றிலும் சரி. ஆனால் அந்தச்சரிவு ஒன்றில் நீங்கள் யாரும்
விழுந்துவிடாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.****
0 கருத்துகள்:
கருத்துரையிடுக