24 ஜூலை, 2011

எப்போது திருந்தும் ஏர்டெல்?


எப்போது திருந்தும் ஏர்டெல்?

என்னதான் தொழில்நுட்பத்திலும்,சேவையிலும் முதலிடத்தில் இருந்தாலும் வாடிக்கையாளர் களிடம் சரியான அணுகுமுறை இல்லை என்றால் அந்த நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைப்பது மிகவும் கடினம்,ஆனால் தாங்கள் எதிர்பார்த்த துக்கும் அதிகமாக வாடிக்கையாளர்கள் வந்துவிட்டால் அந்த நிறுவனத்தின் அடாவடிச் செயல்களுக்கு அளவே இல்லாமல் போய்விடுகிறது. ஏர்டெல் நிறுவனத்தின் சமீபகால நடவடிக்கைகள் இப்படித்தான் அமைந்திருக்கிறது.

இந்தியாவை பொருத்தவரை செல்போன் துறையில் ஏர்டெல்,ஏர்செல்,வோடபோன்,டாடாஇண்டிகாம்,ரிலையன்ஸ்,ஐடியா,டோகோமோ,எம்.டி.எஸ்,வெர்ஜின்,யுனிநார்,எம்,டி,
என்.எல்,பி.எஸ்.என்.எல்,வீடியோகான் உட்பட பல நிறுவனங்கள் செல்போன் சேவையை அளித்து வருகின்றன.

இதில் ஏர்டெல் நிறுவனம் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதாக நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படிப்பதுண்டு.அதேபோல் மாதம்தோறும் புதிய புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொள்வதிலும் ஏர்டெல் நிறுவனம் தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இதனால் ஏர்டெல் நிறுவனத்துக்கு செல்போன் சேவையில் அசைக்க முடியாத நம்பர் ஒன்இடம் கிடைத்தது.ஆரம்பித்த புதிதில் மொபைல் சேவையை சிறப்பாக வழங்கி வந்த ஏர்டெல் நிறுவனம் சமீபகாலமாக அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதால் அது சேவை அளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டு விட்டது என்பதை விட,வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கும் விதத்திலும்,அவர்களை அணுகும் முறையிலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.விருப்பம் இருந்தா இரு இல்லேன்னா வெளியே போ...என்ற ரீதியில் தான் அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.அதுமட்டுமில்லாமல் அதுதரும் சிறப்பு சலுகைகள் அனைத்தும் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதத்தில் இருப்பதாகவும் உள்ளது. 

உதாரணம் -1
 முன்பெல்லாம் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் உடனே இணைப்பு கிடைத்து விடும், சேவையில் நமக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் எந்தவித சங்கடமும் இல்லாமல் பொறுமையாக பதில்கள் சொல்வார்கள்,ஆனால் சமீபகாலமாக வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் பதிவு செய்யப்பட்ட செய்திகள் முழுவதையும் கேட்டுவிட்டுத்தான் அவர்களை தொடர்பு கொள்ள முடிகிறது.அவ்வாறு தொடர்பு கொள்ள கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் ஆகிவிடுகிறது.

அதே போல்,சேவையில் நமக்கு எந்த சந்தேகம் எழுந்தாலும் முழுமையாக பதில்களை சொல்வதில்லை.மாறாக சொல்லாமல்,கொள்ளாமல் இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒருநாளைக்கு அதிகபட்சம் மூன்று முறைக்கு மேல் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு நீங்கள் சந்தேகம் கேட்டால் அதன் பிறகு நீங்கள் வாடிக்கையாளர் சேவையில் அவர்களுடன் பேச முடியாதபடிக்கு செய்து விடுகிறார்கள்.

உதாரணம் - 2 முன்பெல்லாம் தினம் ஒரு குறுஞ்செய்தி, தினம் ஒரு பிக்சர்மெசெஜ் இவையெல்லாம் நாம் உபயோகப்படுத்த நமது மொபைலுக்கு தினமும் குறைந்தது ஐந்து முறையாவது அந்த லிங்கை அனுப்பு தொல்லை கொடுப்பார்கள்.அதை நாம் தேர்ந்தேடுத்தால் மட்டுமே அதற்கு மாதக்கட்டணம் முப்பது ரூபாயை பிடித்து விட்டு அந்த சேவையை வழங்குவார்கள்.  

ஆனால் சமீபகாலமாக நாம் தேர்ந்தேடுக்காமலேயே அவர்களாகவே நீங்கள் இந்த சேவையை தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி, இதற்குரிய மாதக்கட்டணத்தை நாங்கள் பிடித்தம் செய்துள்ளோம்என்று குறுஞ்செய்தி அனுப்பி இம்சிக்கிறார்கள்.உடனே நாம் அந்த சேவையை துண்டிக்க சொல்லி வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி அதற்குள் அதை நிறுத்தி விடுகிறோம் என்று சொல்லி வைத்து விடுகிறார்கள்.ஆனால் பிடித்தம் செய்த முப்பது ரூபாய் அவ்ளோ தான்.

உதாரணம்
 3  சிறப்புசலுகை' என்ற பெயரில் ஏர்டெல் நிறுவனம் அடிக்கும் கொள்ளைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. 70 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 85ரூபாய் டாக் டைம்' என்று சலுகை தருவார்கள். உடனே அட., கட்டும் தொகையை விட கூடுதலாக பேசும் நேரத்தை தருகிறார்களே? என்று ரீசார்ஜ் செய்து விடக்கூடாது.ஏனென்றால் அந்த முழுத்தொகையையும் அவர்கள் சொல்லும் தேதிக்குள் நாம் பேசி முடிக்க வேண்டும் என்று ஒரு இம்சையை கொடுப்பார்கள் பாருங்கள்,இதைதான் புத்திசாலித்தனமாக ஏமாற்றுவது என்று சொல்வார்கள். நாம் கொடுக்கும் பணத்தின் மதிப்புக்கு பேச அவர்கள் காலக்கெடு விதிக்கிறார்கள்.இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது?

அதேபோல் 120  ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 120 ரூபாய் முழு டாக்டைம் (full talk time)தருவார்கள்.அந்த சலுகை ஒருநாள் மட்டும் என்ற குறிப்புடன் செய்தி வரும், அதனால் பணம் அதிகம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 120 ரூபாய்க்கு ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை ரீசார்ஜ் செய்து கொள்வார்கள்.இதை கவனித்த ஏர்டெல் நிறுவனம் அதற்கும் ஆப்பு வைத்தது.ஆமாம், இப்பொழுதெல்லாம் முதல் ரீசார்ஜ் மட்டுமே முழு பேசும் மதிப்பு (full talk time)  தருகிறார்கள்.அதுவும் கூட முழு டாக் டைமை உடனே தருவதில்லை, 48 மணி நேரத்துக்குள் உங்கள் அக்கௌண்ட்டில் கிரெடிட் செய்யப்படும் என்று சொல்வார்கள்.நமக்கு இருக்கும் வேலைகளில் அவர்கள் மீதி டாக் டைமை கொடுத்தார்களா..? இல்லையா..? என்பதையே நாம் மறந்து விடுவோம்.இதுதான் அவர்களுக்கு வசதியாகிப் போய் விடுகிறது.

இப்படி ஏர்டெல் நிறுவனம் சமீபகாலமாக அதன் போக்கை அதன் வாடிக்கையாளர்களை முமுமையாக ஏமாற்றும்விதமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் "நாம்தான் முதலிடத்தில் இருக்கிறோம் நாம்மை யாரும் அசைக்க முடியாது" என்ற அசட்டு தைரியம் தான்,

சேவையை தருவது மட்டுமே ஒரு நிறுவனத்தின் வெற்றியாகி விடாது அதில் ஒரு துளியாவது உண்மையும்,நேர்மையும் கலந்திருக்க வேண்டும்.அப்போது தான் நம்பர் ஒன் இடம் நிலையானதாக இருக்கும்.தமிழகத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை பார்த்த பிறகாவது ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய மனநிலையை மாற்றிக்கொள்ளும் என்று நம்புவோம். எப்போது திருந்தும் ஏர்டெல்?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons