10 ஜூலை, 2011

தீப்பெட்டி எங்கேடா

பலே விவசாயி-டாக்டர் பாவம்

ஒரு விவசாயி ஆபத்தான நிலையிலிருந்த தன்
மனைவியை ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு 
அழைத்து சென்றார்.
அவரது தோற்றத்தை பார்த்த மருத்துவர்
அவர் மனைவிக்கு சிகிச்சை அளிக்க மறுத்தார்.
இதனை அறிந்து கொண்ட அந்த விவசாயி
ஐயா! நீங்கள் என் பொண்டாட்டியை காப்பாத்துனாலும் சரி,
சாகடிச்சாலும் சரி,எவ்ளோ செலவாகுதோ அதை நான் கட்டுறேன்னு
சொன்னார்.

மருத்துவரும் அவர் பேச்சை நம்பி சிகிச்சையை ஆரம்பித்தார்.
அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் விவசாயியின் மனைவியை
அவரால் காப்பாற்ற முடியவில்லை.
இடிந்துபோனார் விவசாயி.

சிறிது நேரம் கழித்து விவசாயி தன் மனைவியின் உடலை
எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேற முற்பட்டார்.
அவரை தடுத்த மருத்துவர் எங்கே பணம் என கேட்டார்.
விவசாயியோ நான் ஏன் உங்களுக்கு பணம் கட்ட வேண்டும் என்றார்.

நீ முன்பு என்ன சொன்னாய் ஐயா! நீங்கள் என் பொண்டாட்டியை காப்பாத்துனாலும் சரி,
சாகடிச்சாலும் சரி,எவ்ளோ செலவாகுதோ அதை நான் கட்டுறேன்னு 
சொல்லிட்டு இப்போ பணம் கொடுக்காம போற என்றார்
அந்த விவசாயி சொன்ன பதிலில் மருத்துவர் வாயடைத்து நின்றார்.
அவர் கேட்டது-நீங்கள் ஏன் மனைவியை காப்பாற்றினிர்களா?
மருத்துவர்;இல்லை!
நீங்கள் ஏன் மனைவியை சாகடிதீர்களா ?
மருத்துவர்:இல்லை!
பிறகு ஏன் நான் பணம் கட்ட வேண்டுமென்று மனைவியின் உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார் 

தீப்பெட்டி எங்கேடா

மூன்று பேரை குற்றம் செய்ததற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க 
உத்தரவிட்டார் ஒரு அரசர்
 சலுகையாக அவர்கள் விரும்பும் ஒன்றை 10 வருடம் தேவையான அளவிற்கு 
கொடுப்பதாகவும் சொன்னார்
ஒருவர்  10 வருடம் தேவையான அளவிற்கு மது கேட்டார்
இரண்டாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு நல்ல சாப்பாடு கேட்டார்
மூன்றாமவர்  10 வருடம் தேவையான அளவிற்கு சிகரெட் கேட்டார்
அனைத்தும் அளிக்கப்பட்டது
பத்து ஆண்டு கழித்து மூவரையும் அரசர் பார்த்து நீங்கள் விரும்பியதை வைத்து 
இவ்வளவு நாள் சந்தோசமாக இருந்தீர்களா என கேட்டார் 
மூன்றாமவர்= போடாங்கொய்யால சிகரெட் கொடுத்தியே தீப்பெட்டி எங்கேடா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons