5 அக்., 2011

குறுந்தகவல் - தத்துவங்கள்



மெளனம் : 
1. இன்பமான நேரத்தில் மெளனம் - சம்மதம்.
 
2. நண்பர்களை பிரியும்போது மெளனம் - துன்பம்.
 
3. காதலில் மெளனம் - சித்திரவதை.
 
4. தோல்வியில் மெளனம் - சாதனைப்படி.
 
5. வெற்றியில் மெளனம் -அடக்கம்.
 
6. இறுதியில் மெளனம் - மரணம்.
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, 
முட்கள் இல்லாத கடிகாரம் போன்றது.
 
அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை.
மண்ணில் விழுவது தப்பில்லை, 
ஆனால் விதையாக விழுந்து,
 
மரமாக எழு.
“தாயின் வலி தெரிந்து தான் நாமும் அழுகிறோம் - பிறக்கும்போது” 
- இவண் பாசக்கார பயபுள்ள சங்கம்..
இளைஞர்களே கனவு காணுங்கள், 
காதல் “சந்தியா”வை பற்றியல்ல,
 
சிக்கலில் தவிக்கும் “இந்தியா”வை பற்றி...
வெற்றி வந்தால் நம்பிக்கை வரும். 
ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
 
அதனால் நம்பிக்கையை வளர்த்துக்கொள்.
உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே! 
உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார்.
 
வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்..
மாலையில் மரணமென்று தெரிந்தும் 
காலையில் அழுவதில்லை மலர்கள்.
 
நீ மட்டும் சோகங்களை நினைத்து
 
வாடுவதா அழகு
நான் அமைதியை விரும்புகிறேன். 
இதில்
 
நான் - அகந்தை
விரும்புதல் - ஆசை
 
இரண்டையும் விட்டொழி.
 

மீதமிருப்பது
 “அமைதி” - அது உனக்கே.
அவஸ்தை படுவதை மறந்துவிடு, 
ஆனால் ஆசை படுவதை மறந்துவிடாதே!
 
வெற்றிக்கு போராடு.
எப்போதும் அடக்கமாயிரு, 
எல்லாமிருந்தும் அமைதியாக
 
இருக்கும் நூலகம் போல.
வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது உன்னுடன் வரும்.
முடியும்வரை முயற்சி செய். 

உன்னால் முடியும்வரை அல்ல.
 

நீ நினைத்த செயல் முடியும்வரை.....
சாதாரண மனிதன் விழித்திருக்கும் போதும் தூங்குகிறான். 
சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான். - இதில் நீ யார்?
விரும்பிபோனால் விலகிப்போகும், 
விலகிப்போனால் விரும்பிவரும்.
 

விலகிப்போவதை "டோன்ட் கேர்"
விரும்பிவருவதை "டேக் கேர்"
இது ஒரு நட்பு பற்றிய குறுந்தகவல் : 

"நான் நினைக்கும் போதெல்லாம் உனக்கு விக்கல் வந்தால்,
 

நீ என்றோ விக்கியே செத்திருப்பாய்"
சந்தோசத்தில் கை குலுக்க மறந்தாலும், 
சோகத்தில் கண் துடைக்க வருபவனே நல்ல நண்பன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons