5 அக்., 2011

குழந்தை வளர்க்க பெற்றோர்களுக்கு சில டிப்ஸ்:




குழந்தைகளுக்கு சிறு வயது முதலே சூப், ஜுஸ், போன்றவைகளுக்குப் பதிலாக பச்சைக் காய்கறிகள் பழங்களை அதிகமாக சாப்பிடக் கொடுங்கள். இது நல்ல செரிமானத்தை ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். 

எப்போதும் குழந்தைகளை விமர்சிக்கும் போது நெகடி
வ் அணுகுமுறையைக் கையாளாதீர்கள். அவர்களூடைய பலங்களை எடுத்து சொல்லி இன்னும் சிறப்பாக என்னென்ன செய்யலாம் , என்னென்னவற்றைத் தவிர்க்கலாம் என்று எடுத்து சொல்லி ஊக்கம் கொடுங்கள். 

அதே சமயத்தில் ஊக்கம் கொடுத்து, உற்சாகப்படுத்துவது அவசியம் எ
ன்பதற்காக சின்ன சின்ன விஷயங்களை ஏதோ உலக சாதனை போல் புகழ்ந்து தள்ளாதீர்கள். உங்கள் பாராட்டு என்பது, தேவையான அளவிலான நிஜமான பாராட்டாக இருக்க வேண்டும். 

வீட்டில் வேலை செய்பவர்களை ஒரு போதும் மரியாதை குறைவாக பேசாதீர்கள். குழந்தைகளும் அதையே பி
ன்பற்றுவார்கள். இது ரொம்ப தவறு. சக மாணவர்கள் தொடங்கி, எல்லோரிடமும் அன்பாய் இருக்கவும், அதே சமயம் மதிக்கவும் கற்றுத் தாருங்கள்.
குழந்தைகள் மட்டுமே குறிப் பிட்ட அறையை பயன்படுத்தினால், அந்த அறை வண்ணமயமாகக் காட்சி தர வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்தவை கலர் கலரான பொருட்கள். நம் ஆசைகளை சிறிது விலக்கி விட்டு, குழந்தைகள் ஆசைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அவரவர் குழந்தைகள் எதை விரும்புகின்றனரோ அந்த சூழலைத் தர நாம் முயற்சிக்கலாம். 

இதன் மூலம் குழந்தைகள் தங்களின் பாடங்களை அல்லது வேலைகளை குறிப்பிட்ட இடத்தில் செய்யப் பழகுவர்.
 

குழந்தைக்கு "கார்ட்டூன்' இஷ்டம் என்றால் அந்த படங்களைப் போடலாம்.
 

இயற்கையை விரும்பினால் அது சம்பந்தமான படங்களைப் போட்டு அழகுபடுத்தலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்ட குழந்தைகளை, விளையாட்டு வீரர்களின் படங்களைப் போட்டு அவர்களை மகிழ்விக்கலாம்.
 

இப்படியாக, குழந்தைகளின் எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் தருவதன் மூலம் அதை தங்களின் அறையாக பாவித்து பாடங்களை கருத்துடன் படிக்க ஆரம்பிப்பர். படிப்பில் மட்டும் நாட்டம் கொண்ட குழந்தைகளாக இருந்தால் உலகப் படங்கள் போன்ற கல்வி சம்பந்தமான சாதனங்களை வைத்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்.
 

ஓரளவு வசதியிருந்தால், இரண்டு குழந்தைகள் இருக்கும் அறையில் "பங்க் பெட்' என்று சொல்லக்கூடிய அடுக்குக் கட்டில் போன்ற அமைப்பைத் தரலாம். "டிரெயின்' பர்த் போல் ஆசையுடன் படுத்து உறங்குவர்.
 

குழந்தைகளுக்கென தனி ஷோகேஸ், ரீடிங் டேபிள், வார்டுரோப், லான் கார்ப்பெட் என அனைத்தும் கிடைக்கின்றன. தனி இடம் இருந்தாலும் அவரவர் பட்ஜெட் படி அமைத்துக் கொள்ளலாம்.
 

அலமாரிகளில் இருக்கும் இடத்தைப் பொறுத்து, கதைப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள், விளையாட்டுச் சாமான்கள், தினமும் பயன்படுத்தும் துணிகள், புதிய துணிகள், யூனிபார்ம் வகைகள் என்று பிரித்து தனித் தனியாக அடுக்கித் தரலாம். இதன் மூலம் அறை வெளியில் மட்டுமல்லாமல், அலமாரியின் உள்ளேயும் திறக்கும் பொழுதெல்லாம் அழகாக சுத்தமாக இருக்கும்.
 

இடம் சிறியதாக இருப்பவர்கள் இதுபோல் பல்வேறு வேலைகளை ஒரே இடத்தில் வசதியுடன் செய்வதோடு கலையம்சத்தையும் காட்ட முடியும்.
 

ஒரு சிறிய அறையை பேச்சலர்ஸ் ரூமாக, குழந்தைகள் அறையாக, ரீடிங் ரூமாக, ஆபீஸ் ரூமாக அமைப்பதுடன் விருந்தினர் வந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

நம் வீட்டின் அமைப்பு, நம் குடும்ப நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத் தான் அமைகிறது. என்றோ வரும் விருந்தினர்களை நாம் கணக்கிட முடியாது. அனைத்து அம்சங்களும் கொண்ட அறையில், இரண்டு அல்லது மூன்று குஷன் மற்றும் நல்ல கவர்கள், நல்ல தரமான படுக்கை விரிப்புகள் கைவசம் வைத்துக் கொண்டால் போதும். எப்பொழுது விருந்தினர் வந்தாலும் ரெடிமேட் "பெட்' தந்து விடலாம். கீழே ஒரு சிறிய ஜமக் காளம், அதன் மேல் ஒரு மெத்தை, நல்ல ஒரு "சாடின்' விரிப்பை போட்டு விட்டு இரண்டு அதே கலர் கவர் போட்ட குஷன்களை வைத்தால் போதும். பகலில் உட்காரவும், இரவில் படுக்கவும் பயன்படுத்தலாம்.
 

இதேபோல் இட வசதியோ, போதிய பண வசதியோ இல்லாதவர்கள் நல்ல "ஐடியா'வுடன் ரசனையோடு செயல்பட் டால் எந்த இடத்தையும் சுத்தமாக அழகாகக் காட்ட முடியும்.
 

1) குழந்தைகள் அறையில் மருந்து, மாத்திரைகளை கைக்கு எட் டாத இடத்தில் வைப்பது நல்லது.
 

2) கேசட், "சிடி' போன்றவைகளை ஒரு ஸ்டாண்டு வாங்கித் தந்து சிறிய குழந்தைகளை அடுக்கச் செய்து பழக்கினால் சிறு வயதிலேயே அவர்கள் பொருட்களை சரிவர வைக்கக் கற்றுக் கொள்வர்.
 

3) படிக்கும் குழந்தைகள் வாரம் ஒருமுறை தன் அலமாரிகளை தானே துடைத்து பொருட் களை அடுக்கவும், புத்தகங் களை வரிசைப் படுத்தவும் சொல்லித் தரலாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons