முதல் மூன்று மாதங்களுக்கு தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டும் . இல்லாவிட்டால் அபார்ஷன் ஆக நிறைய வாய்ப்புகள் உண்டு. மூன்றாவது மாதத் துவக்கத்தில் முதல் ஸ்கேன் செய்து கருக் குழாயிலிருந்து கர்ப்பப்பைக்கு கரு வந்து விட்டதா என்பதைப் பார்க்க வேண்டும்.
இரண்டாவது ஸ்கேன் மூலம், குழந் தைக்கு நார்மலான, நல்ல இதயத் துடிப்பு இருக்கிறதா என்று பார்ப்பதும் அவசியம். மூன்றாவது ஸ்கேனை 16லிருந்து 20 வாரத்திற்குள் எடுக்க வேண்டும். இது குழந்தையின் அங்க அவயங்கள் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்கு.நான்கு, ஐந்து, ஆறாம் மாதங்களில் சர்க்கரையும், பி.பி., யும் உயர் ரத்த அழுத்தமும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
குழந்தையின் அசைவு நான்காம் மாதத்திலேயே தொடங்கிவிடும். அப்படித் தெரியவில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும். வாரம் அரை கிலோ எடை ஏறுவது தான் ஆரோக்கியமான, சரியான விஷயம். பிரசவ காலத்தில் கடைசி மூன்று மாதங்களில்தான் சரியான எடை கூடும்.
கடைசி மூன்று மாதங்களில் நேராகப் படுக்கக் கூடாது. குழந் தையின் எடை கர்ப்பப் பையை அழுத்தி ரத்த ஓட்டத்தைத் தடுக் கும். இடது பக்கமாகத் திரும்பிப் படுக்க வேண்டும். எப்பொழுது எழுந்தாலும் ஒரு பக்கமாகத் திரும்பி எழ வேண்டும்.எட்டு மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை வயிற்றுக்குள் அசைவு தெரியவில்லை என்றாலோ, வலி இல் லாமல் சிறுநீர் மாதிரி தண்ணீர் போய்க் கொண்டு இருந்தாலோ, சில சமயம் வலியுடன் நீர்போவதும் உணர்ந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
வலித்துத்தான் பிரசவம் ஆகும். ஆகவே வலியைப் பொறுத்துத்தான் ஆக வேண்டும். மருத்துவருடன் ஒத்துழைத்தால் நார்மலாகப் பிரசவம் ஆகும்; சிசேரியனைத் தவிர்க்கலாம். ஏதோ ஒரு சிக்கலான காரணத்துக்காக தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிசேரியனுக்கு அட்வைஸ் செய்தால், அது தாய் சேய் நலத்திற்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; பயப்படக்கூடாது.
1 கருத்துகள்:
உங்கள் blogspot மிகவும் அருமையாக உள்ளது .நன்றி நண்பரே
www.srisairamacademy.blogspot.com
கருத்துரையிடுக