12 ஜன., 2012

மொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்! கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க!!


·         சார்… உங்க மொபைல் ரிங் டோன் சத்தம் உங்களுக்கு கேட்டால் மட்டுமே போதும். சும்மா ஊரையே கூப்பாடு போடற மாதிரி வைக்க வேண்டாம்.

தேவையிலாத இடத்துல லவுடு ஸ்பீக்கர் போடாதிங்க.. அது உங்களுக்கும் இடைஞ்சல். உங்கள சுத்தி இருக்கறவங்களுக்கு இம்சை.
 அதோடு உங்களுக்கு பிரச்சனையும் வர வாய்ப்பு உள்ளது.

அடுத்தவங்க மொபைல் போனை தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. அப்படி யூஸ் பண்ற நெலமை வந்துச்சுன்னா அந்த மொபைல் போனை நோன்டாதிங்க. அதுல இருக்கற எஸ் எம் எஸ் பாக்கிறது, பிக்சர்ஸ் பாக்கிறது, போன்ற விசயங்களை தவிர்த்துருங்க.
·          
·         அப்புறமா கான்பிரன்ஸ் கால் ஒருவருக்கு தெரியாம போடாதிங்க. எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணிட்டு கான்பிரன்ஸ் போடுங்க. அது உங்களுக்கும் நல்லது எதிர் தரப்புக்கும் நல்லது.
·          
·         ஸ்க்ரீன் சேவர் படங்கள் வச்சிருப்பிங்க. அதுல என்ன வச்சிருக்க கூடாது என்ற விசயத்தில் கவனமா இருங்க. நடிகர், நடிகைகள், சாமியார்கள் போன்றோர்களின் படங்களை வைத்து நீங்கள் இப்படித்தான் என மற்றவர்கள் நினைக்கும் படி வைக்காதிங்க.
·          
·         ஆபீஸ் லீவு, இறப்பு அறிவிப்பு, விபத்து போன்ற சில விசயங்களை எஸ் எம் எஸ் மூலமா அனுப்பாதிங்க. கால் பண்ணி பேசிருங்க. அது தான் நல்லது.
·          
·         ஒருத்தருக்கு கால் பண்றதுக்கு முன்னாடி நாம் பேச வேண்டிய விஷயத்தை தெளிவா சுருக்கமா செய்தியோட முக்கியத்துவத்தை தெரிஞ்சு வச்சிட்டு பேசணும்.
·          
·         தேவையான விசயத்த மட்டும் பேசுங்க… தேவையில்லாத அரட்டையை கொறச்சுக்கங்க. தேவையில்லாத அரட்டையினால மொபைல் பேலன்ஸ் கொறஞ்சும், டைமும் வேஸ்டா போயிரும்.
·          
·         ஆபீசில் உங்கள் மேல் அதிகாரிக்கு தெரிவிக்கும் அன்றாட விசயங்களை தினமும் போன் செய்து இன்பார்ம் செய்யாமல் அவர் அனுமதி வாங்கி எஸ் எம் எஸ் அனுப்பிருங்க. அவரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தாலும் தொந்தரவு இல்லாம சொல்ல வேண்டிய செய்தியை சொல்லிரலாம்.
·          
·         போன் பேசும் போது தேவையிலாத சத்தங்களை கொறச்சு வச்சிருங்க. டி வி, ரேடியோ போன்றவைகளின் சத்தத்தை கொறைங்க. அதனால் எதிர் தரப்பில் பேசுபவர்க்கு தேவையில்லாத தொந்தரவை தவிர்க்கும்.
·          
·         வெரி லோ பேலன்ஸ், லோ பேட்டரியில் சுவிட்ச் ஆப் போன்ற நிலைகளை தவிர்க்க பாருங்க. இதனால சில முக்கிய கால்கள் பேச முடியாமல் போயிரும்.
·          
ஆபீஸ்ல உங்க மொபைல் பில்லை கட்டினாலும் நீங்க வரைமுறை தாண்டாம அளவா யூஸ் பண்ணுங்க. தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. கரெக்டா யூஸ் பண்ணினா உங்களை பத்தி ஆபீசுல நல்ல நேம் கிடைக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons