5 ஜூன், 2011

மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்


மொபைல் போனில் பேட்டரி சிக்கனம்

போனில் நம்மை வேலை வாங்கும் ஒரு விஷயம் பேட்டரி சார்ஜ் செய்வதாகும். வேலைப் பளுவில் சார்ஜ் செய்திட மறந்து போனால், அடுத்த நாள் சரியான நேரத்தில்  மொபைல் பேட்டரி காலை வாரிவிடும். அலுவலக வேலையைப் பார்ப்போமா? மொபைல் சார்ஜ் செய்திட  மின்சாரம் கிடைக்கும் ப்ளக் சாக்கெட்டினைத் தேடுவோமா? தேடிச் சென்றாலும், அங்கு ஏற்கனவே ஒருவர் தன்னுடைய மொபைல் போனை மாட்டி வைத்து சார்ஜ் செய்து கொண்டிருப்பார். இதுவே பயணித்துக் கொண்டிருந்தால், கூடுதல் தலைவலி. இவ்வளவு ஏன்? ஓரளவிற்குச் சில வழிகளைக் கடைப்பிடித்து, மொபைல் போன் பேட்டரியின் திறனை மிச்சப்படுத்தும் வழிகளைப் பார்க்கலாமே!
1.
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்திடுகையிலும், பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்திடுங்கள். 
2.
தேவைப்படாத அப்ளிகேஷன்களை மூடி வைக்கவும். இல்லையேல் அந்த அப்ளிகேஷன் செயல்படுத்தப்படாமல் இருந்தாலும், கணிசமான மின்சாரத்தினைச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்.
3.
புளுடூத் வசதியினை, நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், இயக்கத்தை நிறுத்தி வைக்கவும். இதனால் அதிகமான அளவில் பேட்டரியின் சக்தி மிச்சமாகும்.  ஏனென்றால், நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், நீங்கள் நடந்து அல்லது வாகனத்தில் செல்கையில், புளுடூத் இயங்கும். ஒவ்வொரு போன் அல்லது மற்ற சாதனங்களுடன் இணைப்பினை உங்கள் மொபைல் போன் ஏற்படுத்திக் கொண்டு, பேட்டரியைக் கரைத்துக் கொண்டிருக்கும்.
4.
ஆட்டோ பிரைட்னஸ் செட்டிங் ஏற்படுத்தி இருந்தால், அதனை நீக்கவும். பேக் லைட்டிங் லெவல் கூடுதலாக இருந்தால் அதனைக் குறைத்து அமைக்கவும். 
5. 3
ஜி சேவைக்கென செட் செய்யப்பட்டிருந்தால், 3ஜி சேவை இல்லாத இடங்களில், அதனை நிறுத்திவிடலாம்.
6.
ஜி.பி.எஸ். மற்றும் லொகேஷன் சேவை பயன்படுத்தப்படாமல் இருக்கையில், அவற்றை நிறுத்திவிடலாம்.
7.
ஸ்கிரீன் டை அவுட் இன்டர்வெல் என சில போன்களில் ஒரு வசதி தரப்பட்டிருக்கும். இதனை மிகக் குறைந்த அளவில் வைத்து அமைக்கவும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons