20 ஜூன், 2011

அல்லாஹ்விடம் கையேந்துவோம்


அல்லாஹ்விடம் கையேந்துவோம்

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

யா அல்லாஹ் ! என் பாவங்களில் சிறியது, பெரியது, முதலாவது, கடைசியானது, பகிரங்கமானது, மறைவானது ஆகியவற்றை எனக்காகப் பொருத்தருள்வாயாக.(முஸ்லிம்) 

யா அல்லாஹ் ! உன் பொருத்தத்தைக் கொண்டு உன்னுடைய கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பைக் கொண்டு உன்னுடைய தண்டனையிலிருந்தும் நிச்சயமாக நான் காவல் தேடுகிறேன். இன்னும் உன்னைக் கொண்டு உன்னிலிருந்து காவல் தேடுகிறேன். உன்னை வரையறுத்துப் புகழ்ந்திட நான் சக்திபெறமாட்டேன். நீயோ உன்னை நீ புகழ்ந்தது போன்றே உள்ளாய். (முஸ்லிம்) 

யா அல்லாஹ் ! எனக்காக பாவம் பொருத்தருள்வாயாக ! எனக்கு அருளும் செய்வாயாக ! எனக்கு நேர்வழியும் காட்டுவாயாக ! (நல்லறங்கள் செய்ய) என்னை நிர்பந்திப்பாயாக ! எனக்கு சுகத்தையும் நல்குவாயாக ! (சம்பத்துகளை) எனக்கு நல்குவாயாக ! (சுவனத்தில்) எனக்கு உயர் பதவியில் ஆக்குவாயாக ! (திர்மிதி) 

யா அல்லாஹ் ! நிச்சயமாக நான் கப்ரின் வேதனையிலிருந்து உன்னைக் கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலுடைய குழப்பலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன். என் வாழ்வு மற்றும் மரணத்தின் குழப்பத்திலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன். யா அல்லாஹ் ! நிச்சயமாக நான் பாவம் மற்றும் கடன் தொல்லையிலிருந்து உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன். (புஃகாரி)

யா அல்லாஹ் ! நிச்சயமாக நான், அநேக அநியாயங்களை எனக்கு நானே செ;யதிருக்கிறேன், உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யாருமில்லை, ஆகவே என்னுடைய பாவத்தை மன்னித்தருள்வாயாக ! எனக்கு அருளும் செய்வாயாக ! நிச்சயமாக நீ தான் மிக்க மன்னிப்பவக், பெருங்கிருபையாளன். (புஃகாரி) 

யா அல்லாஹ் ! நான் முற்படுத்தியவற்றை , பிற்படுத்தியவற்றை, நான் மறைத்தவற்றை, பகிரங்கப்படுத்தியவற்றை, நான் வீண் விரயம் செய்தவற்றை, என்னைவிட அதுபற்றி நீ மிகவும் அறிந்தவற்றை ஆகிய அனைத்தையும் எனக்காக நீ பொருத்தருள்வாயாக ! நீ தான் (நன்மைகளைச் செய்ய) முற்படுத்தி வைப்பவன், நீயே (தீயவற்றைச் செய்யாது காத்து) பிற்படுத்தி வைப்பவன். வணங்கப்படுபவன் உன்னையன்றி (வேறு எதுவும், எவரும்) இல்லை. (முஸ்லிம்)

யா அல்லாஹ் ! உன்னை நினைவுகூர, உனக்கு நன்றியும் செலுத்த, உன்னுடைய வழிபாட்டையும் அழகிய முறையில் செய்ய எனக்கு நீ உதவி செய்வாயாக! (அபுதாவூது) 

யா அல்லாஹ் ! நிச்சயமாக நான் கருமித்தனத்திலிருந்து(கஞ்சத்தனத்திலிருந்து) உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன், கோழைத்தனத்திலிருந்தும் உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன், தள்ளாத வயதின்பால் தள்ளப்படுவதிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன், இவ்வுலக குழப்பம் மற்றும் கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன்.(ஃபத்ஹுடன் புகாரி) 

யா அல்லாஹ் ! நிச்சயமாக நான் சுவனத்தை உன்னிடம் கேட்கிறேன், உன்னைக் கொண்டே நரகத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். (அபுதாவூது)

யா அல்லாஹ் ! நிச்சயமாக நான் உன்னிடம் பயன் தரக்கூடிய கல்வி, சுத்தமான (ஹலாலான) உணவு, (உன்னிடம்) அங்கிகரிக்கப்படும் நல்லறம் ஆகியவற்றைக் கேட்கிறேன். (இப்னுமாஜா) 

யா அல்லாஹ் ! நீதான் என் இறைவன், வணங்கப்படுபவன் உன்னையன்றி (வேறு எதுவும், எவரும்) இல்லை, என்னை நீ படைத்தாய், நானோ உன்னுடைய அடிமை, இன்னும், என்னால் இயன்றவரை உன்னுடைய உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது உள்ளேன், நான் செய்தவற்றின் தீமையிலிருந்து உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன், நீ எனக்கு வழங்கிய உன்னுடைய அருட்கொடைகளை ஒப்புக்கொள்கிறேன், என் பாவத்தையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என் பாவத்தை பொருத்தருள்வாயாக! ஏனெனில், உன்னைத் தவிர பாவங்களை மற்றெவரும் பொருத்தருளமாட்டார்.(புகாரி)
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons