5 ஜூன், 2011

லேப்டாப் வாங்க போகிறிர்களா ?


லேப்டாப் வாங்க போகிறிர்களா ?

இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். நமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும்.
கடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்: 
கடைக்காரரிடம் அவை Unlock செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் கேளுங்கள். திடமான, உறுதியான ஆனால் பாரமில்லாத மடிக்கணணிகளை தெரிவு செய்யுங்கள். கீபோர்ட்டை உபயோகித்துப் பாருங்கள். உங்களுக்கு அது சௌகரியமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மேசை மற்றும் உங்கள் மடி மீது வைத்து இயக்கி பரிசோதித்துப் பாருங்கள். Pointing Device, Track Pad போன்றவற்றையும் மாற்றீடாக உள்ள மவுசைனையும் பரிசோதித்துப் பார்க்க மறக்க வேண்டாம். Track Ball, External mouse களை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்வதற்கு அது உகந்ததல்ல.
மடிக்கணணி பயன்பாட்டில் இருக்கும் போது அளவுக்கதிகமாக சூடாகிறதா என்று அவதானியுங்கள். ஒருவேளை உங்கள் மடியில் வைத்துப் பாவிப்பதாலும் இந்தப் பிரச்சினை எழக்கூடும். Screenஇன் அளவு மற்றும் Resolution போன்றவை மீதும் கவனத்தை செலுத்துங்கள்.
தற்போதைய LCD Screen கள் 13 முதல் 21 இஞ்ச் அளவுகளில் கிடைக்கின்றன. Screen Resolution மிகக் குறைந்தது 800-600 pixels முதல் 1600-1200 pixels வரை இருக்கக்கூடும். பலதரப்பட்ட Settingsகளை செய்து Screenஐப் பார்வையிடுங்கள். சாதாரண அறையினுடைய வெளிச்சத்தில் நன்றாகத் தெரியக்கூடிய Settings அதிக வெளிச்சம் அல்லது குறைந்த வெளிச்சத்தில் மிக மோசமாகத் தெரியக்கூடும்.
USB2 மற்றும் Firewire Connection இருக்கக்கூடிய மடிக்கணணிகளைத் தெரிவு செய்யுங்கள். இவை iPods, Digital iPods, Digital கமெராக்கள் மற்றும் சில கைத்தொலைபேசிகளை இணைக்க செய்வதற்கு பயன்படுகின்றன.
இணைய இணைப்புகளைப் பெறுவதற்கு வயர்களைப் பயன்படுத்துவதை விட Wireless Network Card பயன்படுத்தலாம். Bluetooth இணைப்பு இருப்பின் அதுவும் சிறந்தது தான். DVD Burner உள்ளதா என்பதையும் அவதானியுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons