பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது
தேன் என்றாலே உயர்வானது , எல்லா வியாதிக்கும் அருமருந்து என்ற கருத்து பரவலாக உள்ளது . ஆனால் தேன் மலரில் உள்ளபோது சுத்தமாகவே உள்ளது பின்பு தேனீயால் எடுக்கப்பட்டு தேன்கூட்டில் சேகரிக்கப்பட்டு அதனை எடுத்து நாம் உபயோகிக்கும்போது அதில் அல்லேர்ஜியை உண்டாக்கும் மகரந்த தூள்களும் , மிக கடுமையான பொடுலிசம்(BOTULISM ) என்ற வியாதியை உண்டாக்கும் Clostridium bacteria இருக்கலாம் .
எனவே குழந்தைகளுக்கு குறிப்பாக ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் தரவே கூடாது .
BOTULISM வந்தால் தெரியும் அறிகுறிகள் :(பச்சிளம் குழந்தைகள் )
உடல் தளர்ச்சி -குழந்தையை தூக்கினால் விறைப்பாக இல்லாமல் தளர்வாக இருப்பது
பால் குடிக்க மறுப்பது
சோம்பலாக அழுவது (WEAK CRY )
மலச்சிக்கல்
எனவே தேனை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு வயது குறைவான குழந்தைகளுக்கு உபயோகிக்க கூடாது .
அலர்ஜி , ஆஸ்த்மா உள்ள குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு பின்னும் தேன் தராமல் இருப்பது நல்லது