31 மே, 2011

சொந்த சரக்கில்லை!!...



சொந்த சரக்கில்லை!!...

சுட்ட குறுந்தகவல்களிலிருந்து: 
மனைவி ஊருக்குச் சென்றிருந்தார்.  கணவர் தன் மனைவி மேல் இருக்கும் கோபத்தை சுதந்தரமாகக் காட்ட நினைத்து, மனைவியின் படத்தை வைத்து, தூரத்திலிருந்து அதன் மேல் டார்ட்ஸ்(darts) அடித்துக் கொண்டிருந்தார்.  எதுவும் சரியாகப் படத்தின் மேல் படவில்லை.  அப்போது மனைவியிடமிருந்து கைப்பேசி அழைப்பு - " என்ன செய்ஞ்சுட்டிருக்கீங்க?" என்று மனைவி கேட்க, 'உன்னை மிஸ் செய்ஞ்சுட்டிருக்கேன்" என்று கணவர் 'உண்மையாக' பதிலளித்தார்!!.

(
பெண்ணீயவாதிகளுக்காக ஒரு அடிஷன்: மனைவி அந்தப் பக்கம், 'நான் உங்கள் ஃபோட்டாவை பக்கத்தில்தான் வைத்துக் கொண்டிருக்கிறேன் - உங்களை மிஸ் பண்ணலை!' என்றாள்!!)
***********************************************************************************
அமெரிக்காவில் ஒரு தந்தை தன் மகனிடம் அவன் திருமணம் செய்து கொள்ள, தான் ஒரு பெண்ணைப் பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.  மகன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள முடியாதென்றான்.  பெண்ணின் தந்தை பில் கேட்ஸ் என்று தந்தை சொல்லவும்மகன் ஒத்துக் கொண்டான்!  

பின்னர், தந்தை பில் கேட்ஸிடம் போய் அவர் மகளைத் தன் மகனுக்கு மணம் முடிக்கக் கேட்க, பில் கேட்ஸ் மறுத்தார்! 'மாப்பிள்ளை வேர்ல்ட் பாங்கின் CEO வாக இருந்தாற்கூடவா மறுப்பீர்கள்?' என இந்த வியாபாரத் தந்தை கேட்க, பில் கேட்ஸ் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்!

இந்தத் தந்தை அடுத்துச் சென்றது வேர்ல்ட் பாங்கின் தலைவரிடம்.  அவரிடம் தன் மகனுக்கு CEO வேலை கேட்டார் - தலைவர் மறுக்க, 'பில் கேட்ஸின் மாப்பிள்ளைக்கு இந்த வேலையைத் தர மாட்டீர்களா?' என்று தந்தை கேட்டார்! பிறகென்ன, வேலையும் கிடைத்தது!

இதற்குப் பெயர் தான் பிஸினஸாம்!
####################################################################
காதலி தன் காதலனிடம், 'என் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வாங்கியிருக்கிறீர்கள்?' எனக் கேட்டாள்; காதலன், 'அதோ, அங்கு செக்கச் செவேல்னு ஒரு BMW கார் நிற்குதில்லையா,..' என்று ஆரம்பித்தவுடன், காதலி, 'அடடா, உங்களுக்கு என் மேல் எத்தனை அன்பு!' என்று சொன்னாள்.  கலவரமடைந்த காதலன், 'அந்தக் கலரில் nail polish வாங்கியிருக்கேன்!' என்று கூறி முடித்தான்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மதிப்பெண்கள் குறைந்த மகனிடம் அப்பா காரணம் கேட்டார்; மகன்- 'ஒரு டீச்சர் எல்லா சப்ஜெக்டையும் நடத்த முடியாத போது, ஒரு ஸ்டூடண்ட்டை மட்டும் எல்லா சப்ஜெக்டையும் படிக்கச் சொல்வது என்ன நியாயம்?' என்று கேட்டான்!!
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
ஒரு பள்ளியில் அனைவரும் இனி ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என ஆணையிடப்பட்டது.  அவ்வளவாக ஆங்கிலம் தெரியாத ஒரு பி.டி. மாஸ்டர் மாணவர்களிடம் பேசியதிலிருந்து:
1. There is no wind in the football
2. I talk, he talk, why you middle talk?
3. You rotate the ground 4 times
4. You go and understand the tree
5. Bring your parents with your mother and father
6. Why haircut not cut?
7. Stand in a straight circle

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்.. 
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.. 
மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும் போது இவன் சென்றிருக்க வேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்.. 
மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும் 
காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்". 
இவன் அடுத்தபடியாக கேட்டான்,, 
"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"
என்னப்பா ஆச்சு.. ஏன் இப்படி ஓடி வரே.. ?
ஒரு பெரிய எருமைமாடு என்னை துரத்துச்சுப்பா.. வடிவேலு போல ஸ்பீடை
குறைக்காம வந்துகிட்டு இருக்கேன்.. அதுவும் விடாம துரத்துது.. இடையில் ரெண்டு மூணு தடைவை வழுக்கி கீழே கூட விழுந்துட்டேன்.. நல்லவேளை தப்பிச்சேன்..
ஏயப்பா.. கில்லாடிதாண்டா நீ..! நானா இருந்தா அந்த மாட்டைப்
பார்த்ததும் பயத்தில கழிஞ்சிருப்பேன்..!
நானும்தாண்டா.. நான் வழுக்கி விழுந்தது எப்படின்னு நினைச்சே..?

காட்டு ஆமை: நீ கூப்பிட்ட அந்த படத்துக்கு என்னால வர முடியாது?
கிராம ஆமை: ஏன்?
காட்டு ஆமை: அது தான் "நாட்டாமை" ஆச்சே...

"ஏண்டா...பொய் சொன்ன?" "இனிமேல் இப்படி பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லு" என மகனை அடி அடியேன அடித்தார் தந்தை.
"இனி மேலும் பொய் சொல்வேன் அப்பா" என்று அழுதுகொண்டே சொன்னான் மகன்.
தந்தை திகைத்து போய், "ஏன்டா, இம்புட்டு அடி வாங்கியும் ஏண்டா இப்படி சொல்ற?" என்றார்.
பையன் சொன்னான், "இனிமேல் பொய் சொல்ல மாட்டேன் என சொன்னால் அது பொய் தானே அப்பா"

காதலி: நம் பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம், இல்லையேல் தற்கொலை தான்..
காதலன்: (மனசுக்குள்) ம்க்ஹும், எனக்கு ரெண்டுமே ஒன்னு தான்.

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்?
மாணவி: அது கொசு இல்லா காலம் சார்!

ஆசிரியர்: அக்கால ஆட்சி முறைக்கும், இக்கால ஆட்சி முறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மாணவி: அக்கால ஆட்சிமுறை "கல்வெட்டு" ஆட்சி. இக்கால ஆட்சிமுறை "கட்-அவுட்" ஆட்சி.

ராமு: உன் காதலி உனக்கு மோதிரம் பரிசாக கொடுத்தாளே! என்ன சொல்லி கொடுத்தா?
சோமு: நாலு கை மாறி வந்த ராசியான மோதிரம் என சொல்லி கொடுத்தாள்.

ராமு: டேய்...நான் டி வி இல தெரின்சேண்டா.
சோமு: எப்ப, எத்தன மணிக்கு?
ராமு: நேத்து சாயங்காலம் அஞ்சு மணிக்கு...
சோமு: அப்ப தான் கரண்ட் இல்லையேடா..
ராமு: அப்பத்தான் டி.வி. கண்ணாடியில தெரிஞ்சேன்.

ஆசிரியர்: தண்ணியில என்ன இருக்கு? சொல்லு பார்ப்போம்.
மாணவன்: குடிக்கிற தண்ணியிலயா, இல்ல போடற தண்ணியிலயா?

அரசியல்வாதி: மாணவர்களே! நீங்க யாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்.
மாணவர்கள்: ஏன்?
அரசியல்வாதி: நாங்கள் யாரவது படிப்பில் ஈடுபடுகிறோமா?

சமையல்காரர்: உங்க வீட்டில் நான் சமைக்கனும்னா ஒரு கண்டிசன்?
வீட்டுக்காரர்: என்ன கண்டிசன் சொல்லு.
சமையல்காரர்: இங்க வீட்டுல என்னை சாப்பிட சொல்லக்கூடாது.

ராமு: ஏண்டா, சோகமா இருக்க?
சோமு: என் பொண்டாட்டி கார் டிரைவரோட ஓடிப் போய்ட்டா.
ராமு: இதுக்கு தான் கவலையா இருக்கியா? வேற கார் டிரைவரை வச்சுக்கற வேண்டியது தானே!

"குடிகாரர்கள் எல்லோரும் தலைவர் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்காங்களே? எதுக்கு?"
தலைவர் கிட்ட சரக்கு இருக்குன்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க, அதான்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons