வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part II
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
கை விரல்களின் மூலம் பாதிக்கப்பட்ட உடல் உறுப்பை அறியும் விதத்தையும் அதனால் பாதிக்கப்படும் பகுதிகளையும் சென்ற தொடரில் பார்த்தோம். இந்த PART-II தொடரில் கால் விரல்கள் மூலம் எந்தெந்த உறுப்பின் பாதிப்பு நிலைகளை அறியலாம் என்பதை பார்ப்போம், இன்ஷா அல்லாஹ். மண்ணீரல் (SPLEEN) கல்லீரல் (LIVER), வயிறு (STOMACH), பித்தப்பை (GALL BLADER), சிறுநீர்பை (URINARY BLADER), சிறுநீரகம் (KIDNEY). இந்த உறுப்புக்கள் அனைத்தின் சக்தி பாதைகளும் கால் வழியே செல்கின்றன. இந்த உறுப்புக்கள் அனைத்ததும் ஆரோக்கியமாக இருந்தால் நமது கால்களும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், நாமும் கவிதை பாடும் கால்களுக்கு சொந்தக் காரர்களாக இருப்போம். மண்ணீரல் (SPLEEN) கால் பெரு விரலின் நகத்தின் வெளிப் பக்க ஓரத்தில் ஆரம்பித்து உள்ளங் கால் வெள்ளை நிறமும் புறங்கால் (பாதத்தின் மேல் பகுதி) நிறமும் சேரும் பாதை வழியாக கனுக்கால் பக்கமாக மேல்நோக்கி தொப்புளிலிருந்து 4 இன்ச் தூரத்தில் செல்லும் இந்த சக்தி பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் மண்ணீரல் சம்பந்தப்பட்டவை. கல்லீரல் (LIVER) கால் பெருவிரல் நகத்தின் மேல் பகுதியின் தோலும் நகமும் சேரும் மையப் பகுதியில் ஆரம்பித்து காலில் உள் பக்க ஓரமாக, முழங்கால் ஓரமாக சென்று மார்பு காம்புக்கு கீழே முடிகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் பிரச்சினைகள் எல்லாம் கல்லீரல் சார்ந்தவையாகும். வயிறு (STOMACH)கால் பெருவிரலுக்கு பக்கத்து விரலின் நகத்து ஓரத்தில் முடிவடையும் இந்த சக்தி ஓட்ட பாதை காலில் புறங்கால் பக்கமாக கால் எலும்பை ஒட்டி முழங்கால் வெளிப்பக்க வழியாக செல்கின்றது. கண் கீழ் இமை மைய பகுதியில் ஆரம்பிக்கின்றது இந்த சக்தி ஓட்டம். இந்த பாதை செல்லும் பகுதியில் ஏற்படும் அனைத்து நோயின் அறிகுறிகளும் வயிறு சம்பந்தப்பட்டவைகளாக இருக்கும். அதிகமானோர் இந்த சக்தி ஓட்ட பாதையில் ஏற்படும் பிரச்சினையில் பாதிக்கப்படுகின்றனர். பித்தப்பை (Gall Bladder) கண்ணின் ஓரத்தில் ஆரம்பிக்கும் இந்த சக்தி ஓட்ட பாதை தலையில் சைடில் ஒரு வட்டமடித்து வயிற்று பகுதி வழியாக கீழிறங்கி வெளிப்பக்க தொடை மைய பகுதி வழியாக முழங்கால் வெளிப்பக்க ஓரமாக வந்து பிறகு கால் வெளிப்பக்க மைய பகுதி வழியாக சென்று கால் சுன்டு விரல் பக்கத்து விரலின் நகத்து ஓரத்தில் முடிவடைகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த பித்தப்பை சக்தி ஓட்ட பாதையில் ஏற்படும் தடங்களே காரனமாகும். ஒற்றை தலைவலிக்கு கதாநாயகனே இந்த சக்தி ஓட்ட பாதை தான். மசாலா பொருட்களை அதிகம் சாப்பிட்டால் இந்த பாதையில் அதிகம் பாதிப்பு ஏற்படும். இரவு 11 மணிக்கு தூங்காமல் விழித்திருந்தாலும் இந்த பாதையில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதையில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. சிறுநீர் பை (URINARY BLADER)"நீர் இன்றி அமையாது உலகு" "சிறுநீர் பை சக்தியின்றி ஆரோக்கியமாகாது உடம்பு" ஆம்,உடல் முழுவதும் பரவியிருக்கும் ஒரு மாபெரும் சக்தி ஓட்ட பாதை. ஏகப்பட்ட புள்ளிகளை தன்னகத்தே கொண்டு அழகாக ஆட்சி செய்யும் சக்தி ஓட்ட பாதை கண்ணின் ஓரமும் மூக்கின் ஓரமும் சந்திக்கும் இடத்தில் ஆரம்பித்து முதுகு பகுதியில் பரவி கால் கீழ் பகுதி வழியாக சென்று சுன்டு விரல் ஓரத்தில் முடிவடைகின்றது. கால் பின்பக்க பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் முழங்கால், முழங்கால் கீழ் ஏற்படும் பிரச்சினைகளும் தொடை பின்பக்கம் ஏற்படும் பிரச்சினைகளும் இந்த சக்தி ஓட்ட பாதையைச் சார்ந்தது. BACK PAIN இடுப்பு வழியின் துயரத்தை துடைத்து எறியும் ஓர் அற்புத பாதை. உடம்பில் எங்கெல்லாம் சூடு, எரிச்சல் ஏற்படுகின்றதோ உடனே நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு முடிவு செய்துக் கொள்ளலாம் அது சிறுநீர் பைக்கும் அது சம்பந்தப்பட்ட உறுப்புக்கும் அல்லது சம்பந்தப்பட்ட பகுதிக்கு தொடர்பு இல்லை என்று. கண் எரிச்சல், தலையில் சூடு, வயிற்று எரிச்சல் (மற்றவர்களின் முன்னேற்றத்தைப் பார்த்து வரும் வயிற்று எரிச்சலுக்கு சிறுநீர் பை காரணமாகாது), பாதத்தில் சூடு இன்னும் எங்கெல்லாம் உடம்பில் வெப்பம் எரிச்சல் உண்டாகின்றதோ அதற்கெல்லாம் காரணம் இந்த சிறுநீர் பைதான். சிறுநீரகம் (KIDNEY) கால் பெரு விரல் எலும்பும் பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் உள்ளங்கால் பகுதியில் சிறுபள்ளமான இடத்தில் ஆரம்பிக்கின்றது இந்த சிறுநீரகத்தின் சக்தி ஓட்டம். பிறகு கனுக்காலுக்கு சற்று முன்பாக பெரு விரல் பக்கம் மேலேறி கனுக்கால் முழிக்கும் வெளிப் பக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதி வழியாக மேலேறி கால் உள் பக்கமாக சென்று தொப்புளை ஒட்டி மேல் நோக்கி போய் நெஞ்சு பகுதியில் முடிகின்றது. இந்த பகுதியில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறுநீரகம் சம்பந்தப்பட்டவையாகும். அதிவேகமாக சாப்பிடும் அனைவரும் சிறுநீரகத்துக்கு ஆபத்தையே உருவாக்குகின்றார்கள். எந்த அளவிற்கு வேகமாக சாப்பிடுகின்றீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் சிறுநீரகத்தை பாதிப்படையச் செய்கின்றீர்கள் (பார்க்க: விட்டமின் மாத்திரையின் மறுபக்கம் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுரைகள்). கால் வலி என்றால் நாம் கவனிக்க வேண்டிய உறுப்புக்கள் இத்தனை இருக்க (மண்ணீரல், கல்லீரல், வயிறு, பித்த பை, சிறுநீர் பை மற்றும் சிறுநீரகம்) இவை அனைத்தையும் விட்டு விட்டு இவைகளில் எந்த உறுப்பு பாதிப்படைந்தால் இந்த கால் வலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, பாதத்தில் வலி இன்னும் பிற வலிகள் வந்திருக்கின்றது என்பதை கண்டறிந்து சரி செய்யாமல் மருந்துகள் வாங்கி சாப்பிடுவது, மசாஜ் கிரீம் வாங்கி தேய்ப்பது, வலி நிவாரனி எண்ணெய் வாங்கி தேய்ப்பது என்பது நோயை தீர்க்காது. தற்காலிக சுகத்தை வேண்டுமானால் தரலாம். தேய்த்துவிடுபவர் எதிர்மறையாக இருந்தால் சுகம் கொஞ்சம் கூடலாம். மற்றபடி நோய் தீராது. அது உள் நோக்கி வளர்ந்துக் கொண்டே இருக்கும். கால் முட்டியில் பிரச்சினை என்றால் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து சரி செய்து விட்டால் கால் முட்டியின் பிரச்சினை நிரந்தரமாக சரியாகும். அதை விட்டு விட்டு கால் முட்டியை மாற்றச் சொல்வது, நோயை விட்டு விட்டு நோயால் ஏற்பட்ட விளைவை மட்டும் சரி செய்வதாகும். நோயின் மூலத்தை சரி செய்யாமல் நோயின் விளைவை சரி செய்துவிட்டு நோய் குணமாகிவிட்டது என்று கூறும் உலக மகா அறிவாளிகள் வாழும் காலத்தில் நாம் வாழ்வதற்காக நாம் வெட்கப்படத்தான் வேண்டும். வயதான நபருக்கு முட்டியை மாற்றுகின்றீர்கள் வளரும் ஒரு 8 வயது சிறுவன் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்கு முழங்கால் முட்டியில் பிரச்சினை என்றால் என்ன செய்வீர்கள். அவன் வளர வளர 6 மாதத்திற்கு ஒரு முறை முட்டியை மாற்ற முடியுமா? நாம் சிந்திப்போம், சரியான மருத்துவத்தை இனி மேல் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம். - ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ - |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக