29 மே, 2011

மயக்கம் vs இரத்த அழுத்தம்


மயக்கம் vs இரத்த அழுத்தம்

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் 
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) 
(Chinese Traditional Medicine).
நம் உடல் உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், அதற்குத் தேவையான ஊட்டச்சக்தியை இரத்த ஓட்டம் மூலம் பெற்றாக வேண்டும். அப்படி பெற முடியாத போது உடல் களைப்படைந்து விடுகின்றது. களைப்பானது முறையான சிகிச்சை மூலம் சரி செய்யப்படாத போது அது நோயாக மாறுகின்றது. இந்த நேரத்தில் உடல் நம்மை காப்பாற்றிக் கொள்ளவதற்காக இயற்கையாகவே முயற்சி செய்கின்றது. இதன் விளைவாக நமக்கு மயக்கம் ஏற்பட்டு, கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றோம்.
நமக்கு ஓய்வு அவசியம் என்பதற்கு உடல் கொடுக்கும் முதல் சிக்னலே மயக்கம் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அதனையும் மீறி ஓய்வெடுக்காமலிருக்கும் போது, தொடராக மயக்கம் ஏற்பட்டு நிர்ப்பந்தமாக படுக்கை நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றோம்.
மீண்டும் சக்தியானது இரத்த ஓட்டம் மூலம் பெறப்பட்டவுடன் நாம் மயக்கத்திலிருந்து தெளிவடைகின்றோம். பூரணமாக உடல் உறுப்புக்கள் சக்திச் சமநிலையை அடையாதவரை இந்த மயக்கம் அடிக்கடி ஏற்படவே செய்யும்.
அக்குபஞ்சர் நாடி பரிசோதனை முறையில் உடலில் எந்த உறுப்பு பலவீனமடைந்திருக்கின்றது என்பதை எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் போது இந்த மயக்கம் நிரந்தரமாகக் குணமடைகின்றது.
நிரந்தரமாகக் குணமாக்கி விடலாம்.
சிலருக்கு கல்லீரல், மருந்துகள் மாத்திரைகளால் அல்லது சக்திநிலை மாறுபாட்டால் பாதிக்கப்படும் போது தலை சுற்றுவது போன்ற நிலைமை உருவாகும். கல்லீரலைச் சரி செய்வதன் மூலம் இந்த பிரச்னையை சரி செய்து விட முடியும். கல்லீரலும் பித்தப்பையும் இணை உறுப்புகள். இவை ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுபவை. கல்லீரலின் பாதிப்பு நிச்சயமாக பித்தப்பையையும் பாதிக்கும். இது போன்ற நிலைகளில், தலைசுற்றல், வாந்தி, அளவுக்கதிகமான களைப்பு, தூங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவல், தூக்க நிலையிலேயே இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இவைகளை நாடி பரிசோதனை மூலம்
உடல் உறுப்புக்களில் முக்கியமான 12 உறுப்புக்களின் நிலையை உடல் மிகவும் கவனமுடன் பாதுகாத்துக் கொள்கின்றது. இதில் ஏதாவது ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவைகளோ பாதிக்கப்படும் போது, இந்த 12 உறுப்புக்களைத் தவிர மற்ற இடங்களுக்குச் செல்லும் இரத்தமும் பாதிக்கப்பட்ட உறுப்புக்களுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றது.

12 முக்கிய உறுப்புக்களாவன :

  • இதயம்
  • சிறுகுடல்
  • மண்ணீரல்
  • வயிறு
  • நுரையீரல்
  • பெருங்குடல்
  • சிறுநீரகம்
  • சிறுநீர்ப்பை
  • கல்லீரல்
  • பித்தப்பை
  • இதய மேல் உறை
  • தேக (உடல்) வெப்பம்
இந்த 12 உறுப்புக்களில் எந்த ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டாலும் நோய் உருவாகி விடும். அப்படி உருவாகக் கூடாது என்பதற்காகத் தான் உடல் இவ்வுறுப்புக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து இந்த 12 உறுப்புக்கள் இல்லாமல் மற்ற உறுப்புக்களுக்குச் செல்லும் இரத்தத்தை பாதிக்கப்பட்ட உறுப்புக்களுக்குத் திருப்பியனுப்புகின்றது. அவ்வாறு இரத்தம் செல்லாமல் திருப்பப்படும் உறுப்புக்களில் மிகவும் பிரதானமானது மூளை, ஆண்-பெண் பிறப்பு உறுப்புக்கள்.
மூளைக்குச் செல்லும் இரத்தம் திருப்பி அனுப்பப்படும் போதும்.., மூளைக்குப் போதிய இரத்தம் கிடைக்காத போதும்.., மூளை செயலில் களைப்படைந்து விடுகின்றது. இந்த பிரச்னை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும். இல்லையேல் இந்த பாதிப்பு தொடர்ந்து இறுதியில் பக்கவாதத்தில் முடிந்து விடும்.
எந்த உறுப்பு பாதிக்கப்பட்டதனால் மூளைக்குச் செல்லும் இரத்தம் திருப்பியனுப்பப்படுகின்றது என்பதை எளிதாக கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் இந்த பிரச்னையை முளையிலேயே களைந்து விடலாம்.
இவைகளை விட்டு விட்டு இரத்த அழுத்தம் அதிகமாகயிருக்கின்றது அதனால் தான் மயக்கம் வருகின்றது, தலை கிறுகிறுப்பு வருகின்றது. பக்கவாதம் ஏற்பட்டு விடும் என்று பல தவறான காரணங்களைச் சொல்லி நோயாளிகளை இரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட வைப்பது மனித குலத்திற்குச் செய்யும் துரோகமாகும்.
மீண்டும் மீண்டும் சொல்வது என்னவென்றால், இரத்த அழுத்தம் வியாதியல்ல. எந்த உறுப்பின் பாதிப்பைச் சரி செய்ய இரத்த அழுத்தம் உருவாகின்றதோ அந்த உறுப்பின் பாதிப்பைச் சரி செய்து அதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்திருக்க உதவும் மருத்துவமே மகத்தான மருத்துவம்.
அந்த வகையில் அக்குபஞ்சர் மருத்துவம், 5000 வருடங்களுக்கு மேலான மனித குலத்திற்கு ஆர்ப்பாட்டம் இல்லாமல் சேவை செய்து வருகின்றது.
- -

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons