ஒளி படைத்த கண்ணினாய்
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
விண்ணுக்கும் மண்ணுக்கும் பாலம் அமைத்து .002 நொடியில் படம் பிடித்து காட்டிடும் ஓர் அற்புத உறுப்பு தான் கண். இனிமையான காட்சிகளை நமக்களித்து நம்மை இளமையாக வைத்திருக்கும் இனிய உறுப்பு தான் கண். சுமார் 14 கோடி அனுக்கள் விழித் திரையில் வேலை செய்கின்றன. 137 மில்லியன் ஒளி உணர் கம்பு செல்கள் (ROD CELLS) கருப்பு வெள்ளை பார்வையை ஈர்க்கின்றது. 7 மில்லியன் கோன் செல்கள் (CONE CELLS) பல நிரங்களின் பார்வையை ஈர்க்கின்றது. கண்களின் அமைப்பைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் பல பக்கங்கள எழுதலாம். அதுவல்ல இத் தொடரின் நோக்கம். கண்களில் ஏற்படும் நோய்களுக்கு காரணம் கண்கள் அல்ல என்பதே. கண்களுக்கு வெளியிலிருந்து விபத்துக்களால் ஏற்படும் பிரச்சினையை தவிர மற்றபடி கண்களில் உண்டாகும் அணைத்து நோய்களுக்கும் காரனம் கண்கள் அல்ல. கண் நோய்கள் அனைத்தும் நோயின் பிரதிபலிப்பே. நோயின் மூலம் கண்கள் கிடையாது. கண்ணின் ஓரமும் மூக்கின் ஆரம்பமும் சேரும் இடத்தில் சிறுநீர் பையின் (URINARY BLADER) சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது. கண்ணின் கரு விழிக்கும் நேர் கீழ் பகுதியில் எலும்பின் சிறு பள்ளம் போன்ற பகுதியில் வயிறு (STOMACH) சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது. கண்ணின் மறு பக்க (காது பக்கம்) ஓரத்தில் பித்த பையின் (GALL BLADER) சக்தி ஓட்ட பாதை ஆரம்பமாகின்றது. கண்ணின் புருவத்தின் வெளி பக்க ஓரத்தில் மூவெப்ப மண்டல (TRIPLE WARMER) சக்தி பாதை கடந்து செல்கின்றது. கண்ணின் செயல் திறனில் இவ்வுறுப்புகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. இவ்வுறப்புகளில் பிரச்சினை ஏற்படும் போது அவை கண்களில் நோயாக பிரதிபலிக்கின்றது. கண் நோய்களுக்கு நாம் சிகிச்சை அளிக்கும் போது சிறுநீர் பை (URINARY BLADER), பித்தப்பை (GALL BLADER), வயிறு (STOMACH) மற்றும் மூவெப்ப மண்டலம் (TRIPLE WARMER) இவைகளின் இயக்க நிலை மாறுபாட்டை சமநிலைப் படுத்த வேண்டும்.அப்படி செய்வதன் மூலமே கண் நோய்களை நாம் நிரந்தரமாக முறையாக தீர்க்க முடியும். இவைகளை எதையும் கருத்தில் கொள்ளாமல் கண்ணுக்கு நாம் சிகிச்சையளிப்போமானால் அது தற்காலிக சுகத்தை தந்து நோயை உள் பக்கமாக வளரவே செய்யும். நவீன கால மருந்துகளும் மாத்திரைகளும் தற்காலிக தீர்வையே தருகின்றன. அதனால் தான் சாதாரன பவர் கண்ணாடி போட்டவர்கள் கூட போகப் போக பவரை அதிகமாக்கிக் கொண்டே போகின்றார்கள். நல்ல மருத்துவம் பவரை குறைத்துக் கொண்டு அல்லவா வந்திருக்க வேண்டும்? அல்லது உள்ளதையாவது நிலையாக வைத்திருக்க வேண்டும்! ஏன் இல்லை. உதாரனமாக வயிறுக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பை பார்ப்போம். வயிற்றில் ஏற்படும் பாதிப்புகளால் கண்ணழற்சி நோய், விழி வெண்படலத்தில் சிவப்பேறிய இரத்த நாளங்கள் தெரிதல், கண்ணிலிருந்து வெண்ணிற கழிவுகள் அதிகம் வெளியேறுதல், கண்ணில் நீர் வடிதல், கிட்டப் பார்வை நரம்பு இளைத்து சுருங்குதல், கீழ் இமை துடித்தல் போன்ற நோய்கள் உருவாகின்றன. இவைகளை சரியாக நிரந்தரமாக சரி செய்ய வேண்டுமானால் வயிற்றின் சக்தி ஓட்ட பாதையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு காரணம் தெரியாமல் கண்ணை தோண்டிக் கொண்டிருப்பதும் அதில் மருந்துகளை அள்ளிக் கொட்டுவதும் எந்த அளவிற்கு அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இரண்டு கண்களையும் மூடி லேசாக சிறிது நேரம் கசக்குங்கள், பிறகு கண்களை திறந்து பாருங்கள். உங்களுக்கு இப்போது நட்சத்திரங்கள் பறப்பது போன்றும் மின் மினி பச்சிகள் பறப்பது போன்றும் தெரிந்தால் உங்கள் கண்கள் பெருங்குடலால் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். இதற்கு பெருங்குடலை சரி செய்ய வேண்டுமே ஒழிய கண்களை அல்ல. கண் சிகிச்சைக்கு பரணமாக பெருங்குடலின் (LARGE INTESTINE) இயக்கமும் சரி செய்யப்பட வேண்டும். சிறிது வெளிச்சத்தைப் பார்த்தாலும் கண் கூசுகின்றதா?வெயிலில் வெளியில் பார்க்க மிகவும் சிரமப்படுகின்றீர்களா? கண்ணில் எரிச்சலுடன் நீர் வடிகின்றதா?அப்படியானால் சரி செய்யப்பட வேண்டியது பித்தப்பையை (GALL BLADER) கண்களை அல்ல. கிட்டப் பார்வை, தூரப் பார்வை, கண்ணில் அரிப்பு, நீர் வடிதல், சிவந்து போதல் இவைகளை சரி செய்ய நாம் சரி செய்ய வேண்டியது சிறுநீர் பையின் (URINARY BLADER) பாதையை கண்களை அல்ல. இவ்வாறு உறுப்புக்கள் ஒவ்வொன்றும் கண்ணோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த உறுப்புக்களில் ஏற்படும் இயக்க நிலை மாறுபாடுகள் தான் கண்களில் நோயாக பிரதிபலிக்கின்றது. கண்களில் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் நோயல்ல.உறுப்புகளில் ஏற்படும் நோயின் பிரதிபலிப்புகள். நோயின் மூல காரணம் கண்கள் அல்ல. நோயின் மூலம் உடல் உறுப்புகளில் (வயிறு, பித்தப்பை, சிறுநீர் பை, பெருங்குடல்) தான் பதுங்கியும் தேங்கியும் கிடக்கின்றன. எனவே கண் நோய்களுக்கு மூல காரணம் கண்கள் கிடையாது. கண்களை ஒளி படைத்த கண்ணாக மாற்றி அமைக்க நாம் கருத்தில் கொண்டு இயக்க குறைவை சரி செய்ய வேண்டிய உறுப்புகள் வயிறு(STOMACH) பித்தப்பை(GALL BLADER) சிறுநீர்பை (URINARY BLADER) பெருங்குடல்(LARGE INTESTINE). இவ்வாறு சிகிச்சையளிப்போமேயானால் நாம் பகலில் நட்சத்திரத்தைப் பார்க்கும் கண்களைக் கொண்டவர்களாக உருவாக முடியும் இன்ஷா அல்லாஹ். இன்று சீனாவில் கண்ணாடி அனிந்தவர்கள் மிக மிக சொற்பமே. அதற்கு காரணம் அவர்கள் பெறும் தெளிவான சிகிச்சையே. தெளிவான முiறான சிகிச்சையின் மூலமே நாம் அழகான கண்களை பாதுகாக்க முடியும். இல்லை என்றால் ஊமை விழிகளாக உருமாறிவிடும். அக்குபஞ்சர் மருத்துவம் மேற்கண்ட சிறப்பான முறையில் செயல்படுவதால் தான் 5000 வருடங்களுக்கும் மேலாக கண் நோய்களை மட்டுமல்ல எல்லா நோய்களையும் வேரிலிருந்து கலைந்து பூரண ஆரோக்கியத்தை மனித குலத்திற்கு வழங்கி வருகின்றது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் அடுத்த தொடரில் சந்திப்போம். - ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ - |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக