29 மே, 2011

வலி வரும் வழிகளும் அதனால் வரும்


வலி வரும் வழிகளும் அதனால் வரும் நோய்களும் - Part I

டாக்டர் A. ஷேக் அலாவுதீன் 
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China) 
(Chinese Traditional Medicine).
எந்த ஒரு நோயும் மனிதனை உடனே தாக்குவதில்லை. சிறுக சிறுக தாக்கியப் பிறகே வலுவடைகின்றது. இதன் ஆரம்ப கட்டங்கள் நமக்கு சில சமிக்கைகள் கிடைக்கவே செய்கின்றன. அவைகளை நாம் புரிந்துக் கொண்டால் நோய்க்கான காரணத்தை தெரிந்துக் கொண்டு அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். முதலில் கைகளை எடுத்துக் கொள்வோம். கைகளில் உள்ள ஐந்து விரல்களின் மூலம் ஆறு வகை உறுப்புகளின் இயக்கத்தை தெரிந்துக் கொண்டு நோய்க்கான காரணத்தை விரைவில் ஒரு பைசா செலவில்லாமல் கண்டுபிடித்து விடலாம். நாடி பார்த்து 12 உறுப்புகளின் நோய் அறிவது அக்கு பஞ்சருக்கு இறைவன் அளித்த கலை. இதனால் தான் ஏற்படுவதில்லை இந்த மருத்துவத்தில் நோய் கண்டறிவதின் பிழை. இன்னும் சில வழிகளும் இருக்கின்றது நோய் கண்டறிய. அவைகளில் ஒன்று தான் கை விரல்கள் மூலம் நோய் அறியும் நிலை .

கை பெருவிரல் (THUMP FINGER)

கை பெருவிரல் வெளிப் பக்க ஓரத்திலிருந்து வலி ஆரம்பித்து நேராக முழங்கை மேல் பக்கம் நடுவில் சென்று பிறகு மேலே வலி முடியுமானால் அல்லது இதற்கு இடை இடையே வலியோ மரமரப்போ இருக்குமானால் இது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.

ஆட்காட்டி விரல் (INDEX FINGER)

ஆட்காட்டி விரலில் ஆரம்பித்து முழங்கை வெளிப் பக்கமாக நேராக தோள்பட்டை மேல் சென்று மூக்கின் ஓரத்தில் முடியும். இந்த பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட நோயின் அறிகுறியாகும்.

நடு விரல் (MIDDLE FINGER)

நடு விரல் இதயத்தின் மேல் உறையோடு சம்பந்தப்பட்டது. இதய நோயின் ஆரம்ப கட்டத்தில் அல்லது இதயத்தின் மேல் உறையில் ஏற்படும் பிரச்சினைகள் இந்த விரலில் ஆரம்பித்து உள்ளங் கை பக்கமாக வந்து கையின் நடுவில் நேராக சென்று அக்குளின் மேல் புறம் முடியும். இந்த பாதையில் அல்லது அதற்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் உபாதைகள் அனைத்தும் இதய உறை (PERICARDIUM) பாதிப்பை அறிவுறுத்தும் அறிகுறிகளாகும்.

மோதிர விரல் (RING FINGER)

உடலில் வெப்ப நிலை மாறுபாட்டை அதனால் ஏற்படும் நோயின் அறிகுறிகளை மோதிர விரல் மூலம் அறியலாம். இந்த விரலில் ஆரம்பித்து கையின் பின்புறமாக சென்று தோள் பட்டை மேல் புறமாக காது வழியாக போய் கண் அருகில் முடிகின்றது. இந்த பகுதியல் ஏற்படும் பாதிப்புகளும் இந்த பாதை செல்லும் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்புகளும் உடலில் உஷ்ண நிலையில் கோளாறு உள்ளதையே காட்டுகின்றன.

சுண்டு விரல் (SMALL FINGER)

சுண்டு விரல் நகக் கண்ணில் (மோதிர விரல் பக்கம்) வலி ஆரம்பித்து அது உள்ளங் கை பக்கமாக வந்து மணிக்கட்டு ரேகையின் ஓரமாக போய் அக்குலில் முடியுமானால் அது உறுதியாக இதயத்தின் பாதிப்பைக் காட்டுகின்றது. சுண்டு விரல் நகக் கண் வெளிப் பக்கம் ஆரம்பித்து மணிக் கட்டு ஓரமாக போய் முழங் கை கீழாக சென்று தோள்பட்டையின் பின் பக்கமாக போய் காதின் ஓரத்தில் முடியும் பாதையில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் சிறு குடல் பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும்.
கவனம்
சுண்டு விரலில் ஏற்படும் வலியின் போதும் நடு விரலில் ஏற்படும் வலியின் போதும் அலட்சியமாக இருப்பது இதயத்தையும் இதயத்தின் மேல் உறையையும் மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். இதயத்தில் முதலில் பிரச்சினை வரும் போது அது நடு விரல் பாதையில் தான் அதிகமாக அறிகுறிகள் தென்படும். அதன் பிறகே சுண்டு விரல் பக்கம் வலி ஏற்படும்.
சரிதானா?
நாம் இப்போது சிந்திப்போமானால் இது வரை நாம் செய்த செயல்கள் எந்த அளவுக்கு புறம்பானவை என்று அறியும் போது நமக்கே ஆச்சரியமாகவும் வெட்கமாகவும் தோன்றும். ஆம் கை வலிகளுக்கு இத்தனை காரணங்கள் இருக்க இவை எதனையுமே கருத்தில் கொள்ளாமல் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டது ஆச்சரியமானது ஒன்று மட்டுமல்ல மிக மிக அலட்சியமான ஒன்று. இப்படி மாத்திரை சாப்பிடுவதன் மூலம் சாப்பிடுபவர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் கிடைக்குமே ஒழிய நோய் (வலி) மீண்டும் மீண்டும் வந்துக் கொண்டேயிருக்கும்.மாத்திரை சாப்பிட்டால் மீண்டும் தற்காலிக சுகம் கிடைக்கும், அதே நேரத்தில் உள் பக்கமாக நோய் வளர்ந்துக் கொண்டே இருக்கும். நோய்க்கான காரணம் கண்டறியப் பட்டு அது சரி செய்யப்படாத வரை நோயிலிருந்து பூரண சுகம் என்பது கற்பனையே.
நடப்பதென்ன
வலி ஏற்படும் போது நீங்கள் மதிப்பு மரியாதையுடன் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் வலியை நீக்குவதில்லை. அதற்கு பதிலாக வலிக்கின்றது என்ற செய்தி செல்கள் மூலமாக மூளைக்கு எட்டுவதை தடுத்துவிடுகின்றது (மேலும் விவரத்திற்கு மூளைக்கு சுய அறிவில்லை என்ற முந்தைய தொடரை படியுங்கள்), அதனால் நமக்கு வலி தெரிவதில்லை.
உதாரணம்:
நம் உடலில் ஓர் ஆபரேஷன் செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம், மயக்க ஊசி போடாமல் செய்ய முடியுமா? முடியாது காரணம் வலியை தாங்க முடியாது, அதே நேரத்தில் ஆப்பரேஷன் செய்யும் பகுதியில் மயக்க ஊசி போட்டுவிட்டு செய்யும் போது ஆபரேசனை அவன் கண்கள் பார்க்கின்றன. ஆனால் வலி தெரிவதில்லை. எப்படி?
மயக்க ஊசி போட்டதால் அந்த பகுதி செல்கள் தற்காலிகமாக செயல் இழக்க செய்யப்படுகின்றன. அவைகளால் பாதிப்பின் செய்திகளை மூளைக்கு தெரிவிக்க முடிவதில்லை. அதனால் வலியை உணர முடிவதில்லை. வலி நிவாரண மாத்திரைகள் இதே அடிப்படையில் செய்யப்படுபவைகளே.
எந்த உறுப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை இந்த கட்டுரை மூலம் நாம் தெரிந்துக் கொள்ள முடியும். பாதிக்கப்பட்ட அந்த உறுப்பால் என்னென்ன நோய்கள் வரும் என்பதை இதற்கு முன் வெளி வந்த இரத்த அழுத்தமும் உடல் உறுப்புகளும் என்ற தொடரில் நீங்கள் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம்.
இன்ஷா அல்லாஹ் கால் விரல்கள் மூலம் என்னென்ன உறுப்புகளின் நிலையை புரிந்துக் கொள்ள முடியும் என்பதை அடுத்த இதழில் காண்போம்.
இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்.
- -

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons