ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
"என்ன சார் இது அநியாயம்! அஞ்சு கவுண்டர் இருக்கு மூணு பேர்தான் இருக்காங்க, யாரும் கேக்க மாட்டீங்களா?"
"நீங்கதான் கொஞ்சம் கேளுங்களேன் சார்? பூனைக்கு யார் மணி கட்டறதுன்னு யோசிச்சிட்டே எல்லாரும் இருந்தா எப்புடி?"
"அட, நான் ரீஜனல் ஆபீஸ் வரைக்கும் எழுதிட்டேன் சார். ஒரு நடவடிக்கையும் இல்லை"
"இந்த பிரான்ச் இப்படித்தான் சார். சண்டே வந்து பாருங்க, மெயின் ரோடு வரைக்கும் க்யூ நிக்கும்"
"ப்ரைவேட் பேங்க் எல்லாம் எப்படிக் கொழிக்கறாங்கன்னு இப்போ இல்ல புரியுது"
"சார் பென் இருக்குமா"
"திருப்பி குடுத்துடுங்க நியாபகமா"
"இந்தாங்க சார், தேங்க்ஸ்!"
"குட் மார்னிங் மேடம்! ஏற்காடு டிடி எடுக்கணும், எந்த கவுண்டர்!"
"வெளியில போயி டோக்கன் ரிசீவ் பண்ணிட்டு வாங்க"
"வெளியில?"
"ஆமாம், வெளியில...."
"தேங்க்ஸ் மேடம்"
"சார், டோக்கன் நம்பர் நூத்தி நாப்பத்தி அஞ்சு"
"ஒக்காருங்க! இப்போதான வந்தீங்க! எனக்கு தொண்ணூத்தி மூணு! ஒண்ணரை மணி நேரமா வெயிட் பண்றேன். இப்போதான் எழுவத்தி ரெண்டு போயிட்டு இருக்கு. கவுண்டர் தெறந்து ரெண்டு மணிநேரம் ஆச்சு. உங்களுக்கு இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்"
"என்னது! எனக்கு ஆயிரம் ரூபாவுக்கு ஒரு டிடி எடுக்கணும் சார்! அவ்ளோதான். அதுக்கும் அதே கவுண்டர்தானா?"
"எல்லாம் சிங்கிள் விண்டோ'தான். ஒக்காருங்க"
"என்னங்க, அஞ்சு கவுண்டர்ல மூணுலதான் ஆட்கள் இருக்காங்க?"
"அதைத்தானே நாங்க இத்தினி நேரமா பொலம்பிட்டு இருக்கோம்!"
"ஹலோ மேடம்! அந்த ரெண்டு கவுண்டர்'ல சர்வீஸ் இல்லையா?"
"இல்லைங்க, இன்னைக்கு லீவு"
"ஸ்டாஃப்'தானே மேடம் லீவு, சர்வீஸ் எப்படி க்ளோஸ் ஆகும்? ஆல்டர்னேடிவ் அரேஞ்ச்மென்ட் நீங்கதானே பண்ணனும்"
"உள்ளே மானேஜரைக் கேளுங்க"
"சொல்லுங்க சார், என்ன வேணும்?"
"மானஜரை பாக்கணும்"
"வெயிட் பண்ணுங்க, வருவாரு"
"இன்னும் வரலையா"
"வந்துடுவாரு"
"இல்லை, நான் ஆபீஸ் வந்துட்டாரான்னு கேட்டேன்"
"ஆன் டியூட்டி'ல கஸ்டமர் யாரையாவது பாக்கப் போயிருப்பார். ட்வெல்வ் ஓ கிளாக்'குக்கு வந்துடுவாரு, வெயிட் பண்ணுங்க"
"வெளங்கிடும்! ஆணியே புடுங்க வேணாம். நான் வர்றேன்"
ஆன்லைன் ட்ரான்ஸ்பர் எல்லாம் இருக்கற கம்ப்யூட்டர் யுகத்துல டிடி எடுக்கறதே கிரிமினல் குற்றம். இதுல ஆயிரம் ரூபா டிடி எடுக்க ரெண்டு மணிநேரம் வெயிட் பண்ணனுமா? போங்கய்யா நீங்களும் உங்க கஸ்டமர் சர்வீசும்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக