29 மே, 2011

உட்கார்ந்து யோசிச்சது


உட்கார்ந்து யோசிச்சது

ஸ்பெக்ட்ரம்  ஊழல்:
நிருபர்: ஊழல்ல கொள்ளை அடிச்சா பணத்தை என்ன செய்தீங்க.
ராஜா: கலைஞர் ஐயா கிட்ட குடுத்துட்டேன்.
நிருபர்: ஏன்?
ராஜா: "Money" நான் வைச்சுக்கிறேன் என் பொண்ணு "கனி" நீ வைச்சுகோன்னு  சொன்னாரு. பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சு இருந்தது ஒத்துகிட்டேன்.
நிருபர்: தூ..................!
இதுலிருந்து  ஒரு தத்துவம் நமக்கு தெரியுது "Adjustment is always better than argument"
ஆடுகளம்:
தனுஷ்: நாங்கெல்லாம் சுனாமிலேயே ஸ்விம்மிங் போடுறவங்க.
கவுண்டர்மனி: யாரு நீ! ஏன்டா fan போட்டாலே பறந்து போய் சுவத்துல பல்லி மாதிரி ஒட்டிப்பே, நீ சுனாமிலே ஸ்விம்மிங்.................அட வெட்கம் கெட்டவங்களா,,,,,,,,,,,,யாருக்கு எந்த வசனம் குடுகுறதுன்னு ஒரு வெவஸ்தை வேணா??தூ..........................
புன்னகை என்பது எதிரியை கூட நண்பனாக்கும்ஆனால் brushபண்ணாம
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்.
எனவே….சிரிங்கநல்லா சிரிங்க ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க

ஒரு பையன் பரிட்சையில் பெயில் ஆகிவிட்டான்.
அப்பா: இனிமேல என்னை அப்பான்னு கூப்பிடாதே.
பையன்: அப்பா, இது வெறும் ஸ்கூல் டெஸ்ட் தானப்பா , இது ஒன்னும் DNA டெஸ்ட் இல்லை கவலை படாதீங்க..................

பிளாக்கும் கலர்தான், ஒயிட்டும் கலர்தான், ஆனால் Black & White டிவி கலர் டிவி ஆகமுடியாது.........இப்படிக்கு வெறித்தனமா யோசிகிறவங்க சங்கம். 

ஒரு பள்ளிகூடத்தில்.
டீச்சர்: டேய் நான் பாடம் நடத்தும் போது அவன் ஏன்டா வெளில போறான்.
மாணவன்: விடுங்க டீச்சர் அவனுக்கு தூக்கத்துல நடக்குற வியாதி

ஒரு குட்டி கதை.
ஒரு ஏழை மீன் பிடித்து கொண்டு வந்தான், ஆனா அவன் மனைவியாலே அதை சமைக்க முடியலை, ஏன் என்றால், அவன் வீட்லே விலைவாசி ஏற்றம் காரணமாக மின்சாரம் இல்லை, காஸ் இல்லை, ஆனியன் இல்லை, ஆயில் இல்லை.
உடனே அந்த ஏழை பாவம் இந்த மீனாவது பொலைத்து  போகட்டும்னு போய் திரும்பவும் ஆத்துலே விட்டுதான், உடனே அந்த மீனு தண்ணிக்கு மேலே வந்து சொல்லிச்சு 
"உயிர் காக்கும் திட்டம் குடுத்த கலைஞர்க்கு நன்றின்னு". 
தத்துவம்:
மின்சாரமே இல்லை "இலவச டிவி"
சோத்துக்கு வழி இல்லை "இலவச வீட்டு திட்டம்"
 வருமானதிற்கு வழி இல்லை "இலவச வேட்டி சட்டை"

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons