29 மே, 2011

ராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...


ராஜ் டிவிக்கு இப்பிடி ஒரு கேவலமான பிழைப்பு வேண்டுமா...

ராஜ் டிவி இந்த பிழைப்பு பிழைக்கிறதுக்கு நாய்ப் பல்லும், சிட்டுகுருவி லேகியமும் விக்கலாம். ராஜ் டிவி-இல் இரவு 10.30மணியளவில் நடத்தப்படும் ஓர் நிகழ்ச்சி "சினிமா தெரியுமா"
இந்த நிகழ்ச்சியில் ஓர் பிரபலநடிகரின்முகமும் நடிகையின் முகமும் அர்த்தநாரீஸ்வர உருவம் போல இணைத்து காண்பிக்கப்படும். அந்தபிரபல நடிகர்களை யாவரும் எளிதாக கண்டுபிடிக்க முடியும். அதை கண்டுபிடித்தால் 50,000 இந்திய ரூபா, இலங்கை மதிப்பில் சுமார் 1,50,000 ரூபா.

இந்த கேள்விக்கான விடையை உடனே கீழ் காண்பிக்கப்படும்தொலைபேசிஎண்ணை தொடர்பு கொண்டு விடை சொல்லுங்கள், விடைசொல்லுங்கள்என்று நிகழ்ச்சியை நடத்துபவர் வடிவேலு மூட்டைப்பூச்சி மெசின் விற்பதை போல கூவுவார். ஒரு பெண் நடத்துபவரும் கோரஸ் ஆக கூவ அரை குறையாக, அவரது பைன் அப்பிள் முகத்தை மேக்கப் மூலம் டிங்கரிங், பெயிண்டிங் செய்து ஆப்பிள் போல மாற்றி நிறுத்தப்பட்டு இருப்பார்.

அவர்களுக்கு போனில் தொடர்பு கொள்பவர் சம்பந்தமில்லாத விடைகளையே கூறுவார். உதாரணமாக நான் இன்று 17-05-2011 நடைபெற்ற நிகழ்வின் படங்களை இணைத்துள்ளேன். இங்கு காட்டப்பட்டுள்ளது தனுஷ் உம் சினேகாவும் என வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் முதலில் விடை சொன்னவர் ஜித்தன் றமேஸ் உம் மாளவிகாவும் என்று சொல்ல இரண்டாவதாக அழைத்தவர் பரத்தும் ஜெனிலியாவும் என்றார்கள். நான் இன்றுதான் இவ் நிகழ்ச்சியை பார்த்தேன். டயல் செய்து பார்த்தேன், அது இந்தியாவுக்குள் மட்டும் போல, நான் இலங்கை என்பதால் தவறான இலக்கம் என்று லைன் கிடைக்கவில்லை.

வலைத்தளங்களில் தேடி பார்த்தபோதுதான் எனது இந்திய உறவுகள் தமது கடுப்புக்களை கொட்டித் தீர்த்திருப்பது தெரிந்தது.

அந்த நிகழ்ச்சியை பற்றி சக பதிவாளர் ஒருவர்,

 
" . அந்த பரிசு தொகையை நாம் பெறுவதற்கு அந்ததொலைபேசிஎண்ணை நாம் தொடர்பு கொண்டால் நம் செல் போனில்ருபாய் 10 உடனேகபளீகரம் செய்து விடுவார்கள்.. மேலும் அந்ததொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படாமல் ஹோல்ட் செய்யப்படும்... நம்அந்த அழைப்பில் இருக்கும் ஒவ்வொருநிமிடத்திற்கும் ருபாய் 10கொள்ளை அடிக்கப்பட்டு (பிச்சை எடுக்கப்பட்டு) இருக்கும்.

இந்த அழைப்பில் கொஞ்சம் விளம்பரம், கொஞ்சம் அம்பானஉபசரிப்போடு ஒருபதிவு செய்யப்பட்ட பெண்ணின் குரல் கேட்க்கும்...என்ன சொல்லுகிறார்கள்என்று செல் போனை நம் காதோடு வைத்துஇருந்தால் இருக்கும் கொஞ்சம் காசும்காலியாகிவிடும். இந்த நிகழ்ச்சியைநடத்தும் நிறுவனத்தினர் செய்யும்இன்னுமொரு ஏமாற்று வேலைஎன்னவென்றால் " டைமர் " என்னும்கீழ்த்தரமான நான்கு நிமிடம் ஓடும்டைமிங். இந்த டைமிங் முடிவதற்குள் நீங்கள்செல் போன் மூலம் தொடர்புகொள்ளுகள் என்று கெஞ்சுவார்கள்.... நாம் தொடர்புகொண்டால்நம்முடைய கால் ஹோல்ட் செய்யப்பட்டு இருக்கும்....... ஆனால்நிமிடம்முடியும் நேரத்தில் ஒருவர் தொடர்பு கொள்ளுவர்... அந்தநபர்கேள்விக்கான பதிலும் சொல்லுவர். ஆனால் அந்த பதில் கண்டிப்பாகதவறாகமட்டுமே இருக்கும்..... ஏன் என்றால் அந்த நிகழ்ச்சியை நடத்தும்நிறுவனத்தார்ஒருவரே வேண்டும் என்றே பதிலைதவறாக கூறி நேரத்தைஅதிகபடுதுவார் . நிகழ்ச்சியை நடத்துபவர் சில நேரம் உங்களுக்கு ஒருபோனில் இவ்வளவு பணம்யாருங்க கொடுப்பார் என்று காமெடிபண்ணுவார்....

இப்படி ஏமாற்றி பணத்தை கறக்கும் ராஜ் டிவி இதைவிட தெருவில் நின்றுபிச்சைபோடுங்கள் என்று கூவி கூவி பிச்சை எடுக்கலாம்.... பிச்சைபோடுங்கள், பிச்சைபோடுங்கள் என்று பிச்சை எடுக்கலாம்... இந்த வேலைசெய்யும் செல் போன்நிறுவனத்தார் வேறு ஏதாவது!!!! வேலையை கூடசெய்யலாம்.... இப்படிசம்பாதிப்பதை எதை கொண்டும் சரி என்றுசொல்லுவது மடத்தனமான ஒருவாதம்...''
என்ன கொடுமை சரவணா.... 

1 கருத்துகள்:

Anonymous சொன்னது…

Goog entry. Thanks.

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons