8 மே, 2011

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை :

குழந்தைகளுக்கு  மருந்து தரும் முன்  இரண்டு  விசயங்களை  நாம் கவனிக்க வேண்டும் I .வயது  II .எடை 

எடை பார்க்காமல் எப்பொழுதும் மருந்து தர கூடாது.

அதே போல்  வயதும்  மிக முக்கிய காரணி ஆகும் .பல  மருந்துகளின்  அளவும் ,பயன்பாடும் வயதை பொருத்து மாறும் .

குழந்தைகளை உட்கார  வைத்தே மருந்து   தருவது நல்லது .படுக்க வைத்து  தரும் போது புரை  ஏறுதல்  என்று சொல்லப்படும்  மூக்கின் வழியாக ஊறிஞ்ச பட வாய்ப்பு உள்ளது .

மருந்து  கொடுக்கும் முன்  அதை  தருபவர் கைகளை  நன்கு சுத்தம்  செய்து கொள்ளவேண்டும் .

அளவுகள் :

குழந்தைகளின்  எடைக்கு  ஏற்பவே  மருந்துகளை  தரவேண்டும் .   மருத்துவர் சொன்ன அளவை  சொன்ன நேரத்தில் தந்தால் நல்லது .

ஒரு சி.சி  என்பது  - ஒரு மிலி 

ஒரு டீ ஸ்பூன்  என்பது  -5  மிலி

அரை  டீ ஸ்பூன்  என்பது -2 .5  மிலி 

ஒரு டேபிள்  ஸ்பூன்  என்பது -15  மிலி 
(டீ யை  விட  டேபிள்  தான் பெருசு )

dropper  எனப்படும்  சொட்டு மருந்து போடும்  குழல் உபயோகிக்கும் போது  மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும் .

சொட்டுகுழலில் (dropper )  ஒரு மிலி  என்பது  15 -20  சொட்டுகள்  ஆகும் .

குழலின்  முழு அளவு  ஒரு மில்லி  ஆகும் .

குழலின் பாதி அளவு அரை மிலி ஆகும் .

மருத்துவர் எந்த அளவை குறிப்பிட்டு உள்ளார் என  கவனித்து  மருந்து  தரவேண்டும் .

மிலி அளவில் குறிப்பிட்டு உள்ளாரா? அல்லது சொட்டு எண்ணிகையில்  குறிப்பிட்டு உள்ளாரா என கவனிக்க வேண்டும் .

அதாவது  ௦.5  மிலி  என்பது  எண்ணிகையில்  10  சொட்டுக்கு சமம் .

ஒரு மில்லி  என்பது  எண்ணிகையில் 15 -20  சொட்டுக்கு சமம் .

(நீர் போன்ற நீர்த்த மருந்துகள் ஒரு மில்லி 20  சொட்டும் , சற்றே கூழ்  போன்ற மருந்துகள்  15  சொட்டும் இருக்கும் )

பாட்டில் மூடியில்  உள்ள  அளவுகள் சில நேரம்  மாறலாம் .எனவே நாம் மருந்துகளை  அளக்க  சுத்தமான  புது  சிரிஞ்  கொண்டு அளந்தால்  அளவு எப்பொழுதும் சரியாக இருக்கும் .

மருத்துகளை தோரயமாக  அளக்காமல் சரியாக அளந்து  தரவேண்டும் . மருத்துவர் எடை பார்த்தே  மருந்து  தருகிறார் .எனவே அவர் எழுதிய  அளவை சரியாக தரவும் .

குறைவாக  கொடுத்தால் மருதின் வீரியம்  சரியான அளவில் கிடைக்காது .

அதேபோல்  எத்தனை வேளை கொடுக்க சொல்லி உள்ளதோ  அத்தனை வேளை  தரவும் (எந்த முக்கிய வேலை இருந்தாலும் ).

சுரத்திற்கு  தரப்படும்  பாரசிடமால்  மருந்தை 4 -6  மணி நேரத்திற்கு  ஒரு முறை தரலாம் .
http://doctorrajmohan.blogspot.com/2010/07/fever-in-children.html

ஆன்டி பயாடிக் மருந்துகளை  மருத்துவர் சொல்லும் நாள் வரை தரவேண்டும் .குறைந்தது 3 -5  நாள் வரை  தரவேண்டும் ஜுரம்  நின்றாலும்  இதனை  தொடர்ந்து தரவேண்டும் .

dry syrup  எனப்படும்  பொடி மருந்துகளை உபயோகிக்கும் போது அதில் குறிப்பிட்ட அளவு வரை சுத்தமான தண்ணீர்  கலந்த பின்பே  உபயோகிக்க வேண்டும் .


சிலர்  அவ்வப்போது  பொடியை  எடுத்து அதில் சிறிது  தண்ணீர் கலந்து கொடுக்கும்  பழக்கத்தை  செய்கின்றனர் .இது தவறு . தண்ணீர் கலந்த பிறகு  4 -7  நாட்கள்  மட்டுமே வைத்திருக்கலாம் .
இதை பற்றி  மருந்து பாட்டிலின்  உரையில் குறிப்பிட பட்டிருக்கும் . 

ஒரு முறை வாங்கிய  மருந்தை மீண்டும் மீண்டும்  மருத்துவரை கேட்காமல்  தரக்கூடாது .

சில மருந்துகளை திறந்தபின்  குறிப்பிட்ட  நாள்கள்  தாண்டி கொடுக்க கூடாது . காலாவதி  தேதி  முடியாவிட்டாலும்  திறந்த ஒரு மாதத்திற்கு பிறகு உபயோகிக்க கூடாது .

சில தடை  செய்யப்பட்ட  மருந்துகள்  கடைகளில்  கிடைகின்றன .எனவே மருத்துவர் ஆலோசனை  இல்லாமல் சுய மருத்துவம் செய்யகூடாது . 

உதாரணமாக நிமுசுலைட் என்ற  மருந்தை 
  குழந்தைகளுக்கு கொடுக்ககூடாது  என்று தடை செய்தும்  அது  மருந்து கடைகளில் இன்றும் கிடைகிறது 
http://doctorrajmohan.blogspot.com/2010/07/nimesulide-nimesulide.html

அதே போல் லோப்ரமைட் என்ற வயிற்று போக்கை நிறுத்தும்  மருந்தை 12  வயதுக்கு குறைந்த  குழந்தைகளுக்கு  உபயோகிக்க கூடாது .ஆனால் இதுவும்  தவறாக  பயன்படுத்த படுகிறது .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons