19 நவ., 2010

சூப்பர் டிப்ஸ் 100

ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்வது, பயணங்கள், திரைப்படங்களுக்கு டிக்கெட் வாங்குவது, ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்துவது, உடை, உணவுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது என அனைத்துமே இப்போது ஆன்லைனில் சாத்தியம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படைத் தேவை… ஆன்லைன் வங்கிக் கணக்கு. இனி பார்ப்போம் ஒவ்வொன்றாக…
53. அமர்ந்த இடத்திலிருந்தே உங்கள் வங்கித் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து வைக்கும் ஆன்லைன் வங்கிக் கணக்குப் பக்கத்துக்குச் செல்லும்போது, உங்கள் திரையின் வலது கீழ் மூலையில் பூட்டு சின்னம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பாதுகாப்பாக ஆன்லைனில் வங்கிக் கணக்கை இயக்குகிறீர்கள் என்பதை இந்த சின்னம்தான் உறுதி செய்யும்.
55. இப்போது ‘பிஷ்ஷிங்’ (Fishing) என்ற சொல் அனைத்து ஆன்லைன் பயனாளர்களையும், வங்கிகளையும் அச்சுறுத்தி வருகிறது. வங்கிகளின் பெயரில் அச்சு அசலாக அவர்களது இணைய தளத்தின் வடிவமைப்பில் போலியான தளங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட் எண், பேங்க் பேலன்ஸ், ஏ.டி.எம். பின் நம்பர் என அனைத்தையும் களவாடுவதுதான் ‘பிஷ்ஷிங்’!
57. இந்த பிஷ்ஷிங்கில் இருந்து எப்படி சுதாரிப்பது? உங்கள் மின்னஞ்சலுக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் பெயரில் அறிவிப்புகள் வரும். அதிலுள்ள இணையதள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்று நம் தகவல்களைத் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கும். இதுபோன்ற மின்னஞ்சல்களை அப்படியே அழித்துவிடுங்கள்.
70. சில இணையதளங்களில் பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால், அடுத்து 10 அல்லது 15 நாட்கள் கழித்துதான் அந்தப் பொருளை அனுப்பி வைப்பார்கள். எனவே, ஷாப்பிங் செய்யும்போது, பொருட்களை அவர்கள் அனுப்பும் காலம், அதற்கு வரி விதிக்கிறார்களா என்பதை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
84 மொபைல் போன்களுக்கும் ஆன்லைன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் உறுதியான பிணைப்பு உண்டு. போன்களுக்குத் தேவையான ரிங் டோன்கள், வண்ண தீம்கள், அனிமேஷன் படங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டருடன் போனை இணைத்துவிட்டு, நேரடியாக இணையத்திலிருந்து போனுக்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்.
91. அடுத்ததாக, மின் பத்திரிகைகள்! இணையத்தின் அசாதாரண வளர்ச்சி காரணமாக, தற்போதுள்ள நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அனைத்தும் தங்கள் ஆன்லைன் பதிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. மின் பதிப்புகள் மூலம் தமிழகத்தில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளையும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் படிக்கலாம்.
93. நாளிதழ்கள், பத்திரிகைகள் மட்டுமல்லாது, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணைய தளங்கள் உள்ளன. குறிப்பாக, மற்ற மொழிகளில் இல்லாத அளவுக்கும், தமிழில் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணையதளங்கள் ஏராளமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், நாளிதழ்களைவிட மிக வேகமாக, உடனுக்குடன் செய்திகளை புதுப்பித்துத் தருவதில் இணையதளங்கள் தனித்து நிற்கின்றன.
97 வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி மேற்படிப்புகளுக்கு உதவிபுரியும் ஏராளமான இணையதளங்களும் ஆன்லைனில் உலவுகின்றன. நிபுணர்களின் ஆலோசனைகள், கல்வி அறிஞர்களின் வழிகாட்டுதல்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பீடுகள் என, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழிகாட்டியாக இந்த இணைய தளங்கள் செயல்படுகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons