19 நவ., 2010

வேலைக்கான நேர்காணலில்

நீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..?
எந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..!
உங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..?
உன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.
உங்களுடைய தனித்திறமை என்ன..?
வேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.
உங்கள் மிகப்பெரிய பலம்..?
இதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..
பலவீனம்..?
ஹி..ஹி.. பெண்கள்..!
இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..?
அப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..?
நீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன..? அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..?
ஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.

ஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..?
நீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..!
இந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..?
நல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons