19 நவ., 2010

சூப்பர் டிப்ஸ் 100

1970-களில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட கணினி, 80-களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டது. 90-களில் நம் வீட்டுச் செல்லங்களின் படிப்பையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியது. இதன் நீட்சியாக… ‘வீட்டுக்கு ஒரு மரம்’ என்று சொல்லப்படுவது போல்… ‘வீட்டுக்கு ஒரு கணினி’ என்பது காலத்தின் கட்டாயம் ஆகிப் போயுள்ளது இந்த 2010-ல்!
மிக முக்கிய பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கும் ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையவலை, கிட்டத்தட்ட உலகத்தையே வளைத்துப் போட்டுவிட்டது. அதை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஏணிப்படியாக, அறிவை வளர்ப்பதற்கான என்சைக்ளோபீடியாவாக என்று பலவாறு நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேசமயம், அழிவைத் தேடிக்கொள்ளும் ஆபத்தும் அதில் அதிகமிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்… அது எப்படி பயன்படப் போகிறது என்பதெல்லாம் நம் கைகளில்தான் இருக்கிறது.
1. கணினி பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட ஒரு மென்பொருளை வாங்குவதற்கு முன், அதன் சோதனைப் பதிப்பை இணையத்திலிருந்து பதிவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள். ஒரு மாத காலம் வரை இயக்கத்திலிருக்கும் சோதனைப் பதிப்பு மூலம் அந்த மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். சோதனைப் பதிப்புகள் முற்றிலும் இலவசம்.
இணைய இணைப்பு கொடுக்கும் பயனாளர்களில் 57% பேர் முதலில் தேடல் பொறிகளைத்தான் திறக்கின்றனர்; உலகம் முழுவதும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நுகர்வோரில் 93% பேர் தேடல் பொறிகளின் மூலம்தான் பொருட்களை வாங்குகின்றனர் என்கின்றன சில ஆய்வுகள். அந்த ‘ஸர்ச் இன்ஜின்’களை திறமையாகப் பயன்படுத்துவது எப்படி..? படியுங்கள்…
6. இணையத்தின் ‘டாப் ஒன்’ தேடுதல் பொறியாக கொண்டாடப்படுவது, ‘கூகுள்’தான். கூகுள் என்ற சொல், கூகோல் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. ’1 என்ற எண்ணுக்குப் பின்னால் நூறு பூஜ்ஜியங்கள்’ என்பதுதான் இந்தச் சொல்லுக்கு அர்த்தம். ஏராளமான வலைப்பக்கங்களை கூகுள் தேடித் தரும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
சராசரியாக இளைஞர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் கம்ப்யூட்டர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் மின்னஞ்சல்களைப் பகிர்ந்து கொள்கிறார் என்கிறது ஆய்வு ஒன்று. இளைஞர்கள் மட்டுமல்ல… உறவுகள், நண்பர்கள், அலுவலக அதிகாரிகள், வியாபாரிகள், தொழில் துறையினர், அரசியல்வாதிகள் என்று அனைத்து தரப்பினரும் மின்னஞ்சல் மூலமாக மில்லி செகண்டில் தாங்கள் விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்கிறார்கள். அந்த மின்னஞ்சலை அனுப்பும்போது சில ‘கவனிக்க’ சங்கதிகள் இங்கே…
20. நண்பரிடமிருந்து உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் தேவை. ‘ஃபார்வேர்ட்’ (Forward) பட்டன் அழுத்தி மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன், அந்த மின்னஞ்சலில் நண்பரின் தனிப்பட்ட விவரங்கள், அவரது தொலைபேசி எண் இருந்தால் அவற்றை நீக்கி விடுங்கள். வீண் சிக்கலுக்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.
37. இணைய இணைப்பைத் துண்டிப்பதற்கு முன், நீங்கள் பிரவுசிங் செய்த தடயங்களை நீக்கிவிடுங்கள். அதாவது, பிரவுசிங் ஹிஸ்டரி, தற்காலிக கோப்புகள், குக்கீஸ்களை அகற்றுங்கள். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர் எனில் Tools => Internet options செல்லுங்கள். ஃபயர்பாக்ஸ் எனில் Tools => clear recent history சென்று அனைத்தையும் அகற்றிவிடுங்கள்.
43. சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை நண்பர்கள் அல்லாது வேறு நபர்கள் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம். கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால், நமது சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் கும்பல் முழுமையாகப் பயன்படுத்தக் கூடும்.
50. நமது கம்ப்யூட்டரில் இருந்து இணையத்தின் மூலம் ஒரு தகவலை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் பேருதவி புரிவது போர்ட்கள். ஒரு கம்ப்யூட்டரில் மொத்தம் 65,535 போர்ட்கள் இருக்கும். அவற்றுள் ஒவ்வொரு போர்ட்டும் ஒவ்வொரு இயக்கத்துக்காக என்று பிரித்து ஒதுக்கப்பட்டிருக்கும். பிரிக்கப்படாத போர்ட்கள் வழியேதான் ஹேக்கிங் நடக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons