15 நவ., 2010

”தம்” வினை அனைவரையும் சுடும்....

நீங்க தம் பார்ட்டியா... ச்சும்மா புஸ்புஸ்னு ஊதித் தள்ளு-வீங்களா? நீங்க நெனைக்--குறது ஒண்ணு... நெசத்துல நடக்குறது ஒண்ணு கண்ணு! 



நெனப்பு: 'தம் அடிக்கிறதை எப்போ வேணும்னாலும் நிறுத்து-வேன். எனக்கு அது வெரி சிம்பிள்!'

நெசம்: ஆண்டுக்கு 3.5 கோடி பேர் சிகரெட் பழக்கத்தை நிறுத்த முயற்சித்து, அதில் 7 சதவிகிதத்தினர் மட்டுமே வெற்றி அடைகிறார்கள்! 

நெனப்பு: 'என் வாய், என் காசு.நான் தம்மடிக்கிறேன். மத்தவனுக்கு என்ன?' 

நெசம்: ஆண்டுக்கு 49 ஆயிரம் பேர் பாசிவ் ஸ்மோக்கிங்கால் (புகை பிடிப் பவரின் அருகில் இருப்பவரும் அந்தப் புகையைச் சுவாசிப்பது) பாதிக்-கப்பட்டு இறக்கிறார்கள். நீங்க தம் அடிச்சா, உங்க குழந்தை, உங்க குடும்பம் எல்லாருக்கும் பாதிப்பு! 

நெனப்பு: 'தம் அடிக்கிறதை நிறுத்தினா வெயிட் போடுவோம்!'

நெசம்: உண்மைதான். ஆனால் அது நல்ல அறிகுறி. 'உங்கள் செரி-மானம் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக மாறுகிறது' என்று அர்த்தம்! 

நெனப்பு: 'தம் அடிக் கிறது மேன்லி கம் செக்ஸி! அது ஆண்மை-யின் அடை--யாளம்!'

நெசம்: அதெல்லாம் அந்தக் காலம். '86 சத விகிதம் பெண்கள் தம் அடிக்காத ஆண்களையே விரும்புகிறார்கள்' என்கிறது ஒரு சர்வே! 

நெனப்பு: 'போதையை விடணும்னா எப்போ தேவையோ அப்போ போய் டிரீட்மென்ட் எடுத்துக் குணமாகலாம். என்ன அவசரம்?'

நெசம்: போதைக்கான சிகிச்சையை நீண்ட நாள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியிருக்கும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், தவணை முறை யில் மரணம் நெருங்கும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons