17 நவ., 2010

குர்ஆன் பார்வையில் அறிவியல்


கோள்கள், துணைக்கோள்கள், நட்சத்திரங்கள் யாவும் நீந்திச் செல்ல அவைகளின் படைப்பாளானால் வடிவமைக்கப்பெற்ற பேரண்டப் பெருவெளியே ஆகாயம். இது பூகோளத்தைப் போன்று பற்பல கோள்களையும், நிலவைப் போன்று பற்பல துணைக் கோள்களையும் கொண்டிருந்தாலும், அவை எவற்றிலும் வாழ்வதற்குரிய வசதியை இதுவரை கண்டறியாத அறிவியல் கண்களுக்கு இப்பூமியில் காணப்படும் வாழ்க்கை வசதி அளப்பறிய வியப்பை அளிக்கிறது. 
'அல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியை தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்..' (அல்- குர்ஆன் அத்தியாயம் 40 ஸுரத்துல் முஃமின் - வசனம் 64),

'அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 15வது வசனம்)

'..வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா?..' (அல்-குர்ஆன் அத்தியாயம் 67 ஸுரத்துல் முல்கு - 17வது வசனம்)

மேற்கண்ட வசனங்களை மெய்ப்பித்து நிற்கிறது. 

ஏனைய கோள்களை, துணைக்கோள்களைப் போல பூகோளத்திலும் வாழ்க்கை வசதி அற்ற சூழ்நிலையும், அச்சூழ்நிலையை அளிப்பதில் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் காற்று மண்டலக் கூரையும் இல்லாத நிலை நீடித்திருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக உயிரினம் தோன்றிய பூமியில் மட்டும் அந்த வசதியும், சூழ்நிலையும் ஏற்படுத்தப் பட்டிருப்பதிலிருந்தே பூமியில் உயிரினம் வாழவேண்டும் என்ற நாட்டமும், நோக்கமும் கொண்ட ஏதோ ஒரு சக்தி செயல் பட்டிருக்கிறது எனபதை உணரலாம். அதற்கு இதுவரை கூறப்பட்டவை அசைக்க முடியாத அறிவியல் ஆதாரங்களாகும். 

அறிவியல் அபிமானிகளே! இவற்றை மறுப்பதற்குரிய அறிவியல் ஆதாரங்கள் எவற்றையேனும் உங்களால் காட்ட முடியமா?. 

மானிடக் கற்பனைகளையே கடை விரித்து வேதங்களாய் அறிமுகப் படுத்தப் பட்டதைக் காலங்காலமாய்க் கண்டு வந்ததால் இறை மறுப்பில் இறுகிப்போன உள்ளங்களே! உங்கள் முன் எடுத்துக் காட்டப்படும் மெய்யான இறை வேதத்தின் தூய வசனங்களுக்கு நவீன அறிவியல் அசைக்க முடியாத சாட்சியாய் தன்னை அர்ப்பணித்து நிற்பதை காண்கிறீர்கள் அல்லவா?. எனினும் நீங்கள் கண்டு வந்த கற்பனைப் புதினங்கள் அறிவியலோடு மோதுவதால், வேதங்கள் என்றாலே இப்படித்தான் என்ற எண்ணத்தில் இறுகிப்போன உங்களில் சிலருக்குப் பரிசுத்த குர்ஆனின் அறிவியல் ஆதாரங்கள் வியப்போடு - வினாவையும் எழுப்புகின்றனவா?. உங்கள் வினாக்குறிகள் யாவற்றையும் அகற்றக் கூடிய ஆதாரங்களை - பர்pசுத்த குர்ஆன் இறை வசனங்களே என்பதற்குரிய அறிவியல் சான்றுகளை - ஒவ்வொன்றாக உங்கள் முன் எடுத்துக் காட்டுகிறோம். சுpந்திக்கத் தெரிந்தவர்களே! விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு அவைகளைச் சிந்தியுங்கள். 

நவீன அறிவியல் விண்ணகப் பருப்பொருட்களின் சலனங்களை, வானசாஸ்திரத்தைப் பற்றி என்ன கூறுகிறதோ அதை இம்மியும் பிசகாமல் 1400 வருடங்களுக்கு முன் பரிசுத்த குர்ஆன் கூறி நிற்கும் அதிசயத்தைப் பாருங்கள். பரிசுத்த குர்ஆன் பறை சாற்றுகிறது:

'நிச்சயமாக வானங்களும், பூமியும் (ஒன்றை விட்டு ஒன்று) விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கிறான்: அவை இரண்டும் விலகுமாயின், அதற்கு பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது..'(அல்-குர்ஆன் 35வது அத்தியாயம் ஸுரத்துல் ஃபா(த்)திர் 41வது வசனம்).

இந்த வசனத்தில் வானங்களும், பூமியும் விலகும் வாய்ப்பைக் கொண்டன என்றும், ஆனால் அவை விலகி விடாத ஏற்பாடு ஒன்றை அமைத்து, அவை விலகும் வாய்ப்பைத் தடுத்துக் கொண்டிருப்பதாகவும் இறைவன் கூறுகிறான். 

இந்த அற்புத வசனம் அறிவியல் வாயிலாக நிரூபிக்கப்பட வேண்டுமாயின் பூமியும், ஆகாயமும் விலகும் வாய்ப்பு இருக்கிறதா? என முதலாவதாக நாம் ஆய்வு செய்ய வேண்டும். நாம் இதைக் கூறும்போது.. என்னய்யா உளறுகிறீர்கள்?. விண்ணும் மண்ணும் விலகக் கூடியதா?. முடியவே முடியாது எனக் கூறித் தாங்கள் கற்றுணர்ந்ததைக் கூடப் பொருத்திப் பார்க்காத அல்லது பொருத்திப் பார்க்க விரும்பாத கல்விமான்களை இந்த நூற்றாண்டில் கூட நாம் பார்க்கிறோம். நிலமை இவ்வாறிருக்க 1400 ஆண்டுகளுக்கு முந்திய அறியாமை காலத்தில் வாழ்ந்த எந்த மனிதனாவது இந்த அறிவியல் பேருண்மையைக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா?. இருந்தும் அந்த மாமனிதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்கிறார் என்றால் இது அவருடைய சொந்த வார்த்தை அல்ல என்றும், விண்ணும் மண்ணும் படைத்து, அவை விலகாமல் இருக்கும் செயல் முறைகளையும் அவைகளில் வடிவமைத்தவன் யாரோ, அவனுடைய வார்த்தைகளே என்றும் ஏற்பதில் தயக்கம் காட்டுவது முறைதானா?. 

விண்ணும், மண்ணும் விலகிப்போகும் வாய்ப்பைக் கொண்டன எனப் பறை சாற்றியதே பரிசுத்தக் குர்ஆன், அதை நிரூபிக்கக் கூடிய அறிவியல் சான்றுகள் எவை?. இதற்கு விடைகாணும் பொருட்டு இந்தப் பரிசுத்த குர்ஆனின் வசனத்திடம் மேலும் சற்று நெருங்கிச் செல்வோம்.

முதலாவதாக இவ்வசனம் விண்ணும், மண்ணும் விலகி விடாமல் தடுக்கப்படுகிறது எனக் கூறுவதிலிருந்து மண்ணானது (பூகோளம்) ஆகாயத்தில் பொருந்தியே இருக்கிறது. அவைகளுக்கிடையில் எந்த இடைவெளியும் இல்லை எனக் கூறுகிறது. இதை வலியுறுத்தும் ஏனைய ஆதாரங்களுள் மேலும் ஒன்றைக் கவனியுங்கள்.

'ஆகாயத்தில் கிரகங்களுக்கான (கோள்களுக்கான) பாதைகளை நிச்சயமாக நாம் அமைத்து, பார்ப்போருக்கு அவற்றை அலங்காரமாகவும் ஆக்கினோம்.' (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 16வது வசனம்).

இந்த வசனமும் கோள்களைச் சுற்றி ஏதேனும் இடைவெளி இருப்பதாகவோ, அப்படிப்பட்ட இடைவெளிகளில்தான் கோள்கள் இருப்பதாகவோ கூறவிவ்வை. மாறாகக் கோள்கள் இருப்பது ஆகாயத்தில்தான் எனக் கூறுகிறது. இதிலிருந்து பூகோளத்திற்கு மேல் போர்த்தப் பட்டுள்ள காற்று மண்டலமும் ஆகாயத்தைச் சார்ந்த பகுதியே என்பது தெளிவாகிறது.

இந்த இடத்தில் மற்றொரு ஐயமும் எழலாம். 'ஆகாயத்தை ஒரு கூரையாக ஆக்கினான்' என்று குர்ஆன் கூறிய (40:64) வசனம், காற்று மண்டலத்தை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கிறதே. ஆகவே கூரையாக ஆக்கப்பட்ட இப்பகுதியை இதற்கு மேலும் நாம் ஆகாயம் என்று எடுத்துக் கொள்ளலாமா? என்பதே அந்த ஐயமாக இருக்கும். இந்த ஐயத்திற்கும் பரிசுத்த குர்ஆன் பதிலளிக்கிறது.

'இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம். பின்னர் வானத்திலிருந்து நாம் மழை பொழிவித்து, அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்...' (அல்-குர்ஆன் அத்தியாயம் 15 ஸுரத்துல் ஹிஜ்ர் - 22வது வசனம்).

இந்த வசனத்தில் மழையை அனுப்புவது ஆகாயத்திலிருந்தே எனக் கூறுகிறது குர்ஆன். மழை புறப்படும் இடம் ஆகாயம் எனக் குர்ஆன் கூறுவதால், மழை புறப்படும் இடமாகிய காற்று மண்டலம் ஆகாயத்திலிருந்து தனிமைப் படுத்தப்பட்ட பகுதியல்ல என்பதையும் பரிசுத்த குர்ஆனே விளக்குகிறது. எனவே ஆகாயம் என்ற சொல் காற்று மண்டலத்தையும் உள்ளடக்கியதே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 

மேற்கண்ட வசனங்களிலிருந்து பூகோளத்தைப் பொருத்தவரை ஆகாயத்தின் கீழ் எல்லை எது எனத் தெரிந்து விட்டது. பூகோளம் (ஏனையக் கோள்களும்) இடைவெளியின்றி ஆகாயத்தில் பொருந்தியிருப்பதால், பூகோளத்தின் மேற்பரப்பிலிருந்து ஆகாயம் பரவியிருக்கிறது என்பது தெளிவாகிறது. 

ஆகாயத்தின் கீழெல்லையை கண்டு விட்டோம். சரி. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி திருக்குர்ஆன் ஏதேனும் கூறுகிறதா?. நிச்சயமாக கூறுகிறது. ஆகாயத்தின் மேலெல்லையைப் பற்றி அதற்குரிய ஆதாரங்களுடன் அருள்மறை குர்ஆன் கூறவே செய்கிறது. 

'நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் ஆகாயத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அலங்கரித்தோம்.' (அருள்மறை குர்ஆன் 37 வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்)

'ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் எனபதை நீங்கள் பார்க்கவி;ல்லையா?. இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.' (அருள்மறை குர்ஆன் 71வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸாஃப்ஃபாத் 6வது வசனம்). 

மேற்கண்ட வசனங்களிலிருந்து இத்தலைப்புக்குத் தேவையான விபரங்களை மட்டும் பார்ப்போம். ஆகாயங்கள் மொத்தம் ஏழு எனவும், பூமிக்குரிய ஆகாயமே நட்சத்திரங்களின் அழகால் அலங்கரிக்கப் பட்டுள்ளது எனவும் எல்லா ஆகாயங்களிலும் நட்சத்திரங்கள் (சூரியன்), துணைக்கோள்கள் (சந்திரன்) உள்ளடங்கியுள்ளன எனவும் குர்ஆன் கூறுகிறது.

மேற்கண்ட வசனத்தில் ஆகாயங்கள் யாவும் நட்சத்திரங்களை உள்ளடக்கி இருக்கின்றன என கூறுவதிலிருந்து, ஆகாயத்தின் மேலெல்லையும் நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது எனக் காண்கிறோம். 

'நட்சத்திரங்களை உள்ளடக்கி நிற்கிறது' என்று கூறினால் என்ன பொருள்?. பிரபஞ்சம் முழுவதும் நட்சத்திரங்கள் பரவி, அந்த நட்சத்திரங்களை உள்ளடக்கும் விதத்தில் ஆகாயமும் பரவி எல்லையே இல்லாமல் ஒரே பெருவெளிதானா?. அல்லது பிரபஞ்சத்திலிருந்து ஒரு குறிப்ப;ட்ட பகுதி வரை ஆகாயமும், அதிலுள்ள நட்சத்திரங்களும் பரவி, பிரபஞ்சத்திலிருந்து தனிப்பட்ட, தனியொரு பொருளாக ஆகாயம் இருக்கிறதா? என்ற வினா இப்பொது எழுகிறது. இந்த வினாவுக்கும் பரிசுத்த குர்ஆனே விடையளிக்கிறது:

'ஜின் (மற்றும்) மனித சமூகத்தினரே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளை கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்..' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் - 33 வது வசனம்)

மேற்படி வசனம் பிரபஞ்சம் முழுவதுமே ஆகாயமன்று. ஆகாயங்களுக்கும் நிச்சயமாக ஓர்; எல்லை இருக்கிறது. எனவே ஆகாயம் எனத் தனியான ஒரு அமைப்பு இருக்கவே செய்கிறது என்பதை தெளிவாக அறிவிக்கிறது.

இதுவரை நாம் கண்ட விஷயங்களில் இருந்து பூமியன் மேற்பரப்பிலிருந்து துவங்கிக் கோள்களையும், துணைக் கோள்களையும், நட்சத்திரங்களையும் உள்ளடக்கிய அகன்ற பெருவெளியாய்ப் பரவி, அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கும் உட்பட்டு தனிச் சிறப்புடன் விளங்குவதே ஆகாயம் (பேரண்டம்) எனக் கண்டோம்.

விண்ணகப் பருப்பொருட்கள் யாவற்றையும் உள்ளடக்கி, நெடிதுயர்ந்து பரவிக் கிடக்கும் பேரண்டப் பெருவெளி. அதில் ஏனைய பருப்பொருட்களைப் போல் இடைவெளி ஏதுமின்றி பொருந்தி நிற்கும் பூகோளம். இந்த பூகோளம், அது பொருந்தி நிற்கும் பேரண்டப் பெருவெளியிலிருந்து விலகிச் செல்லும் வாய்ப்பைக் கொண்டதா?. ஆம் எனில் அது விலகிச் செல்கிறதா?. இல்லையெனில் அந்த விலகலைத் தடுக்கும் சக்தி ஒன்று அதற்குள் செயல்படுகிறதா?. இதுவே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் கருப்பொருள். 

பரிசுத்த குர்ஆனின் பிரகடனத்தை, அதன் உண்மை நிலையை நமக்குக் கற்றுத்தர, அருள்மறை குர்ஆன் மேலும் கூறுகிறது:

'இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான்: (அவை) யாவும் (அவைகளுக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் செல்கின்றன.' (அருள்மறை குர்ஆன் 21வது அத்தியாயம் ஸுரத்துல் அன்பியா - 33வது வசனம்).

அற்புதம்தான்! நவீன் வான சாஸ்திரத்தின் திறவுகோலையும் நமக்களித்து, நாம் தேடிச் செல்லும் கருப்பொருளின் நுழைவாயிலுக்கே நம்மை அழைத்துச் செல்கிறது ஒப்பற்ற இறை வேதத்தின் மெய்யான இந்த பரிசுத்த வசனம். 

என்ன கூறுகிறது இந்த வசனம்? விண்ணில் காணப்படும் சூரியன், சந்திரன், உள்ளிட்ட பருப்பொருட்கள் யாவும் ஒரே இடத்தில் ஓய்ந்திருக்காமல் அவைகளுக்கென்றே இருக்கும் மண்டலங்களில் அவை ஒவ்வொன்றும் பயணம் செய்கின்றன எனக் கூறுகிறது. 

அற்புதமல்லவா! இது புவி மையக் கோட்பாட்டை தகர்த்தெறியவில்லையா?. எங்கிருக்கிறீர்கள் நண்பர்களே!. இதில் எதை நீங்கள் மறுக்கிறீர்கள்?. விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தை மறுக்கிறீர்களா?. அல்லது அவைகளுக்குரிய மண்டலத்தை மறுக்கிறீர்களா?. இல்லை. இரண்டையுமே நீங்கள் ஒப்புக் கொண்டு இந்த வசனம் மெய்யான வசனமே என உங்களை அறிந்தோ - அறியாமலோ அதற்கு சாட்சியாக நிற்கிறீர்கள். 

பரிசுத்த குர்ஆனை மெய்ப்பிக்க வந்த அறிவியல், இந்த விண்ணகப் பருப்பொருட்களின் சலனத்தைப் பற்றி என்ன கூறுகிறது?. 

சந்திரன் மணிக்கு 3,600 கி.மீ. வேகத்தில் செல்கிறது. பூமியானது மணிக்கு 1,08,000 கி.மீ. வேகத்தில் ஓடுகின்றது. சூரியன் மணிக்கு 9,00,000 கி.மீ. வேகத்தில் பாய்கிறது எனக் கூறுகிறது அறிவியல். 

சூரியன் மட்டும்தான் ஓடுகின்றதா? ஏனைய நட்சத்திரங்கள் ஓடவில்லையா?. ஏனில்லை?. அனைத்தும் ஓடுகின்றன. வானியல் அறிஞர்கள் நிறமாலை நோக்கிகளின் துணை கொண்டு விண்ணை ஆய்வு செய்யக் கற்றுக் கொண்ட பின் விண்ணில் எதுவும் ஓய்ந்திருக்கவ;ல்லை: யாவும் அவைகளுக்குரிய திசைகளிலும், திசை வேகத்திலும் (ழுசடிவையட ஏநடழஉவைல) சென்று கொண்டிருக்கின்றன எனக் கூறிப் பரிசுத்த குர்ஆன் மெய்யான இறைவேதமே என்பதற்கு தன்னையே சாட்சியாக அர்ப்பணித்து நிற்கிறது.

அறிவியல் அபிமானிகளே! நாம் வசிக்கும் இந்த பூமி ஓரிடத்தில் ஓய்ந்திருக்காமல் அதன் பாட்டுக்கு மணிக்கு 1,08,000 கி. மீ. வேகத்தில் ஓட்டம் பிடித்தால் என்றேனும் ஒரு நாள் இந்த பூகோளம் பேரண்டத்தின் எல்லையை தாண்டுமா, தாண்டாதா?. அதுதான் போகட்டும் - கோடிக்கணக்கான வருடங்களாக இந்த நிகழ்ச்சிப் போக்கு நடந்து கொண்டிருக்கையில் குறைந்த பட்சம் இந்த பூமி அது உள்ளடங்கியிருக்கும் பால்வழி மண்டலத்தையாவது என்றோ தாண்டியிருக்க வேண்டாமா?. தாண்டியே சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் தாண்டவில்லை?. 

ஆகாயத்திற்கு ஓர் எல்லை உண்டு என்று பரிசுத்த குர்ஆன் கூறியதையோ, அல்லது பால்வழி மண்டலம் (அதைப்போன்று பற்பலவும்) உண்டு என அதே பரிசுத்த குர்ஆன் கூறுவதையோ நீங்கள் மறுக்கிறீர்களா?. இல்லை. நவீன அறிவியலின் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகள் பேரண்டத்தின் எல்லைகளையே நமக்குக் காட்டி, இப்பேரண்டம் ஓர் எல்லைக்குட்பட்டதே என 1400 வருடங்களுக்கு முன்பே அறிவியல் பேருலகில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய பரிசுத்த குர்ஆனை மெய்ப்பித்து நிற்கையில் நீங்கள் குர்ஆனை மறுக்க முடியாது. பேரண்டத்திற்கு ஓர் எல்லை இருப்பதும் உண்மை: அந்தப் பேரண்டத்திற்குள் பூகோளமும், ஏனைய யாவும் விண்ணோட்டம் நிகழ்த்தி கொண்டிருப்பதும் மெய்யே என ஒப்புக் கொண்ட பிறகு, விண்ணோடிக் கொண்டிருக்கும் இப்பொருட்கள் என்றேனும் ஒரு நாள் அதற்குள்ளிலிருந்து விலகிச் செல்லுமா, செல்லாதா என்ற வினா எழுகிறதா இல்லையா?.

அறிவார்ந்த நண்பர்களே! மேற்கண்ட அதே வினாவை வேறு வார்த்தைகளில் கேட்டால் எப்படிக் கேட்கலாம்?. ஆகாயமும், பூமியும் விலகுவதற்குரிய வாய்ப்பு உண்டா என்று கேட்கலாம். இப்படியொரு கேள்வியைக் கேட்க வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த ஞானக் களஞ்சியமாம் பரிசுத்த குர்ஆன் (அதை மெய்ப்பிக்க வந்த அறிவியலும்) அறைந்தது: விலகாது! விலகவே விலகாது! ஏனெனில் விலகாதவாறு அவைகளைப் படைத்த அதியற்புதப் படைப்பாளனாகிய அதனுடைய படைப்பாளன்தான் அதனைத் தடுத்துக் கொண்டிருக்கிறான் என்று.

விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறுகிறதே பரிசுத்த குர்ஆன். இதிலாவது உங்கள் எவருக்கும் ஐயம் ஏற்படுமா?. அப்படி ஏதேனும் ஐயம் ஏற்படுமேயானால் இரண்டு காரணங்களால் உங்கள் ஐயம் விலகியாக வேண்டும். முதல் காரணம் மெய்யாகவே பூகோளத்தின் விண்ணோட்டம் பேரண்டத்தின் எல்லையைத் தாண்டும் இலக்கில் அமைந்திருந்தால் தற்போது நமது பூமி பால்வழி மண்டலத்தில் இருந்திருக்க முடியாது. ஏன்?. ஏனென்றால் பூமியின் திசை வேகம் இம்மண்டலத்தை என்றோ - அதைத் தாண்டச் செய்திருக்கும். எப்படி?.

எப்படியென்பதைப் பார்ப்போம். பால்வழி மண்டலத்தின் பருமன் 10,000 ஒளியாண்டுகள் ஆகும். ஒளியாண்டு (டுiபாவ லநயச) என்பது ஒரு மூலப் பொருளிலிருந்த புறப்படும் ஒளி வருடம் முழுவதும் தொடர்ந்து போய்க் கொண்டிருந்தால் எவ்வளவு தொலைவை அது கடக்குமோ, அவ்வளவு தொலைவு என்பது அதன் பொருள். ஒளி ஒரு வினாடியில் செல்லும் தொலைவு (தூரம்) 3,00,000 கி. மீ. ஆகும். இதன்படி நிதானமாகக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு மணி நேர ஒளித்தூரம் என்பது 10,000 மணிநேர பூமி பயணத் தூரத்திற்கு சமமாகும். ஆகவே 10,000 ஒளி வருடப் பருமன் கொண்ட பால்வழி மண்டலத்தை பூகோளம் வெறும் 10 கோடி வருடத்திற்குள்ளாகவே கடந்து சென்றிருக்கும். ஆனால் பேரண்டத்தில் பூகோளம் உருவாகி 500 கோடி வருடங்களாக பூகோளத்தின் விண்ணோட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தும் கூட, இந்த பூகோளம் பால்வழி பெருமண்டலத்திலேயேதான் இருந்து வருகிறது. ஆகவே விண்ணும், மண்ணும் விலகாமல் தடுக்கப்படுகிறது என்று கூறும் பரிசுத்தக் குர்ஆனை நம்பித்தான் ஆக வேண்டும் என முதல் காரணத்தில் காணப்படும் அறிவியல் பேருண்மையே நம்மீது நிர்ப்பந்தம் செலுத்துகிறது.

அருமை நண்பர்களே! அறிவியல் அபிமானிகளே! அடுத்த காரணத்தைக் காண்பதற்கு முன் சற்று நேரம் அறிவியலே நம்பும்படி நிர்ப்பந்திக்கும் ஒன்றை ஒருவர் நம்ப மறுத்தால் அவர் அறிவியல் அபிமானியா? அல்லது அறியாமையின் அபிமானியா என்று சிந்தியுங்களேன்..!
சான்று 1 – குர்ஆனில் முரண்பாடுகளில்லை
முஹம்மது (ஸல்) அவர்கள் எதை இறை செய்தி என்று சொன்னார்களோ அந்த குர்ஆனில், முரண்பாடுகள் உள்ளது என்றோ அல்லது தவறு நிறைந்துள்ளது என்றோ இது வரை எவராலும் நிரூபிக்க முடியவில்லை. பொய்யர் என்று அடிப்படையில்லாமல் கூறியவர்கள் குர்ஆனை பொய் என்று நிரூபித்திட முடியவில்லை. குர்ஆனைப் போன்ற ஒன்றை எவராலும் கொண்டுவர முடியாது என்ற குர்ஆனின் சாவல் 1400 ஆண்டுகாலம் ஆகிவிட்ட நிலையிலும் முறியடிக்கப்பட முடியாமல் இன்னும் நிலுவையிலேயே உள்ளது. இதைத்தான் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
அவர்கள் இந்த குர்ஆனை கவனமாக சிந்திக்க வேண்டாமா, இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன் 4 : 82) 
இதை நம் தூதராகிய அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!'' என்று. (திருக்குர்ஆன் 10 : 38)

சான்று 2 – [u]அபூலஹபைப் பற்றி திருக்குர்ஆன்[/u]. 
மக்கா நகர் நிராகரிபாளர்களில் ஒருவனான அபூலஹப் இஸ்லாத்தை எதிர்ப்பதில் முன்னனியில் இருந்தான். முகம்மது நபியவர்களுக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வந்தான். இவனுக்கு நரகம் தான் பரிசாகும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
'அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும். அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. (திருக்குர்ஆன் 111: 1,2)' என்றும் கூறுகிறது.
அபூலஹப் உயிரோடு இருக்கும் போது இறங்கிய வசனங்களாகும் இது. இதே அபூலஹப் நினைத்திருந்தால் என்னைப் பற்றி முஹம்மது பொய் சொல்கிறார் என்று ஒரு வெளித்தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலாவது 'நான் முஸ்லிமாகிவிட்டேன்' என்று அறிவித்திருக்கலாம். அவன் முஸ்லிம் என்று அறிவித்திருந்தாலே அவனைப்பற்றி கூறும் இவ்வசனங்களை முஹம்மது (ஸல்) அவர்கள் கற்பனையாக கூறியுள்ளார் என்று நிரூபணமாகியிருக்கும். அவ்வாறு ஏதும் நடைபெறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையாளர் என்பதற்கும், அவர்கள் இறைவனிடத்திலிருந்து பெற்றுத்தந்த இக்குர்ஆன் உண்மைதான் என்பதற்கும் இவ்வசனங்களும் சாட்சி பகர்கின்றன.

சான்று 3 – பிர்அவ்ன் உடலை பாதுகாப்போம் என்று கூறும் திருக்குர்ஆன். 
நபி மூஸா (அலை) (மோசஸ்) அவர்களை எதிர்த்து அவர்களைப் பொய்ப்படுத்த முயன்ற பிர்அவ்னை கடுமையாகத் தண்டித்தான் இறைவன். பின்னர் அவனிடம் கூறப்பட்ட செய்தியை இறைவன் பின்வருமாறு திருக்குர்ஆனில் கூறுகிறான். 
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்'' என்று அவனிடம் கூறப்பட்டது. (திருக்குர்ஆன் 10: 92). 
இன்றுவரை பிர்அவ்ன் என்ற இரண்டாம் ரம்ஈஸஸின் உடல் கண்டெடுக்கப்பட்டு கெய்ரோ அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டுள்ளது. பிர்அவ்னின் உடலைப் பாதுகாப்போம் என்று இறைவன் அறிவிப்பதாக முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மையே சொன்னார்கள் என்பதற்கு நம் கண்களுக்கு முன்னால் இருக்கும் இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை? அவனுடைய உடல் மம்மி வகையில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சான்று 4 – குர்ஆன் கூறும் இந்நூற்றாண்டின் அறிவியல் உண்மைகள்.
விண்ணியல், மண்ணியல், கருவியல், கடலியல் என்று இந்நவீன நூற்றாண்டின் அனைத்து இயல்களைப் பற்றியும் பல அறிய விஷயங்களை முஹம்மது (ஸல்) அவர்கள் இறைசெய்தியாகத் தெரிவித்தார்கள். அத்தகைய இறைச் செய்திகளாகிய திருமறை குர்ஆன் வின்வெளிக்கு மனிதன் செல்லலாம் ஆனால் அதற்குத் தேவைப்படும் சக்தியோடு செல்ல வேண்டும் என்று கூறுகிறது. விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்கும் என்றும் சொல்கிறது. இப்பிரபஞ்சம் ஒரே பொருளாக இருந்து பின்னர் வெடித்துச் சிதறி பல கோள்கள் உண்டாகியது என்ற பெருவெடிப்புக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறது. சூரியனும் மற்ற கோள்களும் அவைகளுக்காக வரையறுக்கப்பட்ட பாதைகளில் நீந்துகின்றன ஓடுகின்றன என்கிறது இக்குர்ஆன். இவ்வாறு குர்ஆன் கூறும் இந்நூற்றாண்டின் அறிவியல் உண்மைகள் அனைத்தும் இக்குர்ஆன் இறைவேதமே என்பதை பறைசாற்றுகிறது. இக்குர்ஆன் இறைவனிடமிருந்து வந்துள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையையே சொல்லியிருக்கிறார்கள் என்பதற்கு சாட்சியம் கூறுகின்றன.
அறிவியலின் வாடையைக் கூட நுகரமுடியாத அக்காலத்தில் எந்த மனிதனாலும் இந்த அளவிற்கு கற்பனை செய்ய இயலுமா? முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதராக இல்லாமல் நம்மைப் போன்ற சாதாரண மனிதராக மட்டும் இருந்திருந்தால் இவைகளைப் பற்றி சிந்தித்திருக்கவே முடியாது. முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மாபெரும் உண்மையாளர் என்பதை குன்றிலிட்ட தீபம் போல விளங்க வைக்கும் அவ்விறைவசனங்கள் இதோ

"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள். ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது. (திருக்குர்ஆன் 55 : 33)
அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, செய்கிறான் -வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். (திருக்குர்ஆன் 6 : 125)

நிச்சயமாக வானங்களும், பூமியும் முதலில் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? இவற்றைப் பார்த்தும் அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (திருக்குர்ஆன் 21 : 30)

''நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்'' என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். (திருக்குர்ஆன் 31 : 29)

சான்று 5 – பூமியைப் பற்றி திருக்குர்ஆன்
பூமியின் வடிவத்தையும் அதற்கு இருக்கும் ஈர்ப்பு சக்தி என்று ஒன்று இருப்பதையும் தெளிவாக தெரிவிக்கிறது இக்குர்ஆன். வானத்திற்கும் பூமிக்கும் உள்ள ஈர்ப்பு சக்தியையும் விட்டு வைக்கவில்லை இந்தக் குர்ஆன். பூமியில்தான் நாம் வாழமுடியும் என்கிறது குர்ஆன். இப்படி அடுக்கடுக்கான அறிவியல் உண்மைகளை இறைவன் அறிவிப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த அறிவியல் உண்மைகளுக்கு மாற்றமாக பொய்கள் எங்கே இருக்கிறது? 
இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே. (திருக்குர்ஆன் 55 : 17)
அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம். (திருக்குர்ஆன் 31 : 10)
நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன். (திருக்குர்ஆன் 35:41)
(அதற்கு இறைவன், ''இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு'' என்று கூறினான். (திருக்குர்ஆன் 7:24)
''அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்'' என்றும் கூறினான். (திருக்குர்ஆன் 7:25)

டாக்டர் T.V.N. பெர்சாத்!
இவர் உயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும்Professor of Pediatrics and Child Health, and Professor of Obstetrics, Gynecology and Reproductive Sciences at the University of Manitoba,Winnipeg,Manitoba,Canada. இவர் உயிரியல் துறையில் பணியாற்றியது 16 வருடங்கள். உயிரியல் துறையில் இவரை அறியாதவர் யாரும் இல்லை எனலாம். மேலும் இவர் அறிவியல் சம்பந்தமாக 22 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். கனடா நாட்டின் மிக உயரிய விருதான ஜே.சி.பி விருதையும் பெற்றுள்ளார். இனி இவர் குர்ஆனைப் பற்றி கூறுவதைக் கேட்போம்.

'என்னைக் கேட்டால் முகமது எல்லோரையும் போல சாதாரண மனிதராகத்தான் இருந்திருக்கிறார். அவருக்கு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது. எனவே மிகப் பெரும் இலக்கியங்களை அறிந்திருக்க வாய்ப்பும் இல்லை. மேலும் 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு சில படிக்காத பாமரன் சொல்லும் ஒரு சில கருத்துக்கள் ஆச்சரியமாக அறிவியலோடு ஒத்துப் போவது எல்லா நாட்டிலும் பார்க்கும் சாதாரண நடைமுறைதான். ஆனால் ஒருவர் சொன்ன அனைத்து கருத்துகளும், அறிவியலோடு எந்த விதத்திலும் மோதவில்லை என்பதை நினைத்து நான் ஆச்சரியப் பட்டு போகிறேன். அவருக்கு தெய்வீகத் தன்மை இருக்க வேண்டும். அல்லது அவர் குர்ஆன் என்று சொல்வது இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”

2) டாக்டர் ஜோ லீ சிம்ப்ஸன்!

“In every one of you, all components of your creation are collected together in your mothers womb by forty days …..”

-Saheeh Muslim 2643 , Bhuhary – 3208
-Saheeh Muslim 2645

இந்த இரண்டு நபி போதனையிலும் முதல் நாற்பது நாளில் கருவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறதோ அவை அனைத்தும் மிகத் துல்லியமாக விவரிக்கப் படுவதாக லீ சிம்ப்ஸன்அறிவிக்கிறார்.மருத்துவ கருத்தரங்கில் அவர் பேசும்போது :

'ஆகையால் இந்த ஹதீஸ்களும் அருமையான அறிவியலைப் பேசுகின்றன. மருத்துவம் படிக்காத, எழுதவும் படிக்கவும் தெரியாத ஒருவர் கருவின் வளர்ச்சியை வரிசையாக பட்டியலிடுவது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. எனக்கு முன்னால் இங்கு காலையில் பேசியவர்களின் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன். கருவின் வளர்ச்சிக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றாலும் அறிவியலை நடத்திச் செல்வதற்கு குர்ஆனும் ஒரு தூண்டுகோலாய் இருக்கிறது என்பதை மறுக்க முடியபது. இது போன்ற உண்மைகள் முகமது காலத்தில் சொல்லப்பட்டிருப்பதால் இவை அனைத்தும் இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு நானும் வருகிறேன்.'

டாக்டர் ஜோ லீ சிம்ப்ஸன் மகப்பேறு, அணுவியல் ஆகிய இரு துறைக்கும் தலைவராக பணியாற்றியவர்.மேலும் மகப்பேறு மருத்துவம், மனிதனின் ஜீன்கள் சம்பந்தமான படிப்பு, அணுவியல் போன்ற துறைகளில் பேராசிரியராக Baylor College Of Medicine, Hoston, Texas,USA யில் பணியாற்றுகிறார். Formerly, he was Professor of OB-Gyn and the chairman of the Department of OB- Gyn at the university of Tennessee, Memphis, USA. He was also the president of the American Fertility Society. He has received many awards, including the Association of Professors of Obstetrics and Gynecology Public Recognition Award in 1992.

3) டாக்டர் இ மார்ஸல் ஜான்ஸன்!

இவர் 200க்கும் அதிகமாக அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். 1981 ல் சவூதி அரேபியா தமாமில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தனது அறிக்கையை வாசிக்கும் போது :

'குர்ஆன் கருவியலின் வெளிப்புறத்தை மட்டும் சொல்லவில்லை. கருவின் உள்ளே நடக்கும் அனைத்து படித்தரங்களையும் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல், இன்றைய அறிவியல் உண்மைகளை அடித்துக் கூறுகிறது.ஒரு விஞ்ஞானி என்ற நிலையில் ஒன்றைப் பார்த்து உறுதி செய்து அதன் பிறகுதான் நம்பிக்கை வைப்பேன். மனிதனின் உடற்கூறுகளை நன்கு அறிந்தவன்.உயிரியல் துறையிலும் நன்கு தேர்ந்தவன். குர்ஆனின் மொழி பெயர்ப்பு எனக்கு அங்கிலத்தில் தரப் பட்டது. குர்ஆனிலிருந்து உதாரணங்களை நான் எடுப்பதற்கு முன் முகமதுவுடைய காலத்துக்கு நான் செல்கிறேன். என்னால் அவருடைய போதனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.குர்ஆன் முகமது நபியால் சொந்தமாக தன் கற்பனையில் சொல்லியிருக்க முடியாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.'

Dr e. Marshall Johnson is Professor Emeritus of Anatomy and Developmental Biology at Thomas Jefferson University, Philadelphia, Pennsylvania,USA. There for 22 years he was Professor of Anatomy, the chairman of the department of Anatomy, and the director of the Daniel Baugh Institute. He was also the president of the Teratology society.

4) டாக்டர் வில்லியம் ஹே!

டாக்டர் வில்லியம் ஹே கடல் அராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி.

'இந்த பழமை வாய்ந்த குர்ஆனின் உண்மைகளைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன். இது போன்ற உண்மைகள் முகமதுக்கு எப்படி கிடைத்தது என்பது எனக்கு மிகப் பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. குர்ஆனின் வரிகளை படிக்கும் போது வியப்பின் உச்சத்துக்கே சென்று விடுகிறேன்.இந்த குர்ஆன் ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்று தான் நான் நினைக்கிறேன்.'

Dr William W.Hay is a well known marine scientist. He is professor of Geological Sciences at the University of Colorado, Boulder, Colorado,USA. He was formerly the Dean of the Rosential School of Marine and Atmospheric Science at the university of Miami,Miami, Florida.

5)டாக்டர் ஜெரால்ட் சி. ஜோரிங்கர்

'நான் சில குர்ஆனின் வசனங்களைப் படிக்கும் போது மனிதனின் உருவாக்கம் எந்த அளவு துல்லியமாக விளக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப் படுகிறேன்.எந்த ஒரு வேறுபாடும் அறிவியலுக்கும் குர்ஆனுக்கும் என்னால் காண முடியவில்லை. அறிவியலையும் குர்ஆனையும் என்னால் பிரித்துப் பார்க்கவும் முடியவில்லை.அறிவியல் வார்த்தைகளைக் குர்ஆன் அழகாக கையாள்கிறது. பல வருடங்கள் சிரமப்பட்டு ஒரு அறிவியல் புத்தகத்தை ஒருவர்உண்டாக்கினால் எப்படி இருக்குமோ அது போன்ற ஒரு தோற்றத்தை குர்அன் எனக்குத் தருகிறது.

Dr. Gerald C. Goeringer is course Director and Associate Professor of Medical Embryology at the Department of cell Biology, school of Medicine, Georgetown University, Washington, DC, USA.

6) டாக்டர் யோசிஹிடே கோசாய்!

'வானவியலைப் பற்றி குர்ஆன் கூறும் உண்மைகளை கண்டு நான் பிரமிப்படைகிறேன். வானவியல் அறிஞர்களான எங்களைப் போன்றவர்கள் இந்த உலகத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் இதுவரை ஆராய்ந்திருக்கிறோம். இன்னும் கண்டு பிடிக்க வேண்டியவை எண்ணிலடங்கா! அப்படி கண்டு பிடிப்பதற்குக் கூட அரிய தொலை நோக்கு கருவிகள், அறிவியல் அறிவு போன்றவை அவசியம். இவை அனைத்தும் தனக்குத் தேவையில்லை என்பது போல் குர்ஆனின் உண்மைகள் அமைந்திருக்கின்றன. வருங்காலத்தில் மேலும் பல உண்மைகள் வானவியலைப் பற்றி அறிய குர்ஆன் உதவி புரியும் என்று நினைக்கிறேன்.'

Dr Yoshihide Kozai is Professor Emeritus at Tokyo University, Hongo, Tokyo,Japan, and was the Director of the National Astronomical Observatory, Mitaka, Tokyo, Japan.

7) பேராசிரியர் தேஜாதத் தேஜாசென்!

மூன்று வருடங்களுக்கு முன்பு தான் குர்ஆனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த கருத்தரங்கின் மூலம் பல உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். 1400 வருடங்களுக்கு முன்பே அனைத்து உண்மைகளும் குர்ஆனில் பதியப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன்.அறிவியலோடு எந்த வகையிலும் மோதாத ஒரு புனித நூலாக குர்ஆனைப் பார்க்கிறேன்.எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நபரால் இத்தகைய அறிவியல் உண்மைகளை கற்பனையில் கொண்டு வர முடியாது என்பதை ஒரு விஞ்ஞானி என்ற முறையில் ஒத்துக் கொள்கிறேன். இந்த குர்ஆனைக் கொடுத்தது நம்மையெல்லாம் படைத்த அந்த ஒரே இறைவன்தான் என்பதை உறுதி செய்கிறேன். நான் நினைக்கிறேன், நான் முஸ்லிமாக மாறுவதற்கு தருணம் இது தாள் என்று! 'லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்பதை உளமாற ஏற்று இஸ்லாமிய மார்க்கத்துக்குள் நுழைகிறேன். இந்த கருத்தரங்கினால் பல அறிவியல் விற்பன்னர்களைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இவை அனைத்திற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன்.'

Professor Tejatat Tejasen is the chairman of the Department of Anatomy at Chiang Mai University, Chiang Mai, Thailand. Previously he was the Dean of the Faculty Of Medicine at the same Universit

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons