skip to main
|
skip to sidebar
Home
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
welcome
Home
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
SAHABUDEEN
THIS SITE IS BACKUP FOR
Internet
Market
Stock
Dvd
Games
Software
Office
Child Category 1
Sub Child Category 1
Sub Child Category 2
Sub Child Category 3
Child Category 2
Child Category 3
Child Category 4
Childcare
Doctors
19 நவ., 2010
சூப்பர் டிப்ஸ் 100
12:02 AM
SASIMO
No comments
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Xஸில் பகிர்
Facebook இல் பகிர்
சூப்பர் டிப்ஸ் 100
1970-
களில் அதிசயமாகப் பார்க்கப்பட்ட கணினி, 80-களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்டது. 90-களில் நம் வீட்டுச் செல்லங்களின் படிப்பையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியது. இதன் நீட்சியாக… ‘வீட்டுக்கு ஒரு மரம்’ என்று சொல்லப்படுவது போல்… ‘வீட்டுக்கு ஒரு கணினி’ என்பது காலத்தின் கட்டாயம் ஆகிப் போயுள்ளது இந்த 2010-ல்!
மிக முக்கிய பயன்பாடுகளில் ஒன்றாக இருக்கும் ‘இன்டர்நெட்’ எனப்படும் இணையவலை, கிட்டத்தட்ட உலகத்தையே வளைத்துப் போட்டுவிட்டது. அதை வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஏணிப்படியாக, அறிவை வளர்ப்பதற்கான என்சைக்ளோபீடியாவாக என்று பலவாறு நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேசமயம், அழிவைத் தேடிக்கொள்ளும் ஆபத்தும் அதில் அதிகமிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம்… அது எப்படி பயன்படப் போகிறது என்பதெல்லாம் நம் கைகளில்தான் இருக்கிறது.
கற்றுக் கொள்ளுங்கள்… கையாளுங்கள்… இன்டர்நெட்டையும் வாழக்கையையும் அழகாக!
சாஃப்ட்வேர்… சிறு அறிமுகமும் சில தகவல்களும்!
கணினியின் இதயம்… சாஃப்ட்வேர்! அந்தளவுக்கு கணினியின் இயக்கத்துக்கு முதற் காரணமாக இருக்கும் சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருள் பற்றிய அடிப்படை விவரங்கள் அறிவோமா..?
1. கணினி
பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட ஒரு மென்பொருளை வாங்குவதற்கு முன், அதன் சோதனைப் பதிப்பை இணையத்திலிருந்து பதிவிறக்கி பயன்படுத்திப் பாருங்கள். ஒரு மாத காலம் வரை இயக்கத்திலிருக்கும் சோதனைப் பதிப்பு மூலம் அந்த மென்பொருளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம். சோதனைப் பதிப்புகள் முற்றிலும் இலவசம்.
2. அசல்
மென்பொருட்களைவிட, அவற்றின் போலி பாதிப்புகளே அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இப்போது சுதாரித்துக் கொண்ட மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், ‘களையெடுப்பு’ நடவடிக்கையில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன.
3. கம்ப்யூட்டரில்
ஏதாவது பழுது ஏற்பட்டால், நாம் சேமித்து வைத்திருக்கும் முக்கியத் தகவல்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விடும். எனவே, கம்ப்யூட்டரிலுள்ள முக்கிய தகவல்கள் அனைத்தையும் ‘பேக்-அப்’ எடுத்துக் கொள்வது அவசியம். இதற்காகவே இலவச மென்பொருட்கள் இணையத்தில் உலவுகின்றன.
4. நம்
கணினியில் நீண்ட காலம் பயன்படுத்தாத மென்பொருள் தொகுப்புகளைத் தயங்காமல் அகற்றிவிட வேண்டும். தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொள்வதோடு, வைரஸ்களின் தாக்குதலுக்கும் அவை எளிதில் ஆளாகக் கூடும்.
5. தேவையில்லாத
மென்பொருட்களை நிரந்தரமாக அகற்றுவதற்கு, கன்ட்ரோல் பேனல் (Control panel) சென்று, சேர்த்தல் அல்லது நீக்கல் (Add or remove programs) செய்வதற்கான ஐகானை கிளிக் செய்து, ஒவ்வொரு மென்பொருளாக தேர்வு செய்து அகற்றலாம்.
இணையுங்கள் இணையத்தின் தேடுதல் (Search Engine) வேட்டையில்!
இணைய இணைப்பு கொடுக்கும் பயனாளர்களில் 57% பேர் முதலில் தேடல் பொறிகளைத்தான் திறக்கின்றனர்; உலகம் முழுவதும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நுகர்வோரில் 93% பேர் தேடல் பொறிகளின் மூலம்தான் பொருட்களை வாங்குகின்றனர் என்கின்றன சில ஆய்வுகள். அந்த ‘ஸர்ச் இன்ஜின்’களை திறமையாகப் பயன்படுத்துவது எப்படி..? படியுங்கள்…
6. இணையத்தின்
‘டாப் ஒன்’ தேடுதல் பொறியாக கொண்டாடப்படுவது, ‘கூகுள்’தான். கூகுள் என்ற சொல், கூகோல் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. ’1 என்ற எண்ணுக்குப் பின்னால் நூறு பூஜ்ஜியங்கள்’ என்பதுதான் இந்தச் சொல்லுக்கு அர்த்தம். ஏராளமான வலைப்பக்கங்களை கூகுள் தேடித் தரும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டது.
7. தமிழ்
உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் தேடும் வசதியை கூகுள் அளித்துள்ளது. ஆங்கிலத்தைப் போலவே, சொற்களை டைப் செய்யும்போதே, அது தொடர்பான பல சொற்களை வரிசையாகக் காட்டும் வசதிகளை தமிழ் தேடலிலும் பெறலாம்.
8. ஸர்ச்
இன்ஜின்களில் தேடும் சொற்களுடன் சில குறியீடுகளைச் சேர்த்துத் தேடினால், துல்லியமான தகவல்களைப் பெறலாம்.
9. ஒன்றுக்கு
மேற்பட்ட சொற்களைக் கொடுத்து தேடும்போது, ப்ளஸ் (+) குறியீட்டை சொற்களுக்கு இடையில் சேர்க்க வேண்டும். உதாரணமாக, சென்னை, ரியல்எஸ்டேட் பிஸினஸ் (Chennai realestate business) என்று தேட விரும்பினால், சென்னை + ரியல் எஸ்டேட் + பிஸினஸ் (Chennai + realestate + business) என்று தேடினால், இந்தச் சொற்கள் தொடர்பான பக்கங்கள் மட்டும் தோன்றும்.
10. பிரபலமான
ஒரு சொல்லைத் தேடும்போது, அந்தச் சொல் தொடர்பான பிரபல நபர்கள், இடங்கள் வரவேண்டாம் என்று நினைத்தால், மைனஸ் (-) குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
11. உதாரணமாக,
சூப்பர் ஸ்டார் என்ற சொல்லைத் தேட வேண்டும்… ஆனால், தேடலின் முடிவில் ரஜினிகாந்த் தொடர்பான வலைப்பக்கங்களும் வந்து நிற்கக் கூடாது என்றால், சூப்பர்ஸ்டார் – ரஜினிகாந்த் (Superstar – Rajinikanth) என்று தேடுங்கள்.
12. ‘நான்
அளிக்கும் சொல்லை மட்டும்தான் துல்லியமாகத் தேட வேண்டும், இணைப்புகள் எதுவும் வேண்டாம்’ என்று நினைத்தால், மேற்கோள் குறிக்குள் அந்த சொல்லை அளியுங்கள். உதாரணமாக, “அவள் விகடன்” (“Aval Vikatan”).
13. குறிப்பிட்ட
ஒரு சொல்லைக் கொடுத்து அதை மட்டும் தேடாமல், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடித் தரச்சொல்லுமாறு ஸ்சர்ச் இன்ஜின்களுக்கு உத்தரவு போடலாம். அதற்கு ”~”’ என்ற குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, ”அவள் விகடன் ~ விமன் வெல்ஃபேர் (“Aval vikatan ~ Women Welfare”).
14. ஒரு
சொல்லுக்கு உடனடியாக அர்த்தம் தெரிய வேண்டும் என்றால், அகராதிகளைத் தேட வேண்டியதில்லை. எளிதாக, ”டிஃபைன்: (”define:”) என்ற சொல்லைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, டிஃபைன்:பெலிசியேஷன் (“define: felicitation”).
விரைவான தகவல் தொடர்புக்கு கை கொடுக்கும் மெயில்… இ-மெயில்!
சராசரியாக இளைஞர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் கம்ப்யூட்டர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் மின்னஞ்சல்களைப் பகிர்ந்து கொள்கிறார் என்கிறது ஆய்வு ஒன்று. இளைஞர்கள் மட்டுமல்ல… உறவுகள், நண்பர்கள், அலுவலக அதிகாரிகள், வியாபாரிகள், தொழில் துறையினர், அரசியல்வாதிகள் என்று அனைத்து தரப்பினரும் மின்னஞ்சல் மூலமாக மில்லி செகண்டில் தாங்கள் விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்கிறார்கள். அந்த மின்னஞ்சலை அனுப்பும்போது சில ‘கவனிக்க’ சங்கதிகள் இங்கே…
15. முன்பெல்லாம்
மின்னஞ்சல்களின் கொள்ளளவு மிகச் சிறியதாக இருந்ததால் பயனாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தன. இப்போது போட்டி காரணமாக, மின்னஞ்சல் சேவை அளிக்கும் ஒவ்வொரு இணையதளமும் 1 ஜி.பி. மற்றும் அதற்கு மேல் கொள்ளளவுள்ள வசதியைத் தருகின்றன.
16. ஜி-மெயில்
மின்னஞ்சலில் 20 எம்.பி. அளவு வரை கோப்புகளை இணைப்பாக அனுப்பலாம். இதுவே அதிகபட்ச இணைப்பு அளவாக இருந்தது. ஆனால், யாஹ” இப்போது அதிரடியாக 100 எம்.பி. வரை இணைப்பாக கோப்புகளை அனுப்பும் வசதியை தனது பயனாளர்களுக்கு அளித்துள்ளது.
17. மின்னஞ்சல்
அனுப்பும்போது மிகுந்த கவனம் தேவை. அனுப்புவதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை நீங்கள் டைப் செய்தவற்றை முழுதாக படித்துவிடுங்கள். அவசரப்பட்டு send பட்டனை அழுத்திவிட்டால் அவ்வளவுதான்… மின்னல் வேகத்தில் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து மின்னஞ்சல் சென்று விடும்.
18. ‘அவுட்லுக்’
மற்றும் ‘அவுட்லுக் எக்ஸ்பிரஸ்’, சொந்தமாக வீட்டில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஏற்ற மின்னஞ்சல் புரோகிராம்கள். இதில் இணைய இணைப்பு இல்லாமலும் மின்னஞ்சல்களைப் படிக்கலாம். ஜி-மெயில், யாஹ” என எந்த மின்னஞ்சல்களையும் இவை பதிவிறக்கித் தரும்.
19. ‘அவுட்லுக்’
மூலம் மின்னஞ்சல் அனுப்பும்போது, முதலில் ‘அவுட்பாக்ஸ்’ (Outbox) பகுதியில் உங்கள் மின்னஞ்சல் நிறுத்தப்படும். அதன் பின்னரே மற்றவர்களுக்கு அனுப்பப்படும். எனவே, தவறுதலாக மின்னஞ்சல் அனுப்பினால்கூட, ‘அவுட்பாக்ஸ்’ சென்று அதைத் தடுத்து நிறுத்திவிடலாம்.
20. நண்பரிடமிருந்து
உங்களுக்கு வந்த மின்னஞ்சல்களை மற்றவர்களுடன் பகிரும்போது கவனம் தேவை. ‘ஃபார்வேர்ட்’ (Forward) பட்டன் அழுத்தி மற்றவர்களுக்கு அனுப்புவதற்கு முன், அந்த மின்னஞ்சலில் நண்பரின் தனிப்பட்ட விவரங்கள், அவரது தொலைபேசி எண் இருந்தால் அவற்றை நீக்கி விடுங்கள். வீண் சிக்கலுக்கு நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.
21. உங்கள்
மின்னஞ்சலில் ‘தானியங்கி பதில் செய்தி அனுப்பும் வசதி’யை செட் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோருக்கு உடனடியாக, ‘உங்கள் மெயில் கிடைத்தது. விரைவில் பதில் அனுப்புகிறேன்’ என்பது போன்ற செய்திகள் சென்று சேரும்.
குப்பை மெயில் (Spam) தெரியுமா..?
நமக்கு வரும் மின்னஞ்சல்களில் ‘ஸ்பேம்’ எனப்படும் நமக்கு வேண்டாத (Spam) குப்பை மெயில்கள்தான் அதிகம். அதன் விவரங்கள் இங்கே…
22. உலகில்
ஒட்டுமொத்தமாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் 90% குப்பை மின்னஞ்சல்கள்தான். இதில் 64% குப்பை மெயில் சர்வர்கள் தைவானில் உள்ளன, 23% அமெரிக்காவில்.
23. ஏன்
வருகின்றன, யார் அனுப்புகிறார்கள் இந்த குப்பை மெயில்கள்களை? ஒவ்வொரு 1.2 கோடி குப்பை மெயில்களுக்கு சராசரியாக ஒரு பதில் கிடைக்கும். இந்த ஒரு பதிலுக்காகத்தான் இவ்வளவு மின்னஞ்சல்களை ‘ஸ்பாமர்கள்’ எனும் விளம்பர நிறுவனங்கள் அனுப்புகின்றன.
24. இணைப்புகள்
இல்லாதபோதும் மின்னஞ்சல்களின் அளவு பெரிதாக இருத்தல் மற்றும் குப்பை மெயில்களுக்கென தாங்கள் வரையறுத்த சொற்களில் ஏதேனும் ஒன்று மின்னஞ்சல்களில் இருத்தல் ஆகிய காரணங்களைக் காட்டி குப்பை மெயில்களை இணைய தளங்கள் கண்டறிந்து வடிகட்டுகின்றன.
25. அனைத்து
மின்னஞ்சல் சேவை அளிக்கும் இணைய தளங்களிலும் குப்பை மெயில்களை தனியாக வடிகட்டும் வசதி உள்ளது. உங்களுக்கு வரும் குப்பை மெயில்கள், தனி கோப்பு உறையில் (Spam) சேகரிக்கப்படும். தேவைப்பட்டால் அவற்றை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே அழித்துவிடலாம்.
26. தானியங்கியாக
குப்பை மெயில்கள் வடிகட்டப்பட்டாலும், உங்களுக்கு தொல்லை தரும் சில மின்னஞ்சல்களைக் குறிப்பிட்டு, அவற்றை நிரந்தரமாக நீங்கள் குப்பைத் தொட்டிக்கு அனுப்பலாம்.
27. குப்பைக்குள்
மாணிக்கக் கல் கிடைப்பது போல, குப்பை மெயில்களுக்குள் நல்ல மின்னஞ்சல்களும் சில நேரம் மாட்டிக் கொள்ளும். எனவே ஒவ்வொரு முறை குப்பை மெயில்களை அழிப்பதற்கு முன்பும், ஒருமுறை அவற்றை சோதித்து விடுவது நல்லது.
28. உங்கள்
மின்னஞ்சல் கணக்கின் ‘ஸ்பேம்’ பகுதியில் உள்ள மின்னஞ்சல் உங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிந்தால், அதை மட்டும் தேர்வு செய்து எளிதாக நகர்த்திக் கொள்ளலாம்.
29. தெரியாத்தனமாக
குப்பை மெயில்களுக்கு ‘என்னை இனிமேல் தொல்லை செய்ய வேண்டாம்’ என்ற ரீதியில் எல்லாம் பதில் அனுப்ப வேண்டாம். அதன் பின் உங்களுக்கு இன்னும் அதிகமாக தொல்லை கொடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
வைரஸை (Virus) விரட்டுவோம்!
நம் கணினியின் இயக்கத்தை தாமதப்படுத்தும், ஸ்தம்பிக்க வைக்கும், ஒரு கட்டத்தில் செயலிழக்க வைக்கும் வில்லன்கள்தான் வைரஸ்கள்! அந்த வில்லன்களிடமிருந்து நம் கணினி கன்னுக்குட்டியைக் காப்பாற்றுவதற்கு பிடியுங்கள் இந்த டிப்ஸ்களை!
30. வைரஸ்கள்
பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். சில வைரஸ்கள் சிறிய அளவு பாதிப்புகளை ஏற்படுத்தும். இவற்றை சாதாரண ‘ஆன்டி வைரஸ்’ மென்பொருட்களை வைத்து அகற்றிக் கொள்ளலாம். ஆனால், சில வைரஸ்கள் நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்து மொத்தத்தையும் காலியாக்காமல் விடாது.
31. ஸ்பைவேர்,
ஆட்வேர், ட்ரோஜான், மால்வேர் என பல்வேறு வடிவங்களில் வைரஸ் தாக்குதல் நடத்தப்படுகிறது. இவற்றுள் ட்ரோஜன் மிக மோசமானது.
32. இணையத்திலிருந்து
ஏதேனும் மென்பொருள் அல்லது புரோகிராமை பதிவிறக்கும்போது, அவற்றுடன் ட்ரோஜனும் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கொண்டு நம் கம்ப்யூட்டருக்குள் புகுந்துவிடும். அதன் பின் நம் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டிருக்கும் முக்கிய தகவல்கள் அனைத்தும் உளவு பார்க்கப்பட்டு அபகரிக்கப்படும்.
33. விண்டோஸ்
ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் முக்கியமான மென்பொருள் தொகுப்புகளின் போலி பதிப்புகளை (Pirated version) வைத்திருந்தால், இணைய தளத்தைப் பயன்படுத்தும்போது நீங்கள் மைக்ரோசாஃப்டின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிடுவீர்கள்.
34. கம்ப்யூட்டரில்
அவ்வப்போது ‘ஆட்டோமேடிக் அப்டேட் செய்து கொள்ளுங்கள்’ என்ற செய்தி தோன்றும். அதைக் க்ளிக் செய்தால் விண்டோஸ், இணைய தளத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். நீங்கள் போலி பதிப்புகளை (Pirated version) வைத்திருந்தால், மைக்ரோசாஃப்ட் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
35. இணையத்தில
் உலவும்போது குட்டித் திரைகளில் தோன்றும் விளம்பரங்களில் பெரும்பாலானவை வைரஸ்களின் தூரத்துச் சொந்தங்களாக இருக்கும். எனவே, டோன்ட் டச் இட்!
36. இணையத்திலிருந்து முன் பின் தெரியாத புரோகிராம்கள், விளையாட்டுக்களை பதிவிறக்குவதை கூடுமானவரை தவிர்த்துவிடுங்கள். அவை வைரஸ் விருந்தாளிகளாக இருக்கலாம்.
37. இணைய
இணைப்பைத் துண்டிப்பதற்கு முன், நீங்கள் பிரவுசிங் செய்த தடயங்களை நீக்கிவிடுங்கள். அதாவது, பிரவுசிங் ஹிஸ்டரி, தற்காலிக கோப்புகள், குக்கீஸ்களை அகற்றுங்கள். இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்துபவர் எனில் Tools => Internet options செல்லுங்கள். ஃபயர்பாக்ஸ் எனில் Tools => clear recent history சென்று அனைத்தையும் அகற்றிவிடுங்கள்.
38. இணையத்திலிருந்து
வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை (ஆன்டி வைரஸ்) இலவசமாக பதிவிறக்கும்போது கவனம். சில நேரங்களில் இந்த இலவசங்களுடன் சேர்த்து வைரஸ்களும் இணைப்பாக அனுப்பி வைக்கப்படும். எனவே முறையான, நம்பத்தகுந்த இடங்களில் இருந்து வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
39. முன்
பின் தெரியாத பெயர்களில் மின்னஞ்சல்கள் வந்தால், அவற்றைத் திறந்து பார்க்க வேண்டாம். குறிப்பாக, இணைப்புகளைக் கொண்ட மின்னஞ்சல்கள் மீது அதிக கவனம் தேவை. கண்டிப்பாக இவை வைரஸ்களைக் கொண்டிருக்கும்.
நண்பர்கள், உறவுகளை, புதியவர்களை இணையத்தில் இணைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் (Social networking sites)!
தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இணைய பயனாளர்கள் அனைவரையும் ஆட்டிப் படைப்பது சமூக வலையமைப்பு எனும் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள்தான். ஃபேஸ்புக், ஆர்குட், மைஸ்பேஸ், லிங்க்ட் இன் போன்ற சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள் இணைய உலகில் உள்ளன. அவை பற்றி கொஞ்சம்… கொறிக்க!
40. இந்தியாவில்
ஃபேஸ்புக், ஆர்குட் ஆகிய தளங்கள் புகழ்பெற்றவை. ஆர்குட் என்பது கூகுளின் சேவை. மிக அதிகமான பயனாளர்களைக் கொண்ட இந்த சேவையை பின்னுக்கு தள்ளிவிட்டது ஃபேஸ்புக்.
41. சோஷியல்
நெட்வொர்க் தளங்களில் பெண்களில் இளவயதினர் அதிகளவிலும், ஆண்களில் நடுத்தர வயதினர் அதிகளவிலும் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
42. இந்தியாவில்
ஆர்குட் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில்தான் அதிகளவில் பயனாளர்கள் இருப்பதால், இந்த இரண்டு சேவைகளும் போட்டி போட்டுக் கொண்டு மேம்பட்ட வசதிகளை பயனாளர்களுக்கு அளித்து வருகின்றன.
43. சோஷியல்
நெட்வொர்க்கிங் தளங்களில் சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை நண்பர்கள் அல்லாது வேறு நபர்கள் பார்ப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கலாம். கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டால், நமது சொந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை முறைகேடாகப் பயன்படுத்தும் கும்பல் முழுமையாகப் பயன்படுத்தக் கூடும்.
ஹேக்கிங் (Hacking)… கவனம்!
நமக்குச் சொந்தமான அறிவுசார் சொத்துக்களை, அதாவது ஆன்லைன் சொத்துக்களை நம் கண் முன்னாலேயே அழகாக அபகரித்துச் செல்வதே ஹேக்கிங். அதைப் பற்றி சில துளி தகவல்கள் இங்கே…
44. ஹேக்கிங்
என்பது இன்று நேற்று முளைத்த சொல் இல்லை. 1900-ம் ஆண்டுகளிலேயே, கம்யூனிஸ்ட்டுகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, மக்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க சிறப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவே ஹேக்கிங்கின் தொடக்கம் என்று கூறுகின்றனர்.
45. ஹேக்கிங்
என்ற முறைகேட்டை எல்லோராலும் செய்து விட முடியாது. உலகின் மிகச்சிறந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் 100 பேரைத் தேர்வு செய்தால், அவர்களுள் 80 பேர் ஹேக்கர்களாக இருப்பர்.
46. அதிக
தொழில்நுட்ப அறிவு, புத்திசாலித்தனம், மிகப்பெரிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளுக்கு ஏற்றாற்போல் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் என பல சிறப்புகளைப் பெற்றிருப்பவர்தான் முழுமையான ஹேக்கராக முடியும்.
47. இணைய
இணைப்புதான் ஹேக்கிங் மன்னர்களுக்கு முதுகெலும்பு. இணையத்தில் நாம் உலவுவதை கண்காணித்து, நம்மைக் குறிவைத்தால் போதும், அடுத்த சில நிமிடங்களுக்குள் நாம் ஹேக்கிங் வளையத்துக்குள் சிக்கிவிடுவோம்.
48. சிலருக்கு
‘பாப் – அப்’ திரைகள் மூலம் கவர்ச்சியான வாசகங்கள் அடங்கிய அறிவிப்புகள் தோன்றும். சிலருக்கு, ‘உங்கள் கம்ப்யூட்டர் ஆபத்தில் உள்ளது’ என்பது போன்ற எச்சரிக்கைச் செய்திகள் தோன்றும். இதுபோன்ற செய்திகளை கிளிக் செய்துவிட்டால் முடிந்தது கதை.
49. பொதுவாக இந்த ஹேக்கர்கள்,
ஏதாவது ஒரு சிறிய ஓட்டை வழியாக தண்ணீரைப் போல ஊடுருவி, நம்மை மூழ்கடித்து, நம் அறிவுசார் சொத்துக்கள், ஆன்லைன் வங்கிப் பரிமாற்றம் மற்றும் சேவைத் துறை என்று நாம் பயன்படுத்தும் பலவற்றையும் தங்கள் வசம் வளைத்துக் கொள்வார்கள்.
50. நமது
கம்ப்யூட்டரில் இருந்து இணையத்தின் மூலம் ஒரு தகவலை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் பேருதவி புரிவது போர்ட்கள். ஒரு கம்ப்யூட்டரில் மொத்தம் 65,535 போர்ட்கள் இருக்கும். அவற்றுள் ஒவ்வொரு போர்ட்டும் ஒவ்வொரு இயக்கத்துக்காக என்று பிரித்து ஒதுக்கப்பட்டிருக்கும். பிரிக்கப்படாத போர்ட்கள் வழியேதான் ஹேக்கிங் நடக்கும்.
51. வொயி
Posted in:
COMPUTER
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என்னைப் பற்றி
SASIMO
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
CURRENT VIEWERS
Googleplus
Islamic Widget
SNOW
Categories
CHILD CARE
(142)
COMEDY
(269)
COMPUTER
(97)
GENERAL
(27)
INFORMATION
(303)
ISLAM
(184)
MEDICAL
(255)
MY ALBUM
(2)
STORY
(32)
வலைப்பதிவு காப்பகம்
►
2012
(147)
►
மே
(28)
►
ஏப்ரல்
(30)
►
மார்ச்
(31)
►
பிப்ரவரி
(29)
►
ஜனவரி
(29)
►
2011
(769)
►
டிசம்பர்
(60)
►
நவம்பர்
(61)
►
அக்டோபர்
(83)
►
செப்டம்பர்
(137)
►
ஜூலை
(56)
►
ஜூன்
(78)
►
மே
(204)
►
ஏப்ரல்
(42)
►
மார்ச்
(48)
▼
2010
(397)
▼
நவம்பர்
(395)
பழமொழி' கலாய்ப்புகள்!
பழமொழி' கலாய்ப்புகள்!
பழமொழி' கலாய்ப்புகள்!
தொந்தியின் பயன்கள்
தொந்தியின் பயன்கள்
தொந்தியின் பயன்கள்
கணவன் - மனைவி சண்டை :
கணவன் - மனைவி சண்டை :
கணவன் - மனைவி சண்டை :
நாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்
நாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்
நாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்
(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...
(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...
(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...
(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.
(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.
(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.
ரயில் பயணங்களில்..! : சிறுகதை
ரயில் பயணங்களில்..! : சிறுகதை
ரயில் பயணங்களில்..! : சிறுகதை
பாஸ்போர்ட் பெறுவது எப்படி?
பாஸ்போர்ட் பெறுவது எப்படி?
பாஸ்போர்ட் பெறுவது எப்படி?
பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா
பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா
பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா
‘சகுனம்’ ஓர் அலசல்!
‘சகுனம்’ ஓர் அலசல்!
‘சகுனம்’ ஓர் அலசல்!
முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...
முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...
முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...
அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?
அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?
அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
சிரிப்பு
சிரிப்பு
சிரிப்பு
வேலைக்கான நேர்காணலில்
வேலைக்கான நேர்காணலில்
வேலைக்கான நேர்காணலில்
சூப்பர் டிப்ஸ் 100
சூப்பர் டிப்ஸ் 100
சூப்பர் டிப்ஸ் 100
சூப்பர் டிப்ஸ் 100
சூப்பர் டிப்ஸ் 100
சூப்பர் டிப்ஸ் 100
தொழுகையும் உடல் ஆரோக்கியமும்
தொழுகையும் உடல் ஆரோக்கியமும்
தொழுகையும் உடல் ஆரோக்கியமும்
குர்ஆன் பார்வையில் அறிவியல்
குர்ஆன் பார்வையில் அறிவியல்
குர்ஆன் பார்வையில் அறிவியல்
ஸலாம் கூறுவதன் சிறப்பு
ஸலாம் கூறுவதன் சிறப்பு
ஸலாம் கூறுவதன் சிறப்பு
தீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை
தீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை
தீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை
மெயிலில் வந்த மொக்கை.
மெயிலில் வந்த மொக்கை.
மெயிலில் வந்த மொக்கை.
காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.
காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.
காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.
மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்
மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்
மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்
வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
அஜினமோட்டோ அவசரம்?
அஜினமோட்டோ அவசரம்?
அஜினமோட்டோ அவசரம்?
உடல் நலம் _ சில துணுக்குகள்
உடல் நலம் _ சில துணுக்குகள்
உடல் நலம் _ சில துணுக்குகள்
இதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட?
இதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட?
இதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட?
வங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா? உபத்திரமா?
வங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா? உபத்திரமா?
வங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா? உபத்திரமா?
மகரஜோதி உண்மையில் என்ன?
மகரஜோதி உண்மையில் என்ன?
மகரஜோதி உண்மையில் என்ன?
வண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......
வண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......
வண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......
வீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..
வீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..
வீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..
”தம்” வினை அனைவரையும் சுடும்....
”தம்” வினை அனைவரையும் சுடும்....
”தம்” வினை அனைவரையும் சுடும்....
வாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்!!!
►
மே
(2)
►
2008
(4)
►
ஏப்ரல்
(2)
►
மார்ச்
(2)
SITE SOURCE
Instructions
Blogger
இயக்குவது.
பிரபலமான இடுகைகள்
தேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்
தேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல...
குழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
குழந்தை பிறந்த 1/2 மணிக்குள் தாய்ப்பாலை தரவும். தாயுடன் குழந்தையை மிக நெருக்கமாக வைத்திருக்கவும். குழந்தைக்கு தேவையான உஷ்ணத்தை பாதுகாத்தல்....
உடல் நலம் _ சில துணுக்குகள்
பப்பாளியும்… பளபளப்பும்… கோடை காலம் தொடங்கி விட்டதால் இனி சருமத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் தலைதூக்கும். குறிப்பாக தோலில் பிரச்சினை உள்ளவர...
கடன் - எச்சரிக்கை
கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசரத் த...
குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் ?
குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் ? குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவ...
புரை ஊற்ற மோர் இல்லையா?
பாலில் புரை ஊற்றுவதற்கு மோர் அல்லது தயிர் இல்லையா? கவலையை விடுங்கள் 4 மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந...
பழமொழி' கலாய்ப்புகள்!
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்! - இப்போ கோயில் இருந்தாதான் பிரச்னையே! எங்கசார் குடியிருக்க முடியிது? வேலிக்கு ஓணான் சாட்சி! - இதெல்...
கணவன் - மனைவி சண்டை :
கணவன் - மனைவி சண்டை பல வருடங்களாக எனக்கு அறிமுகம் ஆனதுதான். முதலில் அம்மா - அப்பா சண்டை, பின் அண்ணன் - அண்ணி, அக்கா - அத்தான் என பல வித சண்ட...
கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
அன்புச் சகோதர சகோதரிகளே! ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வி...
உறுப்புகளை கட்டுப்படுத்தும் ஏழு சக்கரங்கள் ?
உறுப்புகளை கட்டுப்படுத்தும் ஏழு சக்கரங்கள் ? மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்றஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப...
Design by
Wordpress Theme
| Bloggerized by
Free Blogger Templates
|
Best Buy Printable Coupons
0 கருத்துகள்:
கருத்துரையிடுக