skip to main
|
skip to sidebar
Home
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
welcome
Home
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
ALL POST IN ONE PAGE
ISLAM
SAHABUDEEN
THIS SITE IS BACKUP FOR
Internet
Market
Stock
Dvd
Games
Software
Office
Child Category 1
Sub Child Category 1
Sub Child Category 2
Sub Child Category 3
Child Category 2
Child Category 3
Child Category 4
Childcare
Doctors
19 நவ., 2010
சூப்பர் டிப்ஸ் 100
12:06 AM
SASIMO
No comments
இதை மின்னஞ்சல் செய்க
BlogThis!
Xஸில் பகிர்
Facebook இல் பகிர்
51. வொயிட்
ஹேட், க்ரே ஹேட், ஸ்கிரிப்ட் கிட்டி, பிளாக் ஹேட் என ஹேக்கிங்கில் பலவகை உண்டு. இவற்றுள் பிளாக் ஹேட் மிக மோசமானது. நம் வங்கிக் கணக்குகளை மொத்தமாக முடக்கி பணத்தை அபகரிக்கும் ஹேக்கிங் இது.
52. உங்களுக்கு
வரும் மின்னஞ்சல்களில் சந்தேகப்படும்படியான லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள். உங்கள் வங்கிக் கணக்கு தகவல்கள், கிரெடிட் கார்டு தகவல்களை ஆன்லைனில் அளிக்கும்போது கவனமாக இருந்தால், ஹேக்கிங்கில் இருந்து தப்பிக்கலாம்.
ஆக்டிவ்வாக இருங்கள் ஆன்லைனில்!
ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு பணம் பரிமாற்றம் செய்வது, பயணங்கள், திரைப்படங்களுக்கு டிக்கெட் வாங்குவது, ஆன்லைனில் கட்டணங்களைச் செலுத்துவது, உடை, உணவுப் பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வது என அனைத்துமே இப்போது ஆன்லைனில் சாத்தியம். இவை எல்லாவற்றுக்கும் ஒரே அடிப்படைத் தேவை… ஆன்லைன் வங்கிக் கணக்கு. இனி பார்ப்போம் ஒவ்வொன்றாக…
பயன்படுத்துங்கள் ஆன்லைன் பேங்க்கிங் (Online Banking)!
53. அமர்ந்த
இடத்திலிருந்தே உங்கள் வங்கித் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து வைக்கும் ஆன்லைன் வங்கிக் கணக்குப் பக்கத்துக்குச் செல்லும்போது, உங்கள் திரையின் வலது கீழ் மூலையில் பூட்டு சின்னம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பாதுகாப்பாக ஆன்லைனில் வங்கிக் கணக்கை இயக்குகிறீர்கள் என்பதை இந்த சின்னம்தான் உறுதி செய்யும்.
54. ஆன்லைன்
வங்கிக் கணக்கின் முகவரிப் பகுதியில் http:// என்பதற்கு பதிலாக https:// என்று இருப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் உடனடியாக அந்தத் தளத்தைவிட்டு வெளியேறிவிடுங்கள்.
55. இப்போது
‘பிஷ்ஷிங்’ (Fishing) என்ற சொல் அனைத்து ஆன்லைன் பயனாளர்களையும், வங்கிகளையும் அச்சுறுத்தி வருகிறது. வங்கிகளின் பெயரில் அச்சு அசலாக அவர்களது இணைய தளத்தின் வடிவமைப்பில் போலியான தளங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களின் அக்கவுன்ட் எண், பேங்க் பேலன்ஸ், ஏ.டி.எம். பின் நம்பர் என அனைத்தையும் களவாடுவதுதான் ‘பிஷ்ஷிங்’!
56. இதுபோன்ற
தளங்களை உண்மை என நம்பி, பயனாளர்கள் தங்கள் தனிப்பட்ட வங்கித் தகவல்களை அளித்தால், அவ்வளவுதான்… அடுத்த சில நிமிடங்களில் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தமாக வேறு கணக்குக்குப் பணம் சுருட்டப்பட்டிருக்கும்.
57. இந்த
பிஷ்ஷிங்கில் இருந்து எப்படி சுதாரிப்பது? உங்கள் மின்னஞ்சலுக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் பெயரில் அறிவிப்புகள் வரும். அதிலுள்ள இணையதள லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்று நம் தகவல்களைத் தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருக்கும். இதுபோன்ற மின்னஞ்சல்களை அப்படியே அழித்துவிடுங்கள்.
58. சந்தேகம்
ஏற்படும்பட்சத்தில், வங்கிகளின் வாடிக்கையாளர் சேவையை அழைத்து, இதுபோன்ற மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்யுங்கள். அவர்கள் அனுப்பவில்லை எனில், உடனடியாக போலி மின்னஞ்சல் பற்றி உங்கள் வங்கிக்கு புகார் அளியுங்கள்.
59 ஆன்லைன்
பேங்கிங் செய்யும்போது, உங்கள் கம்ப்யூட்டரில் ஆன்டி வைரஸ் மென்பொருளை இயக்குவது சாலச் சிறந்த செயல்.
60. சொந்த
கம்ப்யூட்டர் அல்லாமல் பிரவுசிங் சென்டர்கள் போன்ற பொது இடங்களில் ஆன்லைன் வங்கிக் கணக்கை கையாளும்போது கவனம் தேவை. முறையாக தளத்தைவிட்டு வெளியேறுவதுடன், பிரவுசிங் செய்த தடத்தை அகற்றிவிட்டு வெளியேறுங்கள்.
நம் நேரத்தை மிச்சப்படுத்தும் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் (Online ticket booking)!
61. ரயில்,
விமானப் பயணங்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் எடுப்பதற்கான அலைச்சலையும் நேரத்தையும் சேமிக்க ஒரே வழி, ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதுதான்.
62. பயணங்களுக்கு
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, நிறுவனங்கள் அளிக்கும் கட்டண சலுகைகளை ஒப்பிட்டுப் பார்த்து குறைந்த கட்டணங்களை அளிக்கும் சேவைகளில் முன் பதிவு செய்யலாம். இந்த வசதி ஆன்லைனுக்கு மட்டுமே உண்டு.
63. ஆன்லைனில்
21 நாட்களுக்கு முன் விமான டிக்கெட் முன்பதிவு செய்தால், சிறப்புக் கட்டணச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. எனவே பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் பதிவு செய்தால், மிகக் குறைந்த கட்டணத்தில் விமான பயணத்தை மேற்கொள்ளலாம்.
64. இப்போது
தமிழக மின்சார வாரியமும் ஆன்லைனுக்குள் வந்துவிட்டது. உங்கள் மின் கட்டணங்களை இனி ஆன்லைனில் மிக எளிதாக p://www.tnebnet.org என்ற இணையதளத்துள் சென்று கட்டலாம். எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம் (இந்த வசதி சென்னை மற்றும் கோவைக்கு மட்டுமே தற்போது வந்துள்ளது).
65. சாதாரண
தொலைபேசி, இணைய சேவை, மொபைல் போன், சொத்து வரி உள்பட அன்றாட வாழ்வில் நாம் தவிர்க்க முடியாத சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம். இதில் பல வசதிகள் பெருநகரங்களுக்கு மட்டுமே தற்போதைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.
போவோமா ஆன்லைன் ஷாப்பிங் (Online shopping)..!
66. ஷாப்பிங்
என்றாலே பரவசம்தான். கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதைக் காட்டிலும் குறைந்த விலையில், பரிசுப் பொருட்களுடன் ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம். நேர விரயம் இருக்காது.
67. ஆன்லைன்
ஷாப்பிங் சற்று வித்தியாசமானது. பொருட்களை படங்களில் மட்டும் பார்த்து அவற்றை வாங்குவதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்
68. முன்
பின் அறியாத ஷாப்பிங் தளங்களில் மிகக் குறைந்த விலைக்கு பொருட்களைத் தருவதாக கவர்ச்சி விளம்பரங்களை அள்ளிவிடுவார்கள். அவற்றை நம்பி ஆன்லைனில் பணத்தைச் செலுத்தினால் அவ்வளவுதான்!
69. நம்பத்
தகுந்த இணையதளங்கள் அல்லது, பிரபலமான நிறுவனங்களின் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தைரியமாக பொருட்களைத் தேர்வு செய்து வாங்குங்கள்.
70. சில
இணையதளங்களில் பொருட்களைத் தேர்வு செய்துவிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால், அடுத்து 10 அல்லது 15 நாட்கள் கழித்துதான் அந்தப் பொருளை அனுப்பி வைப்பார்கள். எனவே, ஷாப்பிங் செய்யும்போது, பொருட்களை அவர்கள் அனுப்பும் காலம், அதற்கு வரி விதிக்கிறார்களா என்பதை கவனத்துடன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
71. சற்று
விலை உயர்ந்த பொருட்களை வாங்கும்போது, அதை உங்கள் வசம் ஒப்படைக்கும் வரை பொறுப்பு அவர்களுடையது. எனவே, பொருளுக்கு உரிய காப்பீடு செய்து ஷிப்பிங் முறையில் அனுப்புகிறார்களா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
72. இந்திய
இணைய தளங்கள் அல்லாமல், வெளிநாட்டு இணைய தளங்கள் மூலம் ஷாப்பிங் செய்யும் போது பொருளின் விலையைவிட இரு மடங்கு வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் செலுத்த வேண்டி வரலாம். எனவே, அந்த இணைய தள கொள்கைகளைப் படித்துவிட்டு, அதன் பின் முடிவெடுங்கள்.
73. ஒவ்வொரு
முறை ஆன்லைனில் ஷாப்பிங் செய்த பிறகும், உங்கள் ஆன்லைன் வங்கிக் கணக்கின் கடவுச்சொல் உள்பட முக்கிய தகவல்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
74. ஆன்லைன்
ஷாப்பிங் தளங்களைத் தேர்வு செய்து, உங்களைப் பதிவு செய்து கொண்டால், அவர்கள் அளிக்கும் சிறப்புச் சலுகைகளையும் அவ்வப்போது மின்னஞ்சல்கள் மூலம் பெறலாம்.
75 உதாரணமாக,
indiatimes.com, rediff.com போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் அவ்வப்போது சிறப்பு சலுகைகள் மற்றும் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கின்றனர். இவை நம்பத் தகுந்த இணைய தளங்களாக கருதப்படுகின்றன. அதேபோல விரைவாக பொருட்களை அனுப்பி விடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஒலி, ஒளி, விளையாட்டுகள் என்று நம் பொழுதுபோக்குக்கான இணைய சேவைகள்!
5 கோடி மக்களை வானொலி சென்றடைவதற்கு சராசரியாக 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சிக்கு 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், இணையம் வெறும் 4 ஆண்டுகளில் 5 கோடி மக்களைச் சென்று சேர்ந்தது. இதற்கு முக்கியக் காரணம், இணையத்தின் பொழுதுபோக்கு அம்சங்கள்தான்.
76. இணையத்தில்
தற்போது சராசரியாக 131,98,72,109 பேர் இணைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கையில் 73% பேர் வீடியோ, ஆடியோ, கேம்ஸ் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.
77. முன்பெல்லாம்,
வீடியோக்கள் மற்றும் பாடல்களைப் பதிவிறக்கினால் மட்டுமே கணினியில் பார்க்க முடியும். இப்போது ஆன்லைனிலேயே வீடியோக்களை பார்க்கலாம், பாடல்களைக் கேட்கலாம், கேம்ஸ் விளையாடலாம். பிராட்பேண்ட் இணைப்பு இருந்தால் போதும்.
78 யூ-டியூப்
(www.youtube.com), மெடாகேஃப் (www.metacafe.com) போன்ற இணையதளங்கள் பொழுதுபோக்கு பிரியர்களுக்கான அமுதசுரபிகள். இந்தத் தளங்களில் அந்தக் கால சினிமா பாடல்கள் முதல் தற்போது படப்பிடிப்பில் இருக்கும் படங்கள் வரை அனைத்தையும் கண்டு ரசிக்கலாம்.
79 திரைப்படங்கள்
மட்டுமல்லாது, நகைச்சுவை, உண்மை சம்பவங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பதிவுகள் என எந்த வகையான வீடியோக்களையும் மேற்கண்ட தளங்களில் பார்த்து மகிழலாம்.
80 பாடல்களைக்
கூட ஆன்லைனிலேயே தடையின்றி கேட்க உதவும் தளங்கள் உள்ளன. ஆனால், இவை சட்டவிதிகளுக்கு உட்பட்டு இயக்கப்படுபவை அல்ல. 100-க்கு 99 பயனாளர்கள் இதுபோன்ற இலவச சேவைகளையே நாடுவதால், முறையாக பணம் செலுத்தி பாடல்களைப் பதிவிறக்கும் தளங்கள் இன்று ஏறக்குறைய காணமலே போய்விட்டன.
81. ஆன்லைனில்
பாடல்கள், படங்கள் பார்ப்பது மட்டுமின்றி கேம்ஸ் விளையாடலாம். சிறிய அளவிலான ஃபிளாஷ் விளையாட்டுக்களைக் கொண்ட ஏராளமான இணையதளங்கள் உள்ளன. இணைய இணைப்பு சற்று வேகமாக இருந்தால் தங்கு தடையின்றி விளையாடலாம்.
82 ஆன்லைனில் விளையாடும்போது மிகுந்த கவனம் தேவை. பல இணையதளங்களில் விளையாட்டுகளில் வைரஸ்கள் கணக்கில்லாமல் உலவிக் கொண்டிருக்கும்.
83. சீரியஸாக
ஆன்லைனில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறிய திரைகள் தோன்றி, ‘இன்னும் பல விளையாட்டுகள் உள்ளன. ரெடியா?’ என்ற தொனியில் உங்களைக் கவர்ந்திழுக்கும். க்ளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக வைரஸ் குடிபுகும்.
84 மொபைல்
போன்களுக்கும் ஆன்லைன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் உறுதியான பிணைப்பு உண்டு. போன்களுக்குத் தேவையான ரிங் டோன்கள், வண்ண தீம்கள், அனிமேஷன் படங்கள் உள்பட பல்வேறு அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கம்ப்யூட்டருடன் போனை இணைத்துவிட்டு, நேரடியாக இணையத்திலிருந்து போனுக்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்.
‘ஜி-டாக் (Google Talk)’-ல் பேசுங்கள்… ‘சாட்’டுங்கள்!
85 நண்பர்களுடன்
அரட்டை, அலுவலக மேலதிகாரிகளுடன் கலந்துரையாடல், வேலை வாய்ப்புக்கான நேர்காணல்கள் என எந்த வகையான உரையாடல்களாக இருந்தாலும், ஜி-டாக் கை கொடுக்கும். ‘யாஹ” மெசெஞ்சரை’ கிட்டத்தட்ட ஓரம் கட்டிவிட்டது ‘ஜி-டாக்’.
86. ஜி-மெயில்
சேவையின் அங்கம்தான் ‘ஜி-டாக்’ என்பதால் மின்னஞ்சல் பக்கத்துக்கு எளிதாக செல்லலாம், நண்பர்களுடன் முகம் பார்த்து அரட்டையடிக்க வீடியோ உரையாடல், ஆடியோ உரையாடல் என பல மேம்பட்ட வசதிகள் ஜி-டாக்கில் உள்ளன. http://www.google.com/talk/ தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.
நம் வாசிப்பு பழக்கத்துக்கு தீனி போடும் இ-புக்ஸ் (E-books), இ-மேகஸின்ஸ் (E-magazines)!
கடைகளுக்குச் சென்று, புத்தகங்கள் வாங்கி வந்து, நேரத்தை ஒதுக்கி, படித்து முடிப்பது என்பது இன்றைய டீன் டிக்கெட்களுக்கு இயலாத காரியமாகிவிட்டது. ஆனாலும், அவர்களின் வாசிப்பு ஆர்வம் வாடாமல் பார்த்துக்கொள்ள பங்களிக்கின்றன மின் புத்தகங்களும், மின் பத்திரிகைகளும்!
87. இணையத்தில்
தமிழ் உட்பட உலகின் ஏனைய மொழிகளில் வெளியாகியிருக்கும் அனைத்து புத்தகங்களும் (ஏறக்குறைய) மின் வடிவம் பெற்றுள்ளன. தமிழில் ஏராளமான தலைப்புகளில் மின் புத்தகங்களைக் கொண்ட பல இணையதளங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான தளங்கள் இலவச சேவை செய்கின்றன.
88. இணைய
தளத்தின் பெயர் தெரியாவிட்டாலும், தேடல் பொறிகள் மூலம் புத்தகத்தின் பெயரை அளித்து, மிக எளிதாக அந்தத் தளத்தை அடையலாம்.
89. புத்தகங்கள்
பி.டி.எஃப். (Pdf) எனும் காப்பு வடிவத்தில் இருப்பதால், ஃபான்ட்ஸ் எனப்படும் எழுத்துருக்கள் மாறிவிடுவதால் ஏற்படும் சிக்கல்கள் வருவதில்லை. மிக எளிதாக பதிவிறக்கம் செய்து, பக்கம் பக்கமாக படிக்கலாம்.
90 பல
தளங்களில் மின் புத்தகத்தை ஆன்லைனிலேயே படிக்கும் வசதி உள்ளது. அதிகளவில் படங்கள் இருந்தாலோ, பக்கங்கள் அதிகமாக இருந்தாலோ திறப்பதற்கு சற்று நேரமாகும். எனவே, பதிவிறக்கிப் படிப்பது நல்லது.
91. அடுத்ததாக,
மின் பத்திரிகைகள்! இணையத்தின் அசாதாரண வளர்ச்சி காரணமாக, தற்போதுள்ள நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் அனைத்தும் தங்கள் ஆன்லைன் பதிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டன. மின் பதிப்புகள் மூலம் தமிழகத்தில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகளையும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உடனுக்குடன் படிக்கலாம்.
92. உதாரணமாக,
அவள் விகடன் உள்ளிட்ட விகடன் பதிப்புகள் அனைத்தையும் ஆன்லைனில் படிக்கலாம். இதற்கென ஆண்டுக்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
93. நாளிதழ்கள்,
பத்திரிகைகள் மட்டுமல்லாது, செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணைய தளங்கள் உள்ளன. குறிப்பாக, மற்ற மொழிகளில் இல்லாத அளவுக்கும், தமிழில் செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இணையதளங்கள் ஏராளமாக உள்ளன.
இன்னும்
சொல்லப்போனால், நாளிதழ்களைவிட மிக வேகமாக, உடனுக்குடன் செய்திகளை புதுப்பித்துத் தருவதில் இணையதளங்கள் தனித்து நிற்கின்றன.
பிளாக் (Blog)… நமக்கே நமக்காக இணையத்தில் ஓர் இடம்!
நம் கருத்துக்களை, எண்ணங்களை எந்த தயக்கமும் இன்றி முழு சுதந்திரத்துடன் உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் இடம்தான் ‘பிளாக்’ எனப்படும் வலைப்பதிவு. இணையதளங்களைப் போலவே, ஆனால், பைசா செலவில்லாமல் இலவசமாக நமக்கான வலைப்பக்கத்தை நிர்வகித்து, தகவல்களைப் பகிரலாம்.
94. பிளாக்கர்
(www.blogger.com), வேர்டுபிரஸ் (www.wordpress.com) உள்பட பல இணையதளங்கள், வலைப்பதிவு சேவை அளிக்கின்றன. நமக்கான பக்கத்தின் வடிவமைப்புக்குத் தேவையான டெம்ப்ளேட்களையும் இலவசமாகவே தருகின்றன. தொழில்நுட்ப அறிவு என்பது வலைப்பதிவுகளுக்குத் தேவையில்லை.
95. நமது
வலைப்பதிவைப் பிரபலப்படுத்துவதற்காகவே திரட்டிகள், அதாவது வலைப்பதிவுகளை ஒருசேர காட்சிக்கு வைக்கும் தளங்கள் உதவுகின்றன. www.tamilish.com, www.tamilmanam.net போன்ற திரட்டி தளங்களில் நமது வலைப்பதிவுகளை பதிவு செய்து பிரபலப்படுத்தலாம்.
வேலைவாய்ப்புக்கும் ‘க்ளிக்’குங்கள்!
மேற்படிப்புகள், வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் முதுகெலும்பாக இருக்கின்றன இணையதள சேவைகள். தற்போதுள்ள சூழலில் 90% தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர் தேர்வு, ஆன்லைனிலேயே நடக்கிறது.
96 www.naukri.com, www.monsters.com, www.jobsdb.com
உள்பட நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புத் தளங்கள் மூலம் எண்ணற்ற இளைஞர்கள் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
97 வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி மேற்படிப்புகளுக்கு உதவிபுரியும் ஏராளமான இணையதளங்களும் ஆன்லைனில் உலவுகின்றன. நிபுணர்களின் ஆலோசனைகள், கல்வி அறிஞர்களின் வழிகாட்டுதல்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பீடுகள் என, மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழிகாட்டியாக இந்த இணைய தளங்கள் செயல்படுகின்றன.
முடிவில்லா இணையவெளியில் எச்சரிக்கை உணர்வும் அவசியம்!
இன்டர்நெட்டில் அழகான ஸ்வீட்டும் உண்டு; ஆபத்தான பாய்ஸனும் உண்டு. எனவே, சில அலர்ட் டிப்ஸ்கள்…
98 எந்த
ஒரு சிறந்த சேவைக்கும் குறைகளும் இருக்கும். இது இணையத்துக்கும் பொருந்தும். கொடுத்த முழு சுதந்திரத்தையும் தவறாக பயன்படுத்துபவர்கள் இணையத்தில் அதிகம். நமக்குத் தெரியாமல் அவர்கள் பக்கம் நாமும் சாயக் கூடும், அல்லது அவர்கள் வலையில் விழக்கூடிய சூழல் ஏற்படும்.
99. இணையத்தில்
உலவும்போது, பார்வையிடும் இணையதளங்கள் அனைத்திலும் உங்கள் அடையாளத்தைப் பதிவு செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். சில மோசமான தளங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தவறாக பயன்படுத்தி, உங்கள் மின்னஞ்சல் கணக்கையே ஒன்றுக்கும் உதவாதது என்றாக்கிவிடுவார்கள். எச்சரிக்கை!
100 உங்கள்
நண்பர்கள் உங்களுக்கு பரிசுகள் அனுப்பியிருப்பதாக மின்னஞ்சல் வரும். அதைக் கிளிக் செய்த சில நிமிடங்களில், உங்கள் ஆன்லைன் நண்பர்கள் அனைவருக்கும், அதே மின்னஞ்சல் செல்லும். அதில் நீங்கள் பரிசு அனுப்பியதாக செய்தி தோன்றும். இதனால் உங்கள் நற்பெயர் கெடும்… கவனம்!
இன்டர்நெட்டை கூலாக, கொஞ்சம் கேர்ஃபுல்
Posted in:
COMPUTER
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
என்னைப் பற்றி
SASIMO
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
CURRENT VIEWERS
Googleplus
Islamic Widget
SNOW
Categories
CHILD CARE
(142)
COMEDY
(269)
COMPUTER
(97)
GENERAL
(27)
INFORMATION
(303)
ISLAM
(184)
MEDICAL
(255)
MY ALBUM
(2)
STORY
(32)
வலைப்பதிவு காப்பகம்
►
2012
(147)
►
மே
(28)
►
ஏப்ரல்
(30)
►
மார்ச்
(31)
►
பிப்ரவரி
(29)
►
ஜனவரி
(29)
►
2011
(769)
►
டிசம்பர்
(60)
►
நவம்பர்
(61)
►
அக்டோபர்
(83)
►
செப்டம்பர்
(137)
►
ஜூலை
(56)
►
ஜூன்
(78)
►
மே
(204)
►
ஏப்ரல்
(42)
►
மார்ச்
(48)
▼
2010
(397)
▼
நவம்பர்
(395)
பழமொழி' கலாய்ப்புகள்!
பழமொழி' கலாய்ப்புகள்!
பழமொழி' கலாய்ப்புகள்!
தொந்தியின் பயன்கள்
தொந்தியின் பயன்கள்
தொந்தியின் பயன்கள்
கணவன் - மனைவி சண்டை :
கணவன் - மனைவி சண்டை :
கணவன் - மனைவி சண்டை :
நாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்
நாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்
நாக்க முக்க பாடல் - ஒரு தத்துவக் கண்ணோட்டம்
(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...
(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...
(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப...
(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.
(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.
(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்.
ரயில் பயணங்களில்..! : சிறுகதை
ரயில் பயணங்களில்..! : சிறுகதை
ரயில் பயணங்களில்..! : சிறுகதை
பாஸ்போர்ட் பெறுவது எப்படி?
பாஸ்போர்ட் பெறுவது எப்படி?
பாஸ்போர்ட் பெறுவது எப்படி?
பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா
பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா
பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா
‘சகுனம்’ ஓர் அலசல்!
‘சகுனம்’ ஓர் அலசல்!
‘சகுனம்’ ஓர் அலசல்!
முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...
முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...
முஸ்லிம் பெண்கள் ஏன் பர்தா அனிந்தே வெளியில் செல்ல ...
அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?
அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?
அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
சிரிப்பு
சிரிப்பு
சிரிப்பு
வேலைக்கான நேர்காணலில்
வேலைக்கான நேர்காணலில்
வேலைக்கான நேர்காணலில்
சூப்பர் டிப்ஸ் 100
சூப்பர் டிப்ஸ் 100
சூப்பர் டிப்ஸ் 100
சூப்பர் டிப்ஸ் 100
சூப்பர் டிப்ஸ் 100
சூப்பர் டிப்ஸ் 100
தொழுகையும் உடல் ஆரோக்கியமும்
தொழுகையும் உடல் ஆரோக்கியமும்
தொழுகையும் உடல் ஆரோக்கியமும்
குர்ஆன் பார்வையில் அறிவியல்
குர்ஆன் பார்வையில் அறிவியல்
குர்ஆன் பார்வையில் அறிவியல்
ஸலாம் கூறுவதன் சிறப்பு
ஸலாம் கூறுவதன் சிறப்பு
ஸலாம் கூறுவதன் சிறப்பு
தீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை
தீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை
தீர்க்கதரிசி முகம்மதின் இறுதி உரை
மெயிலில் வந்த மொக்கை.
மெயிலில் வந்த மொக்கை.
மெயிலில் வந்த மொக்கை.
காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.
காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.
காது குடையலாமா? காதை குடையிறதுதான் வேலையா? வேண்டாம்.
மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்
மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்
மிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்
வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !
அஜினமோட்டோ அவசரம்?
அஜினமோட்டோ அவசரம்?
அஜினமோட்டோ அவசரம்?
உடல் நலம் _ சில துணுக்குகள்
உடல் நலம் _ சில துணுக்குகள்
உடல் நலம் _ சில துணுக்குகள்
இதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட?
இதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட?
இதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே எதைத் தான் சாப்பிட?
வங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா? உபத்திரமா?
வங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா? உபத்திரமா?
வங்கிகளின் வீட்டுக் கடன் - உதவியா? உபத்திரமா?
மகரஜோதி உண்மையில் என்ன?
மகரஜோதி உண்மையில் என்ன?
மகரஜோதி உண்மையில் என்ன?
வண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......
வண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......
வண்டி பராமரிப்பு - ஒரு பாரம்பரியமல்ல......
வீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..
வீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..
வீடு வாங்குறீங்களா - மோசம் போகாம இருங்க..
”தம்” வினை அனைவரையும் சுடும்....
”தம்” வினை அனைவரையும் சுடும்....
”தம்” வினை அனைவரையும் சுடும்....
வாசகர்களின் கேள்விகளுக்கு சுஜாதாவின் பதில்கள்!!!
►
மே
(2)
►
2008
(4)
►
ஏப்ரல்
(2)
►
மார்ச்
(2)
SITE SOURCE
Instructions
Blogger
இயக்குவது.
பிரபலமான இடுகைகள்
தேனை தனியாக சாப்பிட்டால் பலன்--- மருத்துவ டிப்ஸ்
தேன் சீரண சக்தியை தரும். இரைப்பையில் ஏற்படும் எல்லாவித கோளாறுகளையும் வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையும் குணமாக்கும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல...
குழந்தைப் பிறந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
குழந்தை பிறந்த 1/2 மணிக்குள் தாய்ப்பாலை தரவும். தாயுடன் குழந்தையை மிக நெருக்கமாக வைத்திருக்கவும். குழந்தைக்கு தேவையான உஷ்ணத்தை பாதுகாத்தல்....
உடல் நலம் _ சில துணுக்குகள்
பப்பாளியும்… பளபளப்பும்… கோடை காலம் தொடங்கி விட்டதால் இனி சருமத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் தலைதூக்கும். குறிப்பாக தோலில் பிரச்சினை உள்ளவர...
கடன் - எச்சரிக்கை
கடன் வாங்கும் முன்பும் பின்பும்! கவனிக்க வேண்டியது... கடன் அன்பை மட்டும் முறிக்காது ; சில நேரங்களில் தலையெழுத்தையே மாற்றிவிடும். அவசரத் த...
குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் ?
குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் ? குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவ...
புரை ஊற்ற மோர் இல்லையா?
பாலில் புரை ஊற்றுவதற்கு மோர் அல்லது தயிர் இல்லையா? கவலையை விடுங்கள் 4 மிளகாய்க் காம்புகளைப் பாலில் போட்டு வைத்து விடுங்கள். அடுத்த நாள் அந...
பழமொழி' கலாய்ப்புகள்!
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்! - இப்போ கோயில் இருந்தாதான் பிரச்னையே! எங்கசார் குடியிருக்க முடியிது? வேலிக்கு ஓணான் சாட்சி! - இதெல்...
கணவன் - மனைவி சண்டை :
கணவன் - மனைவி சண்டை பல வருடங்களாக எனக்கு அறிமுகம் ஆனதுதான். முதலில் அம்மா - அப்பா சண்டை, பின் அண்ணன் - அண்ணி, அக்கா - அத்தான் என பல வித சண்ட...
கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்
அன்புச் சகோதர சகோதரிகளே! ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ இந்த உலகில் பிறப்பதை ஏதோ காலத்தின் கட்டாயம் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் அல்லாஹ்வி...
உறுப்புகளை கட்டுப்படுத்தும் ஏழு சக்கரங்கள் ?
உறுப்புகளை கட்டுப்படுத்தும் ஏழு சக்கரங்கள் ? மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்றஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப...
Design by
Wordpress Theme
| Bloggerized by
Free Blogger Templates
|
Best Buy Printable Coupons
0 கருத்துகள்:
கருத்துரையிடுக