12 நவ., 2010

திருக்குர்ஆன் விளக்கம் - ஐயமும், தெளிவும்

திருக்குர்ஆன் விளக்கம் - ஐயமும், தெளிவும்


ஆன்மீகவாதிகள் அனைவருக்கும் விதியின் மீது அசைக்க முடியா நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கையின் அடிப்படைக் காரணமாக தம்மில் ஏற்படும் இன்ப, துன்பங்கள். லாப, நஷ்டங்கள் அனைத்தும் இறைவன் புறத்திலிருந்து வந்ததாகும் என்று கருதி தங்களை சாந்தப்படுத்திக்கொண்டு அதிலிருந்து இலகுவாக மீண்டு விடுவார்கள். 

உதாரணமாக: 
ஒருவருக்கு, தொழிலில் எதிர்பாராத லாபங்கள் மற்றும் குடும்பத்தில் தோன்றும் புதிய உறுப்பினரின் வருகை இவையெல்லாம் மகிழ்வூட்டும் சம்பவங்களாகும். எவையெல்லாம் ஒரு ஆத்திகருக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ, அவ்வாறு சந்தோஷப்படும் சமயத்திலும் இவையெல்லாம் இறைவன் புறத்திலிருந்து வந்தது என்ற நம்பிக்கை இறைவனுக்கு நன்றி செலுத்தும்படி அவரைத் தூண்டுகிறது. 

ஒருவருக்கு, உழைத்து சேர்த்த செல்வங்களில் ஒருபகுதி இழப்பு - விபத்து - குடும்பத்தில் ஏற்படும் உயிரழப்பும் அவருக்கு தாங்க முடியா துக்கத்தையே தரும். அத்துக்கத்தையும், ''கொடுத்தவனே பறித்துக்கொண்டான்'' என்ற நம்பிக்கை, ஆத்திகருக்கு துக்கம் பெரும்பாரமாக இல்லாமல் லேசாகி விடுகிறது. 

இன்னொன்று, எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்ற, விதியைப் பற்றிய ஆழமான நம்பிக்கையுள்ளவர்கள், விதியிருந்தால் உணவு வீடு தேடிவரும் என்று சும்மா இருக்க வேண்டியதுதானே, ஏன் உழைக்க வேண்டும் - எல்லாம் விதிப்படிதான் நடக்குமென்றால் நாம் இயங்க வேண்டியதேயில்லையே என்ற குதர்க்கமான கேள்விகளும் விதியைப்பற்றிய சர்ச்சையில் எழுகிறது. இதில் எந்த முடிவையும் நாம் எட்டமுடியாது. எனவே விதியைப்பற்றிய தர்க்கத்தைத் தவிர்க்கும்படி இஸ்லாம் கண்டிப்பாகச் சொல்கிறது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons