15 நவ., 2010

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?

புத்திசாலிதனத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் மூளையின் அமைப்பில் சின்ன,சின்ன வித்தியாசங்கள் உண்டு.பெண்களின் மூளையில் உள்ள செல்களை விட ஆண்களின் மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகம்.

அதனால்,மூளையின் எடையும் ஒரு 100 கிராம் அதிகம்.பெண்களின் மூளையில் செல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்,செல்களுக்கிடையே உள்ள இணைப்பு அதிகம். அதாவது, பெண்கள் குறைந்த அளவு செல்களை வைத்துகொண்டு விரைவாக வேலை செய்கிறார்கள்.

மூளையில் லிம்பிக் சிஸ்டம் என்றொரு அமைப்பு இருக்கிறது.இதுதான் நமது பலவித உணர்ச்சிகளைக் கையாள்கிறது. இது,ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். இதன் விளைவாக மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவது,உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திகொள்வது,ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் மேலானவர்கள்.

இதனால்தான் குழந்தைகளைக் கவனிப்பது,வீட்டைப் பராமரிப்பது, போன்ற விசயங்களைப் பெண்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள்.உலகத்தின் எந்தக் கலாச்சாரமாக இருந்தாலும் இதுதான் நியதி. மூளையின் இடப்பக்கம் ,கணக்குப் போடுவது, தர்க்க ரீதியான சிந்தனைகள் இதற்கு பொறுப்பு. 

மூளையின் வலப்பக்கம் மொழியாற்றல், பேச்சுத்திறன் இதற்கு பொறுப்பு. இடப்பக்க மூளையையும் வலப்பக்க மூளையையும் கோர்பஸ் கோலோசம் (corpus colosum) என்ற ஒரு " சாலை " இணைக்கிறது. ஆண்களைவிடப் பெண்களின் மூளையில் இந்த சாலை பெரியது. அதன் காரணமாகப் பெண்களின் மூளையில் தகவல் பரிமாற்றங்கள் மிக வேகமாக நடக்கின்றன. 

இதனால் பெண்கள், மூளையின் இரண்டு பக்கங்களையும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொழியை கற்றுகொள்வதில் ஆரம்பித்து, உள்ளுளணர்வு என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு திறன் சற்று கூடுதல்.


விண்ணைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை. இருந்தும் கிராமில் தொடங்கி கிலோக்கள் வரை அனைவரும் பொருளாதார நிலைக்கேற்ப தங்கம் சேர்க்கத்தான் விழைகின்றனர். தங்க நகைகளை வாங்கும்போது, அதன் தரத்தை உறுதி செய்வதற்காக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? ஜஸ்ட் ஹேவ் எ லுக்!

1. தங்கத்தின் தூய்மையில்தான் அதன் தரம் இருக்கிறது. இந்தத் தூய்மையின் சதவிகிதத்தை குறிக்கிறது 'டச்' அளவீடு. 24 கேரட் தூய தங்கம் என்பது 100 டச்.

2. தூய்மையான தங்கத்தில் (100 டச்) நகைகள் செய்ய முடியாது. அதனுடன் செம்பு சேர்த்து, 22 கேரட்டில்தான் செய்வார்கள். அதாவது அதிகபட்சம் 88 அல்லது 90 டச் வரை.

3. அடிக்கடி விளம்பரங்களில் கேட்கும் வார்த்தை '916' கோல்ட். அப்படி என்றால்...? '916' என்பது மேலே சொன்ன '22 கேரட்' தங்க நகைகளைக் குறிக்கும் அடையாளச் சொல். 91.6% தூய்மையான தங்கம் என்பதுதான் இதன் அர்த்தம்.

4. பொதுவாக '916', '22' கேரட் என்ற குறியீடுகள் '90 டச்' வரையுள்ள தங்க நகைகளைக் குறிக்கும் அடையாள வார்த்தை. '916 கே.டி.எம்', '916 ஹால்மார்க்' என்ற குறியீடுகள் '92 டச்' தரத்தைக் குறிக்கும் அடையாள வார்த்தை. '92 டச்'தான் நகைகளுக்கான உச்சபட்ச தரம்!

5. 'கே.டி.எம்' நகைகள் என்பது, செம்புக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிற ஒரு வகை பொடியைக் குறிக்கும் சொல். இந்த 'கே.டி.எம்' பொடியை பயன்படுத்தி நகையை வார்க்கும்போது, அதன் பெரும் பகுதி காற்றில் கரைந்து விடுவதால், அது நகையுடன் குறைந்த அளவே கலக்கும்; அதனால் ஒரு நகையில் தங்கத்தின் சதவிகிதம் அதிக அளவு இருக்கும் என்பதுதான் இதன் சிறப்பு.

6. 'ஹால்மார்க்' எனப்படுவது தரத்தை நிர்ணயிக்கும் முத்திரை! இந்த முத்திரை, ஒரு நகையில் '92 டச்' தூய தங்கம் இருக்கிறது என்பதை உறுதிசெய்யும்.

7. பொதுவாக, தங்க நகைகளில் இந்த '22 கேரட்', '916', 'ஹால்மார்க் முத்திரை' போன்றவை பொறிக்கப்பட்டிருக்கும். அவற்றை வைத்துதான் நகையின் தரத்தைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் வாங்கும்போது இந்த அடையாளங்கள் குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்த்து விடுங்கள்.

8. '22 கேரட்', 'கே.டி.எம்' போன்ற குறியீட்டு வார்த்தைகளை, நகை தயாரிக்கும் யாரும் பொறித்து விடமுடியும் என்பதால், ஜாக்கிரதை.

9. 'ஹால்மார்க்' முத்திரையை நகை தயாரிப்பவர்களோ, அந்நியர்களோ பொறித்துவிட முடியாது. 'ஹால்மார்க்' என்பது அரசு நிறுவனம் தரும் முத்திரை என்பதால், அந்த முத்திரையுள்ள நகைகள் நம்பிக்கைக்கு உரியன என்கிறார்கள், இத்துறையில் உள்ள நிபுணர்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | Best Buy Printable Coupons